‘இந்தியன் 2’ படத்தை அடுத்து ‘கேம் சேஞ்சர்’ ஷூட்டிங்கிலும் பிரச்சனை.; ஷங்கருக்கு வந்த சங்கடங்கள்

‘இந்தியன் 2’ படத்தை அடுத்து ‘கேம் சேஞ்சர்’ ஷூட்டிங்கிலும் பிரச்சனை.; ஷங்கருக்கு வந்த சங்கடங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம்சரண்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘ஆர் ஆர் ஆர்’ படம் ராம்சரணுக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இவர் தற்போது ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது.

கடந்த வாரம் இப்படத்தின் முக்கியமான சண்டை காட்சி ஒன்று படமாக்கினர்.

இந்த நிலையில், சண்டை காட்சியின் திடீரென்று ஏற்பட்ட விபத்தில் ராம்சரண் முகத்தில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ராம்சரண் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ராம்சரணை 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் தகவல்…

‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பிற்கு ராம்சரணின் கால்ஷீட் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு ரத்து செய்து இருப்பதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வருகின்றன.. கொரோனா லாக்டவுன் பிரச்சனை.. கமலின் அரசியல் பிரவேசம்.. தேர்தல் பிரச்சாரம்.. பிக் பாஸ் நிகழ்ச்சி.. கமலுக்கு ஆபரேஷன்.. இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் 2 பேர் பலி்.. உள்ளிட்ட பல காரணங்களால் தடைப்பட்டது. எனவேதான் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்க முடிவு செய்திருந்தார் ஷங்கர். தற்போது அங்கேயும் அவருக்கு பிரச்சனைகள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Shankar facing problems at Indian 2 and Game changer shoot

‘சப்தம்’ படத்தில் ‘ஈரம்’ படக்குழு.; சிம்ரன் லைலா லட்சுமிமேனன் கூட்டணி

‘சப்தம்’ படத்தில் ‘ஈரம்’ படக்குழு.; சிம்ரன் லைலா லட்சுமிமேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”.

திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

‘ஈரம்’ படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்ப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் சப்தம் படத்தின் போஸ்டர், டீஸர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Sabdham movie shooting updates

BREAKING லியோ இசை விழா ரத்து.; அரசியல்.? ரஜினிக்கு விஜய் பதிலடி.. ரசிகர்கள் ஏமாற்றம்

BREAKING லியோ இசை விழா ரத்து.; அரசியல்.? ரஜினிக்கு விஜய் பதிலடி.. ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம்மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற நான் ரெடி என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். இந்த பாடல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி பல சாதனைகளை உடைத்து வருகிறது. இரண்டாவது பாடல் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகள் டூப்ளிகேட் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த டிக்கெட்டுகள் ரூ 5000 6000 7000 என விற்கப்பட்டும் வருகிறது.

லியோ

மேலும் விஜய்யை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்றால் அதற்கான ஒரு டிக்கெட் ரூபாய் 10000 எனவும் பேசிய ஆடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்களுடைய எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளனர்.

அதில் நாங்கள் லியோ இசை விழாவில் நடத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் தகவல்…

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது கழுகு காக்கா கதையை கூறியிருந்தார். அதில் காக்கா விஜய் தான் என பலர் கருத்து கூறி வந்தனர்.

எனவே ‘லியோ’ விழாவில் ரஜினிக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லியோ

Vijay fans shocked Leo audio launch cancelled

என் முதல் படம் ‘சித்தா’.. கமல் – மணிரத்னம் பாராட்டினாங்க – சித்தார்த்

என் முதல் படம் ‘சித்தா’.. கமல் – மணிரத்னம் பாராட்டினாங்க – சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’.

செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

நடிகர் சித்தார்த் பேசியதாவது…

“இது என்னுடைய முதல் படம். முதல் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக நான் ஒரு படம் தயாரிக்கும் பொழுது எந்தவித சமரசமும் இல்லாமல் உண்மையை மட்டுமே படமாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அப்படியான ஒரு உணர்வை ‘சித்தா’ கொடுத்திருக்கிறது. படத்தை நம்பிய அருணுக்கும் நன்றி. இந்த படத்தை ஏன் என்னுடைய அறிமுகப்படம் என்று சொல்கிறேன் என்றால், மக்களுடைய உண்மையான வாழ்க்கையை அப்படியே எடுத்துள்ளோம்.

இதன் ப்ரீ- புரொடக்ஷன் வேலைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்தோம். படம் எனக்கு திருப்தியாக வந்துள்ளது. நான், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உட்பட சில பேரைத் தவிர படத்திலுள்ள அனைவருமே புதுமுகம்.

இந்த முடிவையும் முன்கூட்டியே எடுத்தோம். படத்தில் குழந்தைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள நிமிஷாவுக்கும் வாழ்த்துகள். அஞ்சலி நாயரும் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தங்களுடைய வேலையை பாராட்டும்படி செய்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் பழனியில் லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்டது.

இந்தப் படம் ஒரு எமோஷனல் திரில்லர். படத்தின் டைட்டில் பாடல் கொடுத்த சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் தான் வெளியிடுகிறது. படத்தை முதலில் பார்த்தவர் உதய் தான்.

இந்தப் படம் திரையரங்குகளில் பார்ப்பதற்காகவே உருவாக்கினேன். உங்கள் குடும்பத்துடன் நிச்சயம் இதைப் பார்க்கலாம். ஒரு குழந்தை காணாமல் போகும்போது குடும்பம், காவல் நிலையம், பள்ளி என இந்த சுற்று வட்டாரங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை நாம் எல்லோரும் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

அன்போடும் அக்கறையோடும் இந்த படத்தை எடுத்துள்ளோம். என் குரு மணிரத்தினம், கமல் சாரிடம் படத்தை போட்டு காண்பித்தேன். மிகவும் பாசிட்டிவாக சொன்னார்கள். அதுவே எனக்கு பெரிய விருது கிடைத்தது போல தான்! அடுத்து ஷங்கர் சாரிடமும் ரஹ்மான் சாரிடமும் படத்தை காண்பிப்பேன். நீங்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

Kamal Maniratnam praises Chithha says Siddharth

‘சித்தா’ படத்தை தூக்கி சுமந்தது சித்தார்த் தான்..; ஆனந்தத்தில் அருண்

‘சித்தா’ படத்தை தூக்கி சுமந்தது சித்தார்த் தான்..; ஆனந்தத்தில் அருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’.

செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக ஒலி வடிவமைப்பாளர் விவேக் தணிகாசலம் பேசியதாவது…

“சித்தார்த் சாருக்கும் அருண் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன். என்னை நம்பி முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார்கள். அதனால்தான் இவ்வளவு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த வாய்ப்புக்கு நன்றி”.

கலை இயக்குநர் சி.எஸ். பாலச்சந்திரன்…

“இந்த வாய்ப்பு கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. இயக்குநர் அருணுடன் எனக்கு இது மூன்றாவது படம். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கும் வரப்போகும் படங்களில் வாய்ப்பு அளிக்க போவதற்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்…

“இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் அருண் தந்த வாய்ப்பு இது. என்னை நம்பிய தயாரிப்பாளர் சித்தார்த்துக்கும் நன்றி”

இயக்குநர் அருண்…

“நானும் சித்தார்த்தும் சேர்ந்துதான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். படம் ஆரம்பிக்கும் போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே நம்பிக்கைதான் இப்போது வரை இருக்கிறது. என்னைவிட ஒரு நடிகராக தயாரிப்பாளராக இந்தப் படத்தைத் தூக்கி சுமந்தது சித்தார்த்தான்.

எந்த தடங்கலும் இல்லாமல் என்னை முழு சுதந்திரத்தோடு படம் செய்ய வைத்தார்கள். இந்தப் படம் இந்தளவு நன்றாக வர துணையிருந்த தொழில்நுட்பக்குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் முதல் படம் போல நினைத்து நிறைய கற்றுக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

Director SU Arunkumar speech at Chithha press meet

கிரிக்கெட்டர் மலிங்கா.. வின்டேஜ் ரஜினி.; சந்தோஷத்தில் ‘லால் சலாம்’ நடிகர் & காஸ்ட்டியூமர் சத்யா

கிரிக்கெட்டர் மலிங்கா.. வின்டேஜ் ரஜினி.; சந்தோஷத்தில் ‘லால் சலாம்’ நடிகர் & காஸ்ட்டியூமர் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா தான் அவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் ‘லால் சலாம்’ படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது.

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி உள்ளார். ராஜா ராணி, இரும்புத்திரை, தெறி, பைரவா, ரஜினி முருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளதுடன் சமீபத்தில் டைம் டிராவலை மையப்படுத்தி வெளியான மார்க் ஆண்டனி படத்தின் சவாலான ஆடை வடிவமைப்பையும் அசத்தலாக செய்து முடித்தவர் இந்த சத்யா தான் என்பது இன்னொரு ஆச்சரியம்.

தனது புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ள நிலையில், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக திடீரென வைரலானது குறித்தும் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார் சத்யா.

“லால் சலாம் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி மூலமாகத்தான் அந்த படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆடை வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட 22 நாட்கள் இந்த படத்திற்காக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

சிலபேர் வெளியில் ஒரு மாதிரியாகவும் கேரவனுக்குள் ஒரு மாதிரியாகவும் தங்கள் குணாதிசயத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இத்தனை நாள் நான் பார்த்த மனிதர்களில் ரஜினி சார் உள்ளேயும் வெளியேயும் எப்போதுமே ஒரே மாதிரியான மனிதர்தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எப்படி ஒருவர் தன்மையான மனிதனாக இருப்பது என்பதற்கு அவரைவிட வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இந்த படத்தில் அவருக்கான ஆடைகளை வடிவமைக்கும் பொறுப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பொறுத்தவரை குறை நிறை எதுவாக இருந்தாலும் நம்மிடம் வெளிப்படையாக பேசி விடுவார். ஒரு விஷயத்தை சரியாக செய்து விட்டால் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்ப நம்மை பாராட்டுவார்.

மலிங்கா

ஒருமுறை சிரமமான விஷயம் ஒன்றை ரொம்பவே எளிதாக செய்து முடித்தேன் அதேசமயம் இன்னொரு விஷயத்தில் இரண்டு முறை முயன்றும் சரிவரவில்லை.. அப்போது என்னிடம் அவர், என்ன சத்யா ரொம்ப கஷ்டமான விஷயத்தை எளிதாக செய்து விட்டீர்கள்.. எளிதான ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சிரமப்படுகிறீர்களே என்று கூறினார்..

அவர் அப்படி சொல்வது கூட நம் மீதான அக்கறை, அன்புடன் தான் இருக்கும்.. இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் சார் என்று அவரிடமே கேட்டு அதை சரியாக செய்து முடித்தேன்..

அதில் அவருக்கும் ரொம்பவே சந்தோசம். நாம் சொல்லும் ஒரு விஷயம் சரியாக இருந்தால் எந்த ஈகோவும் பார்க்காமல் அதை மனதார ஏற்றுக்கொள்வார். படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும்போது என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ‘சும்மா கலக்குறீங்களே’ என்று ஜாலியாக கூறி உற்சாகப்படுத்துவார்.

கிட்டத்தட்ட 170 படங்கள் வரை நடித்துவிட்ட அவர் இத்தனை படங்களில் அணியாத ஆடை வகைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு படம் புதிது புதிதாக பலவிதமான ஆடைகளை அவர் அணிந்து நடித்துள்ளார்.

அதனால் இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியும் அதேசமயம் இதுவரை அவர் அணிந்த உடைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாகவும் ஆடைகளை வடிவமைத்துள்ளேன். இந்த மாதிரி ஒரு ரஜினியை பார்த்து ரொம்ப நாளாச்சு என்று ரசிகர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் படும் வகையில் வின்டேஜ் ரஜினியை கண்முன் நிறுத்தும் விதமாக லால் சலாம் படத்தில் அவரது ஆடைகள் இருக்கும்.

இந்த படத்திற்கு பிறகும் மீண்டும் அடுத்ததாக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவேனா இல்லையா என்பது தெரியாது.

அதனால் இந்த படத்தையே அவருடன் பணியாற்ற எனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக நினைத்து, எந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வேலை செய்துள்ளேன் என நினைக்கிறேன். படம் வெளியான பிறகு அவர் அணிந்துள்ள ஆடைகளை பார்த்து அதேபோல யாரேனும் ஒருவராவது விரும்பி அணிந்தார்கள் என்றால் அதுவே எனது வேலைக்கு கிடைத்த கவுரவமாக நினைபேன்.

ரஜினி சாருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரும் என்னை இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா என்றே நினைத்துக் கொண்டார்கள். அது ஒருவகையில் எனக்கு பெருமை தான்.

அதனால் மலிங்கா போன்ற தோற்றத்திலேயே என்னை மறு உருவாக்கம் செய்து ஒரு லுக் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டேன்.. ஏனென்றால் தற்போது நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். ஒருவேளை நாளை மலிங்காவின் பயோபிக் பற்றி படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த ஆடிசனுக்கு முதல் ஆளாக சென்று நிற்பேன்” என்று கூறுகிறார் நம்பிக்கையுடன்.

மலிங்கா

Costume Designer Sathya is happy with Rajini words

More Articles
Follows