விரைவில் ஊட்டியில் இணையும் கார்த்தி – அதிதி ராவ்..!

karthi and aditi raoகோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காஷ்மோரா’.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து, தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் கார்த்தி.

மணிரத்னம் இயக்கவுள்ள இப்படத்தில் பைலட்டாக நடிக்கிறார் கார்த்தி. நாயகியாக அதிதி ராவ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

விரைவில் இதன் படப்பிடிப்பை ஊட்டியில் ஒரு பாடலுடன் தொடங்கவிருக்கின்றனர்.

இதன் வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

வருடத்திற்கு அரை டஜன் படங்களை நடித்து…
...Read More
தோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் கார்த்தியின்…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில்…
...Read More
சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி…
...Read More

Latest Post