நயன்தாரா செய்த கேவலமான விஷயம் அது..: கிராண்மா’ இசை விழாவில் கே. ராஜன் கடும் தாக்கு

நயன்தாரா செய்த கேவலமான விஷயம் அது..: கிராண்மா’ இசை விழாவில் கே. ராஜன் கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு
‘கிராண்மா’ என்கிற படம்
உருவாகியுள்ளது.

இப்படத்தை GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.

ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.

பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது…

“எந்த புரோமோசன் நிகழ்ச்சிக்கும் செல்லாத நயன்தாரா அவரது நெற்றிக்கண் பட புரோமோசன் நிகழ்ச்சிக்கு மட்டும் வந்திருந்தார்.

அவரிடம் கேட்டால் நான் புரோமோசனுக்கு வந்தால் படம் ஓடாது என்பார். எப்படி ஒரு கேவலமான காரணம் பார்த்தீர்களா?” என பேசினார் கே. ராஜன்.

Producer K Rajan slams actress Nayanthara

டிஸ்சார்ஜ் ஆன உடனே பிக்பாஸ் செட்டுக்குள் நுழைந்த கமல்ஹாசன்

டிஸ்சார்ஜ் ஆன உடனே பிக்பாஸ் செட்டுக்குள் நுழைந்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை மேற்கொண்டார் கமல்ஹாசன்.

எனவே இவர் கலந்துக் கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் கமல்ஹாசன்.

இந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆனவுடன் நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் கமல்.

தற்போது இதற்கான புரமோ வெளியாகியுள்ளது.

இதில் ரசிகர்கள் பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

KamalHaasan is back to biggboss set after covid treatment

நான்கு நாயகிகள் நடிக்கும் புதிய பட பூஜை.; சிம்பு படத் தயாரிப்பாளர் நேரில் வாழ்த்து

நான்கு நாயகிகள் நடிக்கும் புதிய பட பூஜை.; சிம்பு படத் தயாரிப்பாளர் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். கதையின் நாயகனாக எஸ்.எஸ்.பிரபு அறிமுகமாகிறார்.

அமெரிக்காவில் ஆங்கிலப்படம் மற்றும் டெலி பிலிம்களை இயக்கிய கிரிதரன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஸ்டண்ட் – எஸ்.ஆர்.ஹரிமுருகன், நடன இயக்குனர் – சங்கர், காஸ்டிங் இயக்குனர் – ஆரோக்கியதாஸ், காஸ்ட்யும் டிசைனர் – ரெபேகா மரியா, நிர்வாக தயாரிப்பாளர் – ஆர்.குமரேசன், கே.எஸ்.செந்தில் குமார்,

மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன் – சதீஷ்வரன்

Shankar pictures new movie launched today

‘வெயில்’ முதல் ‘ஜெயில்’ வரை..; ஜிவி. பிரகாஷுடன் பயணம் குறித்து வசந்தபாலன்..

‘வெயில்’ முதல் ‘ஜெயில்’ வரை..; ஜிவி. பிரகாஷுடன் பயணம் குறித்து வசந்தபாலன்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

17 வயது ஜீவியுடன் வெயில் திரைப்படத்தில் என் இசைப் பயணம் துவங்கியது.

‘வெயிலோடு விளையாடி…’ பாடலையும் ‘உருகுதே மருகுதே…’ பாடலையும் நேர்த்தியாக உருவாக்கினால் தான் மேற்கொண்டு ஜீவி உடன் நான் பயணிக்க முடியும் என்று ஒரு மாபெரும் சவால் எங்கள் முன் இருந்தது

எப்பாடு பட்டேனும் இந்த இரண்டு பாடலை மகத்தான வெற்றிப் பாடல்களாக உருவாக்க வேண்டும் என்று பகலிரவாக நானும் ஜீவிக்கும் நா.முவும் இடைவிடாது அழித்தழித்து யோசித்து அந்த பாடல்களை உருவாக்கி வெற்றி கண்டோம்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது ‘வெயிலோடு..’. பாடலும் ‘உருகுதே…’ பாடலும் ரசிகர்களால் ஒரு கிளாசிக்காக பார்க்கப்படுவதைக் காணும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீவியின் மாபெரும் பலமாக நான் நினைப்பது இதயத்தை உருக்கும் மெலடி. கதைகளை பேசும் விழியருகே பாடலும்,
உன் பெயரைச் சொல்லும் போதே என்ற பாடலும் அங்காடித் தெருவில் இன்னும் காதலர்களின் கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஜெயில் திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணையும் போது முன்னிருக்கும் பாடலின் சாதனையை இலக்காக வைத்துக் கொண்டு ஜெயில் திரைப்படத்தில் பாடல்களை உருவாக்க அமர்ந்தோம்.

உருகுதே பாடலுக்கு அருகில் செல்லக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் காத்தோடு காத்தானேன் பாடல்.

6 பாடல்களைக் கொண்ட ஜெயில் திரைப்படத்தின் இசை ஆல்பம் மிக அழகாக வந்துள்ளது. உங்கள் இசை ரசனை மீது பெரும் நம்பிக்கை கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்.

உங்களின் பேரன்பை எதிர்நோக்கி அன்புடன் – G.வசந்தபாலன்

Vasantha balan talks about working with GVP

கடவுளின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட சிபிராஜின் ‘மாயோன்’ டீசர்

கடவுளின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட சிபிராஜின் ‘மாயோன்’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 3 சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாயோன்’ படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில்…

”மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக ‘மாயோன்’ படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.

நாம் அனைவரும் நம்முள் பல ‘இயலாமை’களையும், ‘அச்சங்’களையும் கொண்டிருக்கிறோம். சிலருக்கு இவை இயல்பாக இருக்கும். பலருக்கு இவை பலரால் வழங்கப்பட்டதாக இருக்கும் அல்லது சமூகத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றதாக இருக்கும்.

எனவே அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. சர்வதேச மாற்று திறனாளி தின வாழ்த்துகள்!” என பதிவிட்டிருக்கிறார்.

இறைவனின் பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகள், தங்களின் விடா முயற்சியால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் சாதனை புரிந்திட, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். மாற்று திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவகையில் பிரத்தியேக வாழ்வாதாரத்தையும், நம்முடைய சமூக கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இந்நாளில் சபதம் ஏற்போம். அந்த வகையில் முதல் முயற்சியாக ‘மாயோன்’ படக்குழு, படத்தின் டீசரை பார்வை திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

எங்களைப்போல் தமிழ் திரையுலகினர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று பணிவான வேண்டுகோளை முன்மொழிகிறோம்.

‘மாயோன்’ படத்தில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே எஸ் ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீச்சருக்காக பிரத்யேக ஒலிக்குறிப்பை சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாற்றுத் திறனாளி கலைஞரான ‘இன்ஸ்பயரிங்’ இளங்கோ மேற்கொண்டிருக்கிறார்.

இதனிடையே மாற்றுத்திறனாளிகளும் பலனடையும் வகையிலான பிரத்யேக ஒலிக்குறிப்புடன் படத்தின் டீஸர் வெளியிடும் பணியினை, தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இதற்கு முன்னர் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Maayon’ unit puts out unique audio teaser for the visually-challenged people

‘அரண்மனை 3’ திரைப்படம் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை 12 நாட்களில் கடந்து சாதனை

‘அரண்மனை 3’ திரைப்படம் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை 12 நாட்களில் கடந்து சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘அரண்மனை 3’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில் படக்குழுவினரும், ZEE5 குழுவினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ZEE5 நிறுவனம் அடுத்தடுத்து அட்டகாசமான கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை அசத்தி வருகிறது. இந்த வெற்றி வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம்’ திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது ‘அரண்மனை 3’ திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ZEE5 நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் “சித்திரை செவ்வானம்”, இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் பிரத்யேக வெளியீடாக ZEE5 தளத்தில் 3 டிசம்பர் அன்று வெளியாகிறது.

மேலும் பல சிறப்பு மிக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, பல்வேறு படைப்புகளுடன் அடுத்தடுத்த மாதங்களில் ZEE5 தனது சந்தாதாரர்களை மகிழ்விக்க உள்ளது.

‘Aranmanai 3’ garners over 7 Crore streaming minutes on ZEE5 in 12 days

More Articles
Follows