ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி-யில் இணைந்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

RJ Balaji and Nanjil Sampathரேடியோவில் ஆர்.ஜே. வாக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

சில தினங்களாக இவர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

அது அரசியல் கட்சி இல்லை ஏதாவது பட அறிவிப்பாக இருக்கும் எனவும் சிலர் கருத்து கூறி வந்தனர்.

அதன்படி அவர் கதை எழுதி நாயகனாக நடிக்கும் எல்கேஜி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த எல்கேஜி என்ற தலைப்பில் கட்சி கொடியை போன்று வண்ணங்களும் ஜல்லிக்கட்டு காளை படமும் இடம் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் பேசப்போகும் இப்படத்தில் அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத் நடிக்க, படத்தின் நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

ஒரு டீ கடை வைத்து தற்போது நாட்டின் முதல்வராக உயர்ந்துள்ள நரேந்திர மோடி கதையை சித்தரிக்கும் வகையில், ஆர்.ஜே.பாலாஜி ஒரு டீ கடையில் இருப்பதும், அதன் பின்னர் பாராளுமன்ற வாசலில் அவர் நிற்பதும் போன்ற படங்களை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Overall Rating : Not available

Latest Post