தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளம் இருந்தாலும், ஆர்ப்பாடமில்லாமல் பருத்தி வீரனில் அறிமுகமானார் கார்த்தி.
இதனையடுத்து நான் மகான் அல்ல, பையா என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராகியுள்ளார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மெட்ராஸ், தோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று பிப்ரவரி 23ஆம் தேதியுடன் இவர் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனையொட்டி தனக்கு அழகான வாழ்க்கையை தந்த குடும்பம், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
Karthi celebrates 10 years in Cinema Industry