சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!

சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவன் தயாரித்து நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு அனைவராலும் கவரப்பட்ட இயக்குனராக மாறினார் சுதா கொங்கரா.

இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கிய சூர்யாவின் ‘சூரரை போற்று’ படமும் வெளியாகி பெரியளவில் வெற்றிப் பெற்றது.

சூர்யா தயாரித்து இருந்த இந்த படம் 2020ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது ஹிந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்யவிருக்கிறாராம் சூர்யா.

இந்த படத்தை சுதா கொங்கராவே இயக்கவுள்ளார்.

ஆனால் சூர்யா வேடத்தில் 2.0 பட வில்லன் பாலிவுட் ஹீரோ அக்சய்குமார் நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Suriya and Sudha Kongara joins new film

கார்த்தி படத்தை இயக்கும் பேச்சுலர் டைரக்டர்.? ஹீரோயின் இவரா.?

கார்த்தி படத்தை இயக்கும் பேச்சுலர் டைரக்டர்.? ஹீரோயின் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தி கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

சர்தார் படத்தில் 2 வேடங்களில் நடித்துள்ளார். அதில் கார்த்தியின் வயதான வேடம் பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் என கூறப்பட்ட கார்த்தியின் ‘கைதி 2’ படம் குறித்து செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த பட தகவல்கள் வந்துள்ளன.

ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறாராம் கார்த்தி.

இதில் கார்த்திக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்த தொடங்கியுள்ளதாம்.

கார்த்தி மற்றும் சமந்தா இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Karthi next with Bachelor director sathish selvakumar

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால் (சத்தியமா அப்படின்னு நாங்க சொல்லல) இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக சினிமா தியேட்டர்களிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் புதிய ஊரடங்கு தளர்வால் தமிழ் திரையுலகினர் உற்சாகமடைந்து தங்கள் படங்களின் வெளியீட்டை அறிவித்து வருகின்றனர்.

அடுத்த வாரம் பிப்ரவர் 11ல் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படம் தான் இது.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இத்துடன் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள ‘டான்’ படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

நாம் ஏற்கெனவே (ஜனவரி 28 அன்று) மார்ச் மாத இறுதியில் டான் படம் வெளியாகும் என செய்தி வெளியிட்டு இருந்தோம்.

தற்போது மார்ச் 25ல் டான் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளனர்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டான்’.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஷிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்திற்காக பணிபுரிந்துள்ளனர்.

Sivakarthikeyan and Vijay Sethupathi film release details

பிப்ரவரி 4ல் விஷால் படத்துடன் மோதும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’

பிப்ரவரி 4ல் விஷால் படத்துடன் மோதும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் (சத்தியமா அப்படின்னு நாங்க சொல்லல) இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் டெல்லியிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சினிமா தியேட்டர்களிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் புதிய ஊரடங்கு தளர்வால் தமிழ் திரையுலகினர் உற்சாகமடைந்து தங்கள் படங்களின் வெளியீட்டை அறிவித்து வருகின்றனர்.

இந்த வாரம் பிப்ரவரி 4ல் விஷால் நடித்துள்ள ‘வீரமே வாகை சூடும்’ ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

துபா. சரவணன் இயக்கியுள்ள இதில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்க கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய சுரேன் விகாஷ் இசையமைத்துள்ளார்.

ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிக்க ஸ்டூடீயோ கிரீன் நிறுவனம் வெளிய்யிடுகிறது. எடிட்டிங் பணிகளை ராம்-சதீஷ் செய்துள்ளனர்.

இந்த படத்தை வரும் பிப்ரவரி 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.

Pandrikku Nandri Solli movie to clash with Vishal film

விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஒரு பிரபல ஹீரோ படத்தில் மற்றொரு பிரபல ஹீரோ நடிக்க தயங்குவார்.

ஆனால் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் அந்தந்த மாநில ஸ்டார்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பார்கள்.

இதனால் பிரபலமான நாயகனின் தமிழ் படத்தில் நடிக்க கேட்டால் அவர்கள் உடனே ஓகேவும் சொல்லிவிடுவார்கள்.

விஜய் நடித்த ஜில்லா படத்திலும் சூர்யா நடித்த காப்பான் படத்திலும் மோகன்லால் நடித்திருந்தார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான கமலின் உன்னை போல் ஒருவன் படத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வினோத் இயக்கவுள்ள அஜித் 61 படத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

விரைவில் இதுபற்றிய அறிவிப்பு தயாரிப்பாளர் போனிகபூர் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Super Star joins with Ajith Kumar for his new film?

உங்க வாழ்க்கையை மாற்றப் போகும் 2 நிமிடம்..; சுசி கணேசன் தேடும் ஹீரோ நீங்கதானே.?

உங்க வாழ்க்கையை மாற்றப் போகும் 2 நிமிடம்..; சுசி கணேசன் தேடும் ஹீரோ நீங்கதானே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஜனவரி 29ல் வெளியிடப்பட்டது .

சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . அதற்கான விடை நேற்று (ஜனவரி 29) நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது

தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது…

“ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் .

இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான ” வருங்கால சூப்பர் ஹீரோ 2022″ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார் .

இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது .

இயக்குனர் சுசி கணேசன் இதுபற்றி கூறும்போது…

“பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதா நாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார்

ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com வெப்சைட் அல்லது 4V MAXTV -யூ டியூப் மூலம் இரண்டு நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் .

இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி உடற்பயிற்சி அளிக்கப்படும் .

மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 பேர் ,
12 வாரங்கள் நடக்கும் “வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ” கலந்து கொளவார்கள் .

இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனல் அறிவிக்கப்பட இருக்கிறது .

நடிகை ஸ்னேகாவை
பிரபலமான வாரப் பத்திரிக்கை மூலமும் நடிகர் ப்ரசன்னாவை பிரபலமான டி வி மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசன் , சோசியல் மீடியாவின் வளர்ச்சிக்கேற்ப ” வருங்கால சூப்பர் ஹீரோ” வின் மூலம் கதா நாயகன் தேடும் முயற்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை .

“அன்றைக்கு அது புதுசாக இருந்தது . கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும் ” என்றார் சுசி கணேசன் .

தயாரிப்பாளர் மஞ்சரி “பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்கு கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குனர் சுசி கணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும் .

இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ஹிந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த வருடத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந் நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் முயற்சியில் இயக்குனர் சுசி கனேசன் வெற்றி பெறுவார் .
நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் .

வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் , குழுவும் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப்படம் தயாரிக்கப்படும்.

Bullet19 என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக சுசிகணேசன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு , முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது . அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் “என்றார்.

Director Susi Ganesan searches for Next Super Star 2022

https://www.4vmaxtv.com/?a=11

https://www.youtube.com/channel/UCmrWLfqeF2SqhwGcrOWh_Jg

More Articles
Follows