78வது கோல்டன் க்ளோப் & அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதியான ‘சூரரைப் போற்று’

soorarai pottruபெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான ‘சூரரைப் போற்று’, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.

இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏர்டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர் கோபின்நாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் ஏழை வர்க்க மக்களுக்கு விமானப் பயணத்தை சாத்தியப்படுத்திய குறைந்த விலை விமான சேவையை ஏர் டெக்கான் தந்தது.

மேலும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான முதல் உயர் சிந்தனை திரைப்படம் சூரரைப் போற்று.

நவம்பர் 12, 2020 அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதிலிமிருக்கும் தமிழ் பேசும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மனமார இந்தப் படத்தை ரசித்து, ஆதரவு தந்தனர் ரசிகர்கள்.

ஐஎம்டிபி தளத்தில் 10 புள்ளிகளுக்கு 8.8 புள்ளிகள் என்கிற உயர்ந்த மதிப்பீடை ரசிகர்கள் தரும் அளவுக்கு அவர்களின் அன்பு இருந்தது.

சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது.

இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே.

பிப்ரவரி 2021ல், பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன.

இந்தத் தகவலை 2டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண் டியன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்..

Suriya’s Soorarai Pottru has been selected for screening at the Golden Globe Awards 2021

Overall Rating : Not available

Latest Post