தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை நடிகர் விஜய் தனது 42வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
எனவே அவரது ரசிகர்கள் கொடி, போஸ்டர், பேனர் என தங்கள் உற்சாக கொண்டாட்டங்களை முன்பே ஆரம்பித்து விட்டனர்.
மேலும் இரத்ததானம், அன்னதானம், கல்வி சார்ந்த உதவிகள் உள்ளிட்ட நற்பணிகளையும் செய்யவிருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் விஜய்யின் ஹிட்டடித்த படங்களை திரையிட உள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி தியேட்டரில் நாளை காலை 9 மணிக்கு கத்தி படம் ஸ்பெஷல் காட்சி நடைபெறுகிறது.
ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னையிலுள்ள வெற்றி திரையரங்கில் திரையிட முடியாத சூழ்நிலை என கூறிவிட்டார்களாம்.
எனவே அந்தப் பகுதி விஜய் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.