அவரை நம்பினேன் என்னை ஏமாற்றிட்டார்..; பாஜகவில் இருந்து விலகிய கௌதமி கடிதம்

அவரை நம்பினேன் என்னை ஏமாற்றிட்டார்..; பாஜகவில் இருந்து விலகிய கௌதமி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி – பிரபு இணைந்து நடித்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கௌதமி.

அதன் பின்னர் கமல், பிரபு, சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

பின்னர் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலானார்.

ஒரு கட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் தன் மகளின் எதிர்காலத்திற்காக கமல்ஹாசனை விட்டு பிரிகிறேன் என அறிவித்தார் கௌதமி.

அதன் பின்னர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டி பாஜக கட்சியில் இணைந்து இருந்தார் கௌதமி.

இந்த நிலையில் திடீரென பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் கௌதமி.

அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:..

“கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். தேசத்தின் வளர்ச்சியில் என்னுடைய பங்கை அளிக்க 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் அக்கட்சியில் இணைந்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்தாலும், அந்த பணிக்கு நான் கவுரவம் செய்து வந்தேன். இன்று வரை என்னுடைய வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத இன்னல்கள் உள்ளன.

கட்சியிடமிருந்தோ அதன் தலைவர்களிடமிருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில், என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறித்து எனக்கு தெரியவந்துள்ளது.

என்னுடைய 17 வயதிலிருந்து நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சினிமா, தொலைகாட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் 37 ஆண்டுகாலம் இருந்துள்ளேன்.

என்னுடைய இந்த வயதில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், என்னுடைய மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவும் நான் என்னுடைய வாழ்க்கை முழுக்க உழைத்துள்ளேன். நானும் என் மகளும் பாதுகாப்பாக செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

ஆனால் சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார்.

என்னுடைய பலவீனம் மற்றும் தனிமையை பயன்படுத்தி அழகப்பன் என்னை 20 ஆண்டுகளுக்கு முன்பு அணுகினார். அப்போது நான் என்னுடைய இரு பெற்றோரையும் இழந்த ஆதரவற்றவளாக மட்டுமின்றி, ஒரு கைக்குழந்தையை வைத்திருந்த தாயாகவும் இருந்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் ஒரு அக்கறையான மூத்த நபர் போல அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் நுழைத்துக் கொண்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சூழலில் நான் என்னுடைய சில நிலங்களை விற்பதற்கான ஆவணங்கள் தொடர்பாக அவரை நம்பினேன்.

ஆனால் அவர் என்னை ஏமாற்றியது குறித்து சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன்.

நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம், சொத்து, ஆவணங்களை மீட்கும்விதமாக. எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் நம் நாட்டின் சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றினேன்.

என்னுடைய முதலமைச்சர், என்னுடைய காவல்துறை, என்னுடைய நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து பல புகார்களையும் அளித்தேன். ஆனால் அந்த நடைமுறை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதை அறிந்தேன்.

2021 தமிழக சட்டசபை தேர்தலின்போது, பாஜக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்களிக்கப்பட்டது. ராஜபாளையம் மக்களுக்காகவும், பாஜகவை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்தவும் வேண்டியும் நான் என்னை அர்ப்பணித்து பணியாற்றினேன்.

எனினும், அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் ரத்தானது. ஆனாலும், நான் கட்சிக்கான என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்தேன். எனினும் 25 ஆண்டுகாலம் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை என்பதையும், அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன்.

ஆனால் இப்போதும் என்னுடைய முதலமைச்சர், என் காவல்துறை, என் நீதித்துறை ஆகியோர் எனக்கான நீதியை எனக்கு பெற்று தருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மிகப்பெரிய வலி மற்றும் வேதனையுடனும், அதே நேரம் கடும் உறுதியுடனும் இந்த ராஜினாமா கடிதத்தை எழுதுகிறேன்”. இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார் கௌதமி.

கௌதமி

Actress Gauthami quits from BJP party

‘லியோ’ 4 நாட்களில் 400 கோடி வசூல்.; விஜய்யுடன் ஆடியது அதிர்ஷ்டம்.; மனம் திறந்த மடோனா

‘லியோ’ 4 நாட்களில் 400 கோடி வசூல்.; விஜய்யுடன் ஆடியது அதிர்ஷ்டம்.; மனம் திறந்த மடோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசானது. ரிலீசான நான்கு நாட்களில் உலகளவில் ரூ 400 கோடியை வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விஜய் பாடி ஆடிய நான் ரெடி என்ற பாடலுக்கு விஜந்யுடன் நடனம் ஆடிய மடோனா செபஸ்டின் பாடல் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது…

விஜய்யுடன் நடித்ததை பெரும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவர் அதிகம் பேச மாட்டார். அமைதியானவர்.

எங்கள் பாடல் காட்சி மூன்று நாட்களில் படமாக்கப்பட்டது. அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் என் கேரக்டரை பற்றி தெரிவித்தார்.

இந்த படத்திற்காக ஆக்ஷன் காட்சிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அன்பறிவு மாஸ்டர்கள் பயிற்சி கொடுத்தனர்.

நான் விஜய்யுடன் நடிப்பது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. என் நண்பர்களுக்கு கூட தெரியாது.. என் அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும்” என தெரிவித்துள்ளார் நடிகை மடோனா.

Madonna shares her experience with Vijay in Leo

இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.; மோனிகா சொன்னது பொய் – குட்டி பத்மினி

இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.; மோனிகா சொன்னது பொய் – குட்டி பத்மினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் ‘லியோ’ படத்தின் வசூல் பற்றி பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வசூல் விவரங்களை தயாரிப்பாளர் அறிவித்தாலும் 4 நாட்களில் 400 கோடி எப்படி வசூல்? ஆகும் என சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இமானுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ற பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் இமானுக்கு நெருங்கிய நண்பர் அவர் நல்லது செய்யதான் வந்தார் என இமானின் முதல் மனைவி மோனிகா சமீபத்தில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் – இமான் மோதல் குறித்து நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளதாவது… இமானின் முதல் மனைவி மோனிகா சொன்னது அனைத்தும் பொய்.. ஏற்கனவே பெண் பார்த்துவிட்டு தன்னை விவாகரத்து செய்தார் இமான் எனக் கூறியிருந்தார். அப்படியெல்லாம் இல்லை.

இப்போது வரை மோனிகாவுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் செலவை இமான் கவனித்து வருகிறார். மேலும் மாதா மாதம் சரியாக ஜீவனாம்சம் கொடுத்து வருகிறார்.

விவகாரத்திற்கு பின் தான் அந்த அமீலியா என்ற பெண்ணை நாங்கள் இமானுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். பின்பு அவர்கள் இருவரும் பழகிய பின்னர் திருமணம் செய்து கொண்டனர்” என குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

Actress Kutty Padmini reveals about Sivakarthikeyan and Imman issue

சினிமாவை விட்டு விலகும் நடிகர் அமீர்கான் சென்னையில் குடியேறுகிறார்.!

சினிமாவை விட்டு விலகும் நடிகர் அமீர்கான் சென்னையில் குடியேறுகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகர் அமீர்கான். இவர் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பதில் கைதேர்ந்தவர்.

சூர்யா நடித்து தமிழில் சூப்பர்ஹிட் ஆன ‘கஜினி’ படத்தை இயக்கியிருந்தார் ஏ ஆர் முருகதாஸ். இவர் ஹிந்தியில் அமீர்கானை வைத்து தான் கஜினி ரீமேக்கை எடுத்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

35:ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கும் அமீர்கான் தற்போது சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு காரணம் அமீர்கானின் தாயார் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே தன் தாயை கவனித்துக் கொள்ள தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க உள்ளார் அமீர்கான்.

சினிமாவில் பிஸியாக இருந்த காரணத்தினால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை.

எனவே குடும்பத்திற்காக தற்போது சினிமாவை ஒதுக்கி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார் அமீர்கான்.

தன் தாய் மறலறும் ஜுனைத், ஈரா மற்றும் ஆசாத் ஆகிய 3 குழந்தைகளை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறாராம்.

அமீர்கான்

Aamir Khan quit Cinema and going to settle in TN

நடிகர் அஜித் வீட்டின் காம்பௌண்ட் சுவரை இடித்தது தமிழக அரசு.; ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித் வீட்டின் காம்பௌண்ட் சுவரை இடித்தது தமிழக அரசு.; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் நடிகர் அஜித்குமார்.

சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இவர் பிரியாணி சமைப்பது, உலகம் முழுக்க பைக் டூர் செல்வது, துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெறுவது, விமானம் ஓட்டுவது, புகைப்படம் எடுப்பது என பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டுபவர்.

இவரது பட பூஜை.. இசை வெளியீட்டு விழா என எதிலும் இவர் கலந்து கொள்ளாதவர். ஒரு பக்கம் இது சர்ச்சையை கிளப்பினாலும் மற்றொருபுறம் இதனையே அவரை போல் அஜித் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஆனாலும் ரசிகர் மன்றங்களை கலைத்தவர் நடிகர் அஜித். மேலும் தன்னை தல அஜித் என்று அழைக்க வேண்டாம்.. பெயரைச் சொல்லி அழைத்தால் போதும் என ஒரு அறிக்கையும்

இதனால் நாளுக்கு நாள் இவருக்கான மார்க்கெட் வேல்யூ அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் பட்டாளமும் திரண்டு வருகிறது.

பலர் இவரை அரசியலுக்கு அழைக்க நினைத்தாலும் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துபவர் நடிகர் அஜித்.

இந்த நிலையில் இவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது.. சென்னை சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சென்னை ஈஞ்சம்பாக்கம் அஜித் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Tamilnadu Govt destroyed Ajith home compound wall

சேரன் இயக்கத்தில் இணையும் கிச்சா சுதீப் & ஸ்ரீநிதி ஷெட்டி.; தயாரிப்பாளர் யார்.?

சேரன் இயக்கத்தில் இணையும் கிச்சா சுதீப் & ஸ்ரீநிதி ஷெட்டி.; தயாரிப்பாளர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என தரமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன்.

அதன் பின்னர் அவரே நடிகராகவும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் சேரன். அண்மையில் இவரது நடிப்பில் ‘தமிழ் குடிமகன்’ என்ற படம் வெளியாகி சாதி ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் இயக்குனராக தன் பழைய பாதையை தொடங்கி இருக்கிறார் டைரக்டர் சேரன்.

இவர் தற்போது இயக்கவுள்ள படத்தில் நாயகனாக கீச்சா சுதீப் நடிக்க நாயகியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

இந்த படத்தை தமிழ் சினிமாவில் பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மேலும் அப்டேட்டுகளுக்கு இணைந்திருங்கள் எங்களுடன்…

Srinidhi shetty is heroine to Actor Kitcha Sudeep in his next film for sathya Jothi films directed by cheran

More Articles
Follows