கண்ணா லட்டு ரசிக்க ஆசையா.? மனதை மயக்கும் ‘சந்திரமுகி2’ போஸ்டர்

கண்ணா லட்டு ரசிக்க ஆசையா.? மனதை மயக்கும் ‘சந்திரமுகி2’ போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக இருக்கும் ராகவா லாரன்ஸ் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகியாக கங்கனா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சந்திரமுகி2

Kangana Ranaut looks stunning in the ‘Chandramukhi 2’ first look poster

டி.ஆர். – ரஜினி படங்களில் நடித்த கைலாஷ்நாத் மரணம்

டி.ஆர். – ரஜினி படங்களில் நடித்த கைலாஷ்நாத் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் டி.ராஜேந்தரின் ‘ஒரு தலை ராகம்’படத்தில் தம்பு என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் கைலாஷ் நாத்.

மலையாள நடிகரான கைலாஷ் நாத், கேரள மாநிலம் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்.

மிமிக்ரி கலைஞராகவும், நாடக நடிகராகவும் இருந்து இவர், 1977-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான, ‘சங்கம்’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து மலையாளத்தில் ‘ஏதோ ஒரு ஸ்வப்னம்’, ‘சேதுராமய்யர் சிபிஐ’, ‘சீதா கல்யாணம்’, ‘யுகபுருஷன்’ உட்பட 163 படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ‘பாலைவனச்சோலை’, ‘வள்ளி’ உள்பட 90 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக, கல்லீரல் அழற்சிக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் காலமானார். அவருக்கு வயது 65.

அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Actor kailash nath passes away

இதுக்காக தானே வெறித்தனமான வெய்ட்டிங்.; ‘ஜெயிலர்’ போஸ்டருக்கு வரவேற்பு

இதுக்காக தானே வெறித்தனமான வெய்ட்டிங்.; ‘ஜெயிலர்’ போஸ்டருக்கு வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மோகன்லாலும் ரஜினியும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மேலும், இந்த காம்போவ பாக்கதான காத்திருக்கோம் என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெயிலர்

‘Jailer’ new poster shows Rajinikanth, Mohanlal in frame

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ம் ஆண்டு சிம்பு – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதா சர்மா.

இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2′ படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது அதுமட்டுமல்லாமல் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது.

மேலும், இப்படத்தில் நடித்ததற்காக நடிகை அதா சர்மாவிற்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை அதா சர்மா அவரது அடுத்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கடுமையான வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

The kerala story actress Adah Sharma admitted in hospital

ரஜினிக்கு 5 படம் கன்பார்ம்.; மீதம் 5 இருக்கு.; சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி அண்ணன் பேட்டி

ரஜினிக்கு 5 படம் கன்பார்ம்.; மீதம் 5 இருக்கு.; சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி அண்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பத்தூரில் ஆண்டியப்பனூர் பாப்பாத்தி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணன் வந்திருந்தார்.

தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சத்தியநாராயணன். அப்போது அவர் பேசியதாவது

“ஆகஸ்ட் 10-ந் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் ரிலீசாகிறது. அம்மன் அருளால் படம் வெற்றி பெறும்.

ரஜினிகாந்த் இன்னும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளார். அதில் 5 படங்களில் நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்த்துக்கு மக்கள் கொடுத்தார்கள். மக்கள் விரும்பினால் அந்த பட்டத்தை யார் வேண்டுமானாலும் வாங்கட்டும் என்றார்.

கிருஷ்ணகிரியில் கட்டப்பட்ட தாய், தந்தை கோவிலுக்கு ரஜினிகாந்த் விரைவில் வருவார்.” என்றார்.

இந்த சந்திப்பின் போது கர்நாடகா மாநில ரஜினி மன்ற தலைவர் சந்திரகாந்த், வாணியம்பாடி அன்பரசு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Rajini will act in more than 10 films after Jailer

அரசாங்கத்தால் தடுக்க முடியாததற்கு வழி சொல்லும் ‘வேம்பு’.; இயக்குநர் ரஞ்சித் ஆதரவு

அரசாங்கத்தால் தடுக்க முடியாததற்கு வழி சொல்லும் ‘வேம்பு’.; இயக்குநர் ரஞ்சித் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி அம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆ.குமரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த கே.ஜே வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைதுள்ளார்.

பாடல்களை அந்தோணி தாசன், தஞ்சை சின்னப்பொண்ணு, ஜோக்கர் படத்திற்காக தேசியவிருது பெற்ற சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன் ஆகியோர் பாடியுள்ளனர்.

‘ஜோக்கர்’ படத்தில் பாடிய ராணியின் பாடல் வரிகளையும் இதில் பயன்படுத்தி உள்ளதுடன் அவரும் இந்தப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேம்பு

படம் குறித்து இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது…

“யதார்த்தமான ஒருவரின் வாழ்வியல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. தங்களது சொந்த வாழ்க்கையைத் தாண்டி அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல் அவர்களை எப்படி பெரிய மனிதர்கள் ஆக்குகிறது என்கிற விதமாக இதன் கதை உருவாகியுள்ளது.

எளிய மக்களில் இருந்து பெரிய மக்கள் வரை சார்ந்ததாக இந்த கதை இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உந்துதல் அளிக்கும் ஒரு படமாக இருக்கும். ஒரு நல்ல சமூக கருத்து இந்த படத்தில் இருக்கிறது. படம் பார்க்கும் அனைவராலும் இந்த கதையுடன் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது எப்படி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள், ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார், நாயகியின் முறைப் பையனாக வரும் நாயகன் அவளுக்கு எப்படி உறுதுணையாக நிற்கிறார், அவள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

இதனால் அந்த சமூகத்தில் யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாத ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கிறது.

காவல்துறையோ, அரசாங்கமோ தடுக்க முடியாத ஒரு விஷயத்தை, இது இருந்தால் எல்லோருமே தங்களை பாதுகாப்பாக வழி நடத்திக் கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறோம்.

இது சமூகத்திற்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக உருவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக தூய்மை பணியாளர்களின் வாழ்வியலை மையப்படுத்தி குப்பைக்காரன் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளேன்.

இதற்காக சர்வதேச திரைப்பட விருதும் பெற்றுள்ளேன். சில முக்கியமான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன்.

நான் சாதாரண ஒரு கிராமத்தில் வாழ்ந்தவன் என்பதால் எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கிறேன். அதனால் எனது கதைகள் எல்லாமே சமூக பார்வையுடன் தான் இருக்கும். சமூகத்திற்கு மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் தான் படங்கள் இயக்குவேன்” என்று கூறியுள்ளார்

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி

டைரக்சன் ; ஜெஸ்டின் பிரபு

ஒளிப்பதிவு ; ஏ.குமரன்

படத்தொகுப்பு ; கே.ஜே வெங்கட்ரமணன்

இசை ; மணிகண்டன் முரளி

பாடகர்கள் ; அந்தோணி தாசன், தஞ்சை சின்ன பொண்ணு, சுந்தர அய்யர் மற்றும் கபில் கபிலன்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

வேம்பு

Director Ranjith launches Vembu first look

More Articles
Follows