தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்க நாயகனாக லாரன்ஸ் நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா நடிக்க இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் உலகப்புகழ் கோல்டன் குளோப் விருதை வென்ற கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு டான்ஸ் மாஸ்டர் கலா நடன அசைவுகளை சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தில்…” ரா ரா…” என்ற க்ளைமாக்ஸ் பாடல் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
‘Chandramukhi 2’ Movie Climax Song updates