எல்கேஜி பட இயக்குனர் பிரபுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

New Projectஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்த படம் எல்கேஜி.

இப்படத்தை அறிமுக இயக்குனர் கேஆர் பிரபு இயக்க, நாயகியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் சக்சஸ் மீட்டையும் அண்மையில் நடத்தினார்கள்.

இந்நிலையில் இதுநாள் வரையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த டைரக்டருக்கு ஒரு காரை பரிசளித்துள்ளார் படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இது பற்றி கேஆர். பிரபு கூறியதாவது… “எனக்கு பைக்கில் செல்வது பிடிக்கும்.

ஆனால் தயாரிப்பாளர் இப்போது கார் வாங்கி கொடுத்துள்ளார்.

எல்கேஜி படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கொடுத்த மக்கள், பாராட்டி எழுதிய பத்திரிகையாளர்கள், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் எனது நன்றி,” என கூறினார்.

Overall Rating : Not available

Latest Post