தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
68-வது தேசிய விருது 2020-ஆம் ஆண்டிற்கான பட்டியல் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதற்கான விருது வழங்கும் விழா இன்று செப்டம்பர் 30 டெல்லியில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.
இதில்… ‘சூரரைப்போற்று’ படத்திற்கு 5 விருதுகளும், வசந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்கு 3 விருதுகளும், யோகிபாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு 2 விருதுகளும் வழங்கப்பட்டது.
நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் நாயகி அபர்ணா, இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோருக்கு தேசிய விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
தன் கணவரும் நடிகருமான சூர்யா முதன்முறையாக தேசிய விருது பெற்றதை மனைவி ஜோதிகா தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளளார். இது தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Soorarai Pottru team received 5 National award today at Delhi