ஒரேடியாக கேரளத்து சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ்

ஒரேடியாக கேரளத்து சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy sureshரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார் இவர்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் அஜய் தேவ்கான் நடிக்கும் மெய்டன் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. ஆனால் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.

தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கி வரும் வரலாற்று கதையான ‘மரைக்கார் ‘ என்ற படத்தில் மோகன் லால் உடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதில் கீர்த்தி சுரேஷ் மலையாள சேச்சியாக மாறி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லிக்கு செல்லும் அருண் விஜய், அறிவழகன் இணையும் AV 31 படம் !

டெல்லிக்கு செல்லும் அருண் விஜய், அறிவழகன் இணையும் AV 31 படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay25 வருட திரைப்பயணத்தில் நடிகர் அருண் விஜய் தன் ரசிகர்களை, அறிவழகனுடன் இணையும் தனது புதிய படத்தில் அதிரடி ஆக்‌ஷன் மூலம் அசரடிக்க வருகிறார். இரண்டு வார கால நீண்ட படப்பிடிப்பில் பிரமிப்பான அதிரடி ஆக்‌ஷன், மயிர்க்கூச்செரியும் துரத்தல் காட்சிகள் டெல்லி மற்றும் ஆக்ராவில் இப்படத்திற்காக படமாக்கப்படவுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் ரொமான்ஸ் பொங்கும் பாடல் காட்சிகள் யமுனா நதி கரைகளிலும், டெல்லி மற்றும் ஆக்ரா மார்க்கெட் வீதிகளில் படமாக்கப்படவுள்ளது. “குற்றம் 23” எனும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஈரம் அறிவழகன் இப்படத்தில் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைகிறார்.

இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிகர் அருண்விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். Miss Teen International 2016 புகழ் ஸ்டெஃபி படேல் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் எனும் பக்ஸ் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். புகழ்வாய்ந்த ஒளிப்பதிவாளர் B ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, இளம் உள்ளங்களின் நாயகன் சாம் CS இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற ஷாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். சக்தி வெங்கட் ராஜ் கலை இயக்கம் செய்கிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் சென்னை, டெல்லி, ஆக்ரா, ஹைதராபாத் பகுதிகளில் படம்பிடிக்கப்படும் இத்திரில்லர் திரைப்படத்தை விஜயராகவேந்திரா Allin Pictures சார்பில் தயாரிக்கிறார்.

சிம்பு சூட்டிங் லேட்; கேரவன் கேட்கிறார்.. பதற்றமான சுரேஷ் காமாட்சி விளக்கம்

சிம்பு சூட்டிங் லேட்; கேரவன் கேட்கிறார்.. பதற்றமான சுரேஷ் காமாட்சி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அனைத்து பத்திரிகை நண்பர்களிடமும் ரொம்ப நெருக்கமாக எனது குடும்பம் போலவுமே பழகி வருகிறேன். யாருடைய அழைப்பையும் தவிர்த்ததில்லை.

மற்றவர்கள் தன் படம் பற்றி ஒளித்துவைக்கும் செய்திகளைக் கூட நான் ஒளித்து வைப்பதில்லை.

அழைத்துக் கேட்டால் ஆமா, இல்லை… என்பதை உள்ளபடியே சொல்லிவிடுவேன்.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி & சிம்பு.; இயக்குனர் இவரா.?

அதனால் என் படத்திற்கு சாதகமான விசயங்களே நடந்திருக்கின்றன. எனது பி ஆர் ஓ வும் அப்படியே. செய்தியாளர்களின் முக்கியத்துவத்தை தவிர்த்ததே இல்லை.

பெரிய படங்கள் செய்வது சாதாரணமல்ல. ஒருங்கிணைப்பு வேலைகள் அதிகம் இருக்கும். இதில் ஒரு சில சக நண்பர்களின் பொறாமைப் பார்வையும் இருக்கும்.

அப்படியான யாரோ ஒரு இன்ஃப்ளூயண்ஸ்ட் பெர்ஸன் நம் மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழ பத்திரிகைகளில் அவருக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார்.

ஒரு பத்திரிகையில் சிம்பு படப்பிடிப்பிற்கு 16வது நாளிலிருந்து தாமதமாக வருகிறார் என்ற செய்தியை வெளியிடுகிறது.

என்ன ஒரு அபத்தம். அந்த செய்தி வெளியான அன்று படப்பிடிப்பே ஆறு நாட்கள்தான் நடந்து முடிந்திருந்தது.

ஒருநாள் கூட சிம்பு தாமதமாக வரவில்லை. ஷுட்டிங் வராமல் தவிர்க்கவும் இல்லை. காட்சி படமாக்கி முடியும் வரை கேரவேனுக்கும் செல்வதில்லை. அங்கேயே குடையைப் பிடித்து நின்றுகொண்டு நடித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது ரெண்டு கேரவேன் கேட்கிறார் எனவும் செய்தி வெளியிடுகிறார்கள்.

இன்னொரு பத்திரிகை சிம்பு ஹைதராபாத்துக்கு வர மறுத்துவிட்டார்னு ஒரு செய்தி போடுகிறார்கள்.

அப்போ நாளை மறுநாளிலிருந்து ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடக்கப் போகிறது.. அப்போ சிம்பு இல்லாமலா ஷூட்டிங் எடுக்கப் போகிறோம்?

இதெல்லாம் சின்ன செய்திதானே? கடந்து போங்கள் என சொல்லலாம். நாங்கள் சொந்தக் காசை வைத்து படம் பண்ணலை. வட்டிக்கு வாங்கி பண்றோம்.

ஒவ்வொரு தவறான செய்தியும் பணம் தருபவர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கும்.

வேக வேகமான இயக்குநர்… & டீம், காட்சிகளைப் புரிந்து நேரமெடுக்காமல் நேர்த்தியாக நடிக்கும் நடிகர்கள் என அருமையாக வடிவமைக்கப்பட்ட ஒரு குழு திறம்பட இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களின் மனதில் இன்னும் சேமிக்கப்பட்டிருக்கும் தவறான கடந்த கால அபிப்ராயங்களாக சிம்பு பற்றியவை இன்னும் இருந்தால் கண்ட்ரோல் ஆல் டெலிட் பட்டனை அமுக்குங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள்.

தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்பவரைப் பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே.

யாரையோ திருப்திபடுத்த முறையற்ற செய்திகள் வெளியிட வேண்டாம் என அன்போடு என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

எதுவாக இருந்தாலும் எனக்கு அழையுங்கள். சரியானத் தகவல் தருகிறேன். அல்லது என் பத்திரிகை தொடர்பாளரிடம் கேளுங்கள்.

உங்களால் உயர்த்திவிடப்பட்ட ஒரு தயாரிப்பாளராகவே வலம் வர ஆசைப்படுகிறேன். கைகொடுத்து நில்லுங்கள்.

நன்றியோடு எப்போதும் இருப்பேன்.

-சுரேஷ் காமாட்சி
இயக்குநர், தயாரிப்பாளர்

எடுபுடி அரசு தவிடு பொடியாகும்; இந்தியன் 2 விபத்து விசாரணைக்கு கமல் தொண்டர்கள் கண்டனம்!

எடுபுடி அரசு தவிடு பொடியாகும்; இந்தியன் 2 விபத்து விசாரணைக்கு கமல் தொண்டர்கள் கண்டனம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடைபெற்றது.

இந்நிலையில், கமலிடம் விசாரணை நடத்தியதை கண்டிக்கும் விதமாக ‘இந்தியனுக்கே விசாரணையா? வீணர்களே’ என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், அதில், “வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து; இது தான் தமிழனின் கெத்து. குனிந்து கும்பிடு போடும் முட்டாள் அரசியல்வாதிகளே முடிந்தால் களத்தில் வந்து மோது. இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு” என்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன.

மற்றொரு போஸ்டரில் எடுபுடி அரசு தவிடு பொடியாகும் என அச்சடித்துள்ளனர்.

இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kamal posters (1)

Kamal posters (2)

ஆன்லைன் வர்த்தக மோசடி விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’

ஆன்லைன் வர்த்தக மோசடி விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர்,
இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.
விஷாலிடம் கதையை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்து விட.. இப்படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். கதாபாத்திரங்கள் எதுவும் மாற்ற வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். அதுமட்டுமில்லாமல், பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷரத்தா ஸ்ரீநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். அதேபோல் ரெஜினா கஸன்ட்ரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.

விஷால், ஷரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெஸன்ட்ரா, இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். கலையை எஸ்.கண்ணன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் நடத்தப்பட்டது.

அனைத்தையும் விரைவில் முடித்து திட்டமிட்டபடி மே 1-ஆம் தேதி ‘சக்ரா’ படம் வெளியாகும்.

வில்லன் நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் விஷம் அருந்தி தற்கொலை.!

வில்லன் நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் விஷம் அருந்தி தற்கொலை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Anandarajரஜினி, பிரபு, சரத்குமார், விஜயகாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ்.

அண்மையில் பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார்.

இவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்.

இவருக்கு ஐந்து சகோதரர்கள், 2 தங்கைகள் உள்ளனர்.

சகோதரர்களில் ஒருவரான கனகசபையின் (55), வீடு அண்ணா சாலையொட்டி திருமுடிநகரில் உள்ளது.

வட்டிக்கு பணம் தருவது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்த கனகசபை திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டு கதவு பூட்டியே இருந்த்து. கதவு. திறக்கப்படவில்லை.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்து உள்ளே சென்றனர். அங்கு விஷ பாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து பெரியக்கடை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

“கனகசபை பைனான்ஸ், ஏலச்சீட்டு நடத்தி வந்ததும் அதில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் சொத்து பிரச்னையும் அவருக்கு இருந்துள்ளது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதன் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.” என போலீசார் குறிப்பிட்டனர்.

More Articles
Follows