பாக்யராஜ் பட டைட்டில்… ஹிந்தி பட ரீமேக்..; ஹாட்ரிக் அடிப்பாரா ஆர் ஜே பாலாஜி..?!

பாக்யராஜ் பட டைட்டில்… ஹிந்தி பட ரீமேக்..; ஹாட்ரிக் அடிப்பாரா ஆர் ஜே பாலாஜி..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த, எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய 2 படங்களும் அவருக்கு நல்ல பெயரையும் தயாரிப்பாளருக்கு நல்ல வசூலையும் கொடுத்துள்ளது.

எனவே மீண்டும் ஹீரோவாகவே வேஷம் கட்ட வருகிறார் ஆர்ஜே பாலாஜி.

இந்த முறை சூப்பர் ஹிட்டான ஹிந்தி படத்தை ரீமேக் செய்ய நினைக்கிறாராம்.

2018ல் அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கத்தில் வெளியான ‘பாதாய் ஹோ’ என்ற காமெடி படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

இந்த படத்திற்கு 1994ல் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தலைப்பை வைக்க முடிவெடுத்துள்ளார்.

இந்த தலைப்பை கொடுக்க பாக்யராஜ் ஒத்துக் கொள்வாரா..?

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த, எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டும் வெற்றிப் பெற்றது. 3வது படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடிப்பாரா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RJ Balaji’s next is a superhit hindi remake?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி..; உடல் நோய்த் தடுப்பூசி உடனடி.. ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி..; உடல் நோய்த் தடுப்பூசி உடனடி.. ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

COVID 19 என்ற கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடும் பணி ஏற்கெனவே அறிவித்தப்படி நேற்று மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

அதன்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

இவரைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் போட்டு கொண்டனர்.

தமிழகத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தடுப்பூசி போட்டு கொண்டார்.

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் போட்டுக் கொண்டதாக போட்டோ போட்டு தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

PM modi and Kamal Haasan taking corona vaccine

நாயகியின் உயிரை காப்பாற்ற நாயகனுடன் கை கோர்க்கும் ‘டெடி’

நாயகியின் உயிரை காப்பாற்ற நாயகனுடன் கை கோர்க்கும் ‘டெடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Teddy (1)தமிழ் சினிமாவில் சிறந்த மற்றும் புதுமையான திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “டெடி” . டிஸ்னி + ஹாட்ஸ்டார் மல்டிப்ளெக்ஸ் தளத்தில் ப்ரத்யேகமாக வெளியாகும் தமிழ் மொழி திரைப்படமாகும்.

“டெடி” டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.

‘டெடி’ படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், “டெடி” படத்திலிருந்து முதல் தனிப்பாடலாக ‘என் இனிய தனிமையே’ பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆர்யா நடித்திருக்கும் இந்த பாடல் உங்கள் தனிமையை போக்கும் விருந்தாக இருக்கும். தனிமையின் எதார்த்தத்தை கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின் வியக்க வைக்கும் இசையில், சித் ஸ்ரீராம் தனது அழகான குரலில் இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடலின் மயக்கும் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

‘டெடி’ படத்தில் நிஜத்தில் காதல் தம்பதிகளாக உலா வரும் ஆர்யா மற்றும் சயீஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அவர்களுடைய காதலின் எழில்மிகு தருணங்கள் அட்டகாசமான வகையில் திரையிலும் உயிர்பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குநர்களில் ஒருவரான சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் K.E.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “டெடி” படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.

பாடலைப் பற்றி இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது…

” என் இனிய தனிமையே” பாடல் மாடர்ன் உலகின் பாடல். இளைஞர்களின் இதயதுடிப்பை பிரதிபலிக்கும் அழகான பாடல். மதன் கார்க்கி எழுதிய அழகான பாடல் வரிகளை, சித் ஸ்ரீராம் அற்புதமாக பாடியுள்ளார். இளைஞர்கள் விரும்பும் நட்சத்திர நடிகர் ஆர்யா நடித்திருப்பதால், “டெடி” பார்வையாளர்களால் விரும்பப்படுவது உறுதி என்றார்.

பாடல் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது…,

” என் இனிய தனிமையே” ஒரு அருமையான பாடல், குறிப்பாக தனிமையை நேசிக்கும், தன்னை நேசிக்கும், தற்காலத்திய சிங்கிள் உலகத்தினருக்கான பாடல். இசையமைப்பாளர் டி. இமான், “டெடி” படத்திற்கு வெகு சிறப்பான இசையை வழங்கியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களை மயக்கும் அதே நேரத்தில் உத்வேகம் தரும் ஆற்றலும் கொண்டுள்ளது. என்னைப் போலவே ரசிகர்களும் பாடலையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். ” என்றார்.

கதை சுருக்கம்:

ஸ்ரீ வித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுல்லா பயணத்தின் போது துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்து ஒரு மருத்துவமனையில் தனியாக இருக்கிறார்.

இந்த மருத்துவமனையின் பணிபுரியும் சில கெட்ட குணம் கொண்ட மருத்துவர்கள், உதவியற்று, தனியாக இருக்கும் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள, மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கின்றனர்.

கரடி பொம்மையாக வாழும் பேச்சுதிறன் கொண்ட “டெடி” ஸ்ரீ வித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறது.

ஆனால் அது தனியாக இதைச் செய்ய முடியாது என்பதை அறியும். ஒரு நாள், சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை “டெடி” காண்கிறது.

மேலும் ஶ்ரீ வித்யா விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி சிவாவிடம் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீ வித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம்.

ஆர்யா-சயீஷா நடிப்பில் ஃபேண்டஸி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ‘டெடி’ படத்தின் உலகளாவிய பிரீமியரை அனைவரும் கண்டுகளியுங்கள்.

இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக 12 மார்ச் 2021 அன்று வெளியிடப்படுகிறது.

Everything you need to know about Teddy

கௌதம் & சேரன் இணையும் படத்திற்கு அழகான பெயர் வைத்த நந்தா பெரியசாமி

கௌதம் & சேரன் இணையும் படத்திற்கு அழகான பெயர் வைத்த நந்தா பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன், சிநேகன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார்.

நாயகியாக சிவாத்மிகா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ரங்கநாதன் தயாரித்து வருகிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பொர்ரா பாலபரணி, இசையமைப்பாளராக சித்துகுமார், கலை இயக்குநராக சகு, எடிட்டராக ஆர்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்துக்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ எனப் பெயரிட்டு, பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

ஒரே கட்டமாக இப்பட படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

Gautham Karthik’s next film title is revealed

‘சூரரைப் போற்று’ அபர்ணாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

‘சூரரைப் போற்று’ அபர்ணாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யாத்திரை தொடரும்’ என்ற மலையாள படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அபர்ணா பாலமுரளி.

2016-ம் ஆண்டில் வெளியான “மகேஷிண்டே ப்ரதிகாரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

தமிழில் சர்வம் தாள மையம் என்ற படத்தை அடுத்து சூர்யாவுடன் இவர் நடித்த ‘சூரரைப் போற்று’ படம் மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது அபர்ணா பாலமுரளி ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

ஆக்ஷன் த்ரில்லரான இந்த படத்தை ராசு ரஞ்சித் இயக்க சத்யா இசையமைத்துள்ளார். கெவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை லிஜோ மோல் ஜோஸும் என்பவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நாளை மார்ச் 2ல் ‘வாழையடி வாழையா’ என்ற பாடல் வெளியாகவுள்ளது.

இந்த படம் மார்ச் 12ல் ரிலீசாகிறது என அறிவித்துள்ளனர்.

Actress Aparna Bala Murali next film is ready for release

வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்று
‘சரவணா ஸ்டோர்ஸ்’.

இந்த நிறுவன விளம்பரங்களில் விதவிதமாக நடித்து மக்களை வியக்க வைத்தவர் சரவணன்.

இவர் தற்போது திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத இப்படம் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

ஜேடி ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கீத்திகா திவாரி நாயகியாக நடிக்கிறார்.

ஏற்கெனவே, பாடல் காட்சிகளுக்கே சில பல கோடி செலவு செய்து படமாக்கியதாக.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ஓர் ஆக்ஷன் காட்சியில் வில்லன் நடிகர் பெசன்ட் நகர் ரவியை அவர் தெறிக்க விடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Saravana Stores Saravanan Arul is in full form

Legend Saravanan (2)

More Articles
Follows