தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி 1 & பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார்.
அல்லூரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை (1920) வாழ்க்கையை முன்வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்து வருகின்றனர்.
ராஜமெளலி & ஜூனியர் என்டிஆர் இதற்கு முன்பு 3 படங்களில் இணைந்துள்ளனர்.
ராஜமெளலி & ராம் சரண் 2வது முறையாக இணைந்துள்ளனர்.
அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கின்றனர்.
கீரவாணி இசையமைக்க கே.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் இந்த படம் அக்டோபர் 13 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அறவித்துள்ளனர்.
Lyca acquired TN theatrical rights of RRR movie