தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில நாட்களுக்கு இந்தியன் 2 சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.
இந்த விபத்தில் ஷங்கர், கமல் நூலிழையில் உயிர் தப்பினர்.
இனிமேல் சினிமா தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் (காப்பீடு) செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்தன.
இதனை வெறும் பேச்சாக இல்லாமல் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது ‘மாநாடு’ படக்குழு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
சுரேஷ் காமாட்சி தன் பட தொழிலாளர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் பிரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.