தாக்கத்தை ஏற்படுத்தும் நடிகர்களில் யோகிபாபு ஒருவர் – ஷான் ரோல்டன்

தாக்கத்தை ஏற்படுத்தும் நடிகர்களில் யோகிபாபு ஒருவர் – ஷான் ரோல்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, ரேச்சல், வீரா உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (29.08.2023) நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது…

“பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களில் யோகிபாபுவும் ஒருவர்.

‘லக்கிமேன்’ போன்ற கதைக்களம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. யோகிபாபு சார் நடிப்பை படத்தில் ரசித்துப் பார்த்தேன். இது மிகப்பெரிய விஷயம். மிகப்பெரிய புகழ் அவர் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

ஃபீல்குட் படங்களின் வரிசையில் கண்டிப்பாக ‘லக்கிமேன்’ இருக்கும். பாடல்களில் பாலாஜி நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என்னுடைய குழுவுக்கும் நன்றி. சக்திவேல் சார் படத்தை எடுத்தால் அதை பார்வையாளர்கள் நம்புகிறார்கள். அது மிகப்பெரிய பலம். உறுதுணையாக இருக்கும் சக்தி சாருக்கு நன்றி”.

எடிட்டர் மதன் பேசியதாவது…

“இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். நான் நிறைய ஹாரர், த்ரில்லர் படங்களில் வேலை செய்திருக்கிறேன். எனக்கு ஃபீல்குட் படங்களில் வேலை பார்க்க வேண்டும் என்பதும் விருப்பம். அது இந்தப் படம் மூலம் நிறைவேறி உள்ளது.

இயக்குநர் பாலாஜி சாருக்கும் நன்றி. மியூசிக் டைரக்டர் ஷானுக்கு நன்றி. என்னுடன் பேசி கலந்துதான் அவரும் வேலை செய்தார். எனக்கும் அது வேலையை எளிதாக்கி கொடுத்தது.

இந்தக் கதையில் யோகிபாபு சார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரைதான் இயக்குநரும் உறுதி செய்துள்ளார். வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். யார் பார்த்தாலும் இந்தப் படத்தை கனெக்ட் செய்து கொள்வார்கள். நடிகர்கள் எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி”.

Seanroldan appreciated yogibabus comedy journey

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு கிடைத்த முதல் ரசிகன் பற்றி தங்கர்பச்சான்

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு கிடைத்த முதல் ரசிகன் பற்றி தங்கர்பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கர்பச்சான் நடித்து இயக்கியுள்ள படம’கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், எஸ் ஏ சந்திரசேகர், யோகி பாபு, அதிதி பாலன், மகானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற சிறுமி நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 1ம் தேதிக்கு வருகிறது.

பொதுவாக ஒரு படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி விட்டால் அதை திரையுலக சம்பந்தப்பட்டவர்களுக்கு முதலில் திரையிட்டு காண்பிப்பார்கள்.

ஆனால் முதல் முறையாக பத்திரிக்கையாளர்களுக்கும் திரையிட்டு காட்டாமல் திரையுலக விஐபிகளுக்கும் திரையிட்டு காட்டாமல் முதன் முறையாக மக்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.

இது பற்றி அவர் கூறியதாவது..

“நான் மக்களை நம்பி படம் எடுக்கிறேன். மக்களுக்காக படம் எடுக்கிறேன்.

திரையுலகச் சார்ந்தவர்களோ மற்றவர்களோ குறை சொன்னால் எனக்கு கவலை இல்லை. மக்களின் கருத்தை நான் ஏற்கிறேன். எனவே தான் மக்களுக்கு என்னுடைய ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை திரையிட்டு காட்டினேன்.

படத்தை பார்த்த ஒவ்வொருவரும் கண்கலங்கி சென்றார்கள். தந்தையுடன் பேசாமலோ தந்தையை பிரிந்து வாழும் நபர்கள் என்னுடன் மனம் விட்டு பேசி பாராட்டி சென்றனர்.

கமலா தியேட்டர்ல திரையிட்டு காண்பித்த பின்னர் நான் புறப்பட தயாரான போது ஒரு பெரியவர் என் அருகே வந்து 200 ரூபாயை கொடுத்தார். இதை தயாரிப்பாளர்களிடம் கொடுங்கள் என் கண் கலங்கி பேசினார்.

இதுவே எனக்கு கிடைத்த பெரும் பாராட்டாக நினைக்கிறேன். அவரே ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு கிடைத்த முதல் ரசிகன் ஆவார். என்றார் தங்கர்பச்சான்.

Karumegangal Kalaigindrna got huge response at Public premiere show

காலாண்டு விடுமுறையில் பள்ளி காதலர்களை கவர வரும் ‘ரங்கோலி’

காலாண்டு விடுமுறையில் பள்ளி காதலர்களை கவர வரும் ‘ரங்கோலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’.

அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் சத்யா என்ற மாணவன் குடும்ப வற்புறுத்தலினால் தனியார் பள்ளிக்கு மாற்றப்படுகிறான்.

விருப்பமில்லாமல் செல்லும் சத்யா அந்த புதிய பள்ளியின் சூழலை எவ்வாறு எதிர்கொண்டான்.

அந்த தனியார் பள்ளிக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்த குடும்பம் எவ்வாறு அந்த பிரச்சனையை எதிர்கொண்டது என்பதையும் குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக இப்படம் பேசுகிறது.

தெய்வத்திருமகள், மாநகரம், நிமிர் மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா, சாய்ஸ்ரீ, அக்ஷயா, அமித் பார்கவ் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சென்னை சுற்றியுள்ள பகுதிகள் குறிப்பாக ராயபுரம், காசிமேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் என பல பகுதிகளில் படிப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

எட்டு தோட்டாக்கள், ஐரா, ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமுர்த்தி K.S இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு I.மருதநாயகம், படத்தொகுப்பு R.சத்யநாராயணன் மற்றும் கலை இயக்கம் ஆனந்த்மணி செய்துள்ளனர்.

‘ரங்கோலி’ திரைப்படம் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாக இருக்கிறது.

Hamaresh Prarthana starrer Rangoli release updates

விஜய் தோற்றத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற வெங்கட் பிரபு

விஜய் தோற்றத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

இந்நிலையில், விஜய், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையில் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் ‘தளபதி 68’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் 3 டி விஎப்எக்ஸ் தொழில் நுட்பத்தில் விஜய்யின் தோற்றம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பணிக்காக விஜய், வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay’s ‘Thalapathy 68’ team in Los Angeles Airport

வில்லனாக கமல் நடிக்கும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரூ 200 கோடி பட்ஜெட்.?!

வில்லனாக கமல் நடிக்கும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரூ 200 கோடி பட்ஜெட்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’.

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முதல்தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கிய அங்கமாக இருப்பதால் கிராபிக்ஸுக்கு காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடியை படக்குழு செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத தரத்துடன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு தீர்மானமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி 2898 ஏடி

A budget of Rs 200 crore for vfx graphics scenes in ‘kalki 2898 AD’ movie

‘அலங்கு’ அப்டேட் : கேரளா அரசியல்வாதிகள் – தமிழக பழங்குடியின இளைஞர்கள் மோதல்

‘அலங்கு’ அப்டேட் : கேரளா அரசியல்வாதிகள் – தமிழக பழங்குடியின இளைஞர்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகிய படம் ‘அலங்கு’.

கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் , சரத் அப்பானி, அவர்களுடன் காளிவெங்கட் உடன் குணாநிதி கதை நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது .

இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார் , இவர் உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர்.

மேலும் சமீபத்தில் வெற்றி பெற்ற குட்நைட் திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த செல்ஃபி திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது

அலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி , அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர் படக்குழு.

முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்தது .

CAST & CREW
நடிகர்கள்:

குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர்.

படக் குழுவினர் ;
எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல்
ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார்
இசை : அஜீஷ்
கலை இயக்குனர் : P.A. ஆனந்த்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
சண்டை பயிற்சி : தினேஷ் காசி
ஒலி வடிவம் : S.அழகியகூத்தன், சுரேன்.G
ஒலி கலவை : சுரேன்.G
நடனம் : அசார், தாஸ்தா
கூடுதல் கலை இயக்குனர் : தினேஷ் மோகன்
ஒப்பனை : ஷேக் பாஷா
விலங்கு பயிற்சி : செந்து மோகன்
ஆடை : T.பாண்டியன்
ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா மாக்ஸ்வெல் J
பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக்
கலரிஸ்ட் : ரங்கா
வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ
தயாரிப்பு நிர்வாகி : S.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு
தயாரிப்பு மேலாளர் : RK.சேது
உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட்
மக்கள் தொடர்பு : R.குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : தண்டோரா
விளம்பர ஸ்டில்ஸ் : R.மனோ, கமலேஷ் சத்தியன்
இயக்குனர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின் S, தேவதாஸ் ஜானகிராமன்
நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி
தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா
தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS

New action loaded Tamil film ALANGU updates

More Articles
Follows