டிராபிக் ராமசாமி படத்தில் போலீஸ் கமிஷ்னராக பிரகாஷ்ராஜ்

டிராபிக் ராமசாமி படத்தில் போலீஸ் கமிஷ்னராக பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prakash Rajக்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் ‘டிராபிக் ராமசாமி’. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்படும் படமாகும்.

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார்.

இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள்.

இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக இருக்கும்.

பிரகாஷ் ராஜ் இப்போது ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றிப் பிரகாஷ்ராஜ் கூறும்போது…

“வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

“அவர் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் ” என்று இயக்குநர் விஜய்விக்ரம் கூறுகிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை குகன். S.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும், எடிட்டிங் பிரபாகரும், கலையை வனராஜ் அவர்களும் கவனிக்கிறார்கள்.

அஜித்தின் விசுவாசத்திற்கும் பிரச்சினை செய்வார்; அருள்பதி மீது ஞானவேல்ராஜா தாக்கு

அஜித்தின் விசுவாசத்திற்கும் பிரச்சினை செய்வார்; அருள்பதி மீது ஞானவேல்ராஜா தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KE gnanavel raja and ajithசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவிருப்பதாகவும் 2017=2019 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கு நம்ம அணியின் சார்பாக போட்டியிடுகிறேன் என்று விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017 =19 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் நம்ம அணி சார்பாக போட்டியிடுபவர்களின் பத்திரியகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே ராஜன், பொருளாளர் பதவிக்கு மெட்டி ஒலி மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்காக போட்டியிடுபவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா பேசுகையில்,

‘முதலில் இந்த தேர்தல் பற்றிய உட்கட்டமைப்பைச் சொல்லிவிடுகிறேன். இது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கான தேர்தல்.

இதே போன்ற விநியோகஸ்தர்கள் சங்கம் கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி என ஆறு இடங்களில் தனித்து இயங்குகிறது.

இந்த ஆறு அமைப்பும் சேர்ந்து கூட்டமைப்பு ஒன்றும் செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ். இவர் என்ன படத்தை விநியோகம் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை.

நான் 15 ஆண்டுகாலமாக இத்துறையில் இருக்கிறேன். ஒரு வேளை அதற்கு முன்னர் அவர் விநியோகம் செய்திருக்கலாம். அவர் எந்த படத்தை விநியோகம் செய்தார் என்று எந்த உறுப்பினர்களுக்கும் தெரியவில்லை.

ஆனால் அவர் தான் இந்த விநியோகஸ்தர் கூட்டமைப்பின் தலைவர். அவர் அணிந்திருக்கும் உடை, பயணம் செய்யும் பயணச்சீட்டு, சாப்பிடும் சாப்பாடு, தங்கும் விடுதி என அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பவர் அன்புசெழியன்.

அவர் என்ன பேசச் சொல்கிறாரோ அதை மட்டும் பேசுவார். இதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன்.

அதன் பிறகு ஏன் இந்த ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, இந்த விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பதன் பின்னணியும் காரணமும் அனைவருக்கும் புரிந்துவிடும்.

ஆர்கா மீடியாஸ் என்ற ஹைதரபாத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தான் பாகுபலி=2 படத்தை தயாரித்தது. இந்த நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தமிழக வெளியீட்டு உரிமையும், உலகளவில் தமிழ் மொழியில் வெளியிடும் உரிமையையும் வழங்கியிருக்கிறார்கள்.

அவர் உலக விநியோக உரிமையை பகுதி பகுதியாக பிரிந்து விற்பனை செய்த பிறகு தமிழகத்தின் வெளியீட்டு உரிமையை ஆஸ்கார் பிலிம்ஸி ரவிச்சந்திரன் அவர்களுக்கு வழங்க தீர்மானித்து, அதற்காக ஒரு தொகையை நிர்ணயித்து, ஒப்பந்தம் போட்டு, எட்டு கோடி ரூபாய்க்கு முன்பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்.

இந்த சூழலில் அன்புசெழியன், கே புரொடக்ஷன்ஸைச் சேர்ந்த ராஜராஜன் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஸ்ரீகிரீன் சரவணன் என்பவருக்கு இரண்டாவது ஒப்பந்தத்தை போட செய்கிறார்.

அதாவது ஒரு தொகையை நிர்ணயம் செய்து ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட ஒரு படத்தை மீண்டும் செகண்ட் அக்ரீமெண்ட்டை தற்போதையை தலைவரானஅருள்பதியின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

ஏனெனில் இங்கு அருள்பதி தான் சார் கிங். அதன் பிறகு ஸ்ரீகிரீன் சரவணன் மூலம் கூட்டமைப்பிடம் ஒரு புகார் அனுப்பப்படுகிறது.

அதில் பாகுபலி படத்தின் உரிமையை நான் தான் பெற்றிருக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அப்போது கூட்டமைப்பினர் ஆஸ்கார் ரவிச்சந்திரனை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள். அவருக்கு இப்பட விற்பனையிலிருந்து விலகிக் கொள்ளும் படி நெருக்கடி கொடுக்கிறார்கள். அத்துடன் நீங்கள் வாங்கிய விலையால் உங்களுக்கு நட்டம் ஏற்படும் என்று விளக்கமும் அளிக்கிறர்கள். அதற்கு ரவிச்சந்திரன் பரவாயில்லை.

எது வந்தாலும் நான் எதிர்கொள்கிறேன் என்று பேசுகிறார். அவர் பாரம்பரியமாக இந்த தொழிலில் இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு கட்டத்தில் இத்துறையில் ஜாம்பவனாக திகழும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிரட்டப்படுகிறார். அவர் வேறு வழியில்லாமல் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு ஸ்ரீகிரீன் சரவணன் பாகுபலி =2 படத்தை விற்பனை செய்கிறார். கடவுள் அருளால் நல்லதொரு விலைக்கு அப்படம் விற்பனையாகிறது. அந்த படம் விற்பனையானவுடன் அன்புசெழியன், ஸ்ரீகிரின் சரவணன் அவர்களை லாக் செய்கிறார். அவரால் வசூல் செய்யப்பட்ட தொகையில் 24 கோடி ரூபாயை அன்புசெழியன் எடுத்துக் கொள்கிறார்.

இந்த ஏற்பாடு அனைத்தும் அந்த தொகையை அன்புசெழியன் எடுத்துக் கொள்வதற்காகத்தான் என்பதை அனைவரும் அறிவர். தமிழக உரிமை முப்பத்துநான்கு கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்ட பாகுபலி=2 எழுபது கோடி ரூபாய் அளவிற்கு ஷேர் பெற்றிருக்கிறது.

இன்றைய தேதி வரைக்கும் அந்த தயாரிப்பாளருக்கு சேரவேண்டிய சுமார் பதினான்கு கோடி ரூபாய் சேரவில்லை. இது போக படத்தின் அதிகப்படியான வசூலான தொகையில் கிடைக்கும் லாபத்தொகையும் அந்த தயாரிப்பாளருக்கு கிடைக்கவில்லை.

இப்படத்தின் செங்கல்பட்டு உரிமையை அருள்பதி மற்றும் படூர் ரமேஷ் கூட்டணியினர் தான் பெற்றிருந்தார்கள்.

எந்தவொரு முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் தொடங்கினாலும் தமிழகத்திலுள்ள ஆறு விநியோகஸ்தர்கள் சங்கத்தில் ஏதேனும் ஒன்றில் யார் மூலமாகவாது புகார் கொடுக்கவைத்து, அதற்கு பஞ்சாயத்து பேசி, சுயலாபம் பார்த்துவருகிறார்கள் தற்போதுள்ள கூட்டமைப்பினர்.

விரைவில் அஜித் படமாக விசுவாசத்திற்கும் இது போல பஞ்சாயத்து வரக்கூடும். எனவே தற்போதுள்ள நிர்வாகத்தினர் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு, தங்களின் சுயலாபத்திற்காக பாடுபடுவதால் இந்நிர்வாகத்திற்கு எதிராக இந்த முறை நடைபெறும் தேர்தலில் நாங்கள் நம்ம அணி சார்பில் போட்டியிடுகிறோம்.

அத்துடன் விரைவில் நடைபெறவிருக்கும் மதுரை விநியோகஸ்தர் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் நம்ம அணி போட்டியிடும்.’ என்றார்.

உலக சமாதானத்திற்காக 100 கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கேற்றனர்

உலக சமாதானத்திற்காக 100 கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கேற்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100 Christmas Fathers participated for World Peace showசிங்காரச் சென்னை வாலிபர் ஐக்கியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நேரங்களில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சொல்வதோடு உலக சமாதானத்திற்காக பல்வேறு சமூக நிகழ்வுகளை செய்வது வழக்கம்.

இதில் குறிப்பிடும் படியாக கிறிஸ்மஸ் நாட்களில் அனைவராலும் வரவேற்கப்படும் சாண்டாகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தர்க்கள் பேரணி நடத்துவது விசேஷமான ஒன்று.

இந்தாண்டும் வழக்கம்போல 100 சாண்டாகிளாஸ் கலந்து கொண்ட கலக்கலான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. புதுவாழ்வு ஜெம்ஸ் சபையின் பிஷப் தயானந்தன் இந்த கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பேரணியை குரோம்பேட்டையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்ட சாண்டாகிளாஸ் தாத்தாக்கள் சிங்கார சென்னை வாலிபர் ஐக்கியத்தின் தலைவர் ஐசக்டேனியல் தலைமையில் சென்னை பாடியில் உள்ள சரவணாஸ்டோர்ஸ் துணிக்டையில் ஒன்று திரண்டனர்.

அங்கே பொதுமக்கள் முன்னிலையில் சுமார் ஒரு மணிநேரம் ஆடல் பாடல் நிகழ்சிகள் நடைபெற்றன. அதில் உலக சமாதானத்திற்கான குறுநாடகங்களும் இடம்பெற்றன. முடிவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு காரணமான இயேசுகிறிஸ்து பிறப்புக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஏற்கனவே, சிங்காரசென்னை வாலிபர் ஐக்கியம் சார்பில் 250 சாண்டாகிளாஸ் பேரணி நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

அதேபோல, உலகிலேயே மிக நீளமான பைபிள், மிகச்சிறிய பைபிள் உட்பட பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

100 Christmas Fathers participated for World Peace show

சஸ்பென்ஸ் படத்திற்கு சங்குசக்கரம் டைட்டில் ஏன்..? டைரக்டர் மாரிசன் விளக்கம்

சஸ்பென்ஸ் படத்திற்கு சங்குசக்கரம் டைட்டில் ஏன்..? டைரக்டர் மாரிசன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Maarisonகுழந்தைகளைப் மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன.

அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன.

இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்’.

இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போலவே இந்தப்படம் இருப்பதையும் உணர முடிகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்த லியோவிஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த சங்கு சக்கரம் படத்தை தயாரித்துள்ளார்கள்.

திலீப் சுப்பராயன், கீதா, ஜெர்மி ரோஸ் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.. இந்தப் படத்துக்கு ஷபீர் இசை அமைக்கிறார்.

திலீப் சுப்பராயன் இந்த படத்துக்காகவே ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் நடித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட குட்டீஸ்கள் நடித்துள்ளனர், பத்து பேரும் பத்து ரகம்.

இவர்கள் எல்லோரையும் சமாளித்து சமர்த்தாக வேலைவாங்கி அவர்களது சுட்டித்தனங்களை திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் மாரிசன். ஃபேண்டஸி ஹாரர் காமெடியாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் குட்டீஸ்கள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் இதில் காட்டியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் நாயகி கீதா படத்தில் பேயாக நடித்துள்ளார்.

இதற்காக அவர் படப்பிடிப்பில் பாதி நாட்கள் 20 நாட்களுக்கும் மேல் தரையில் இருந்ததை விட கயிறுகட்டி அந்தரத்தில் தொங்கிய நேரம் தான் அதிகம்..

ஆனாலும் அந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வலியை பொறுத்துக்கொண்டு நடித்துள்ளார். அதேபோல படத்தில் குட்டிப்பேயாக நடித்துள்ள பெண்ணும் தினசரி நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.

“சஸ்பென்ஸ் , திரில், சுவாரஸ்யம், கிண்டல் எல்லாம் கலந்த ஒரு சுழலில், அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில்.

படம் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள். அதனால் தான் ‘சங்கு சக்கரம்’ என டைட்டில் வைத்துள்ளோம் என்கிறார் இயக்குனர் மாரிசன்.

இந்தப்படத்தின் இயக்குனர் ரஞ்சித், மறைந்த தனது தந்தை மாரியின் நினைவாக தனது பெயரை மாரிசன் என மாற்றிக்கொண்டு இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு விஜய்யை தமிழுக்கு கொண்டு வரும் இருமுகன் இயக்குநர்

தெலுங்கு விஜய்யை தமிழுக்கு கொண்டு வரும் இருமுகன் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DRtYBqSV4AUaC93‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘காட்டேரி’ முதலான படங்களை தயாரித்து வருகிறார் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ. ஞானவேல்ராஜா.

இதனையடுத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்திலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார் இவர்.

இதில் நாயகனாக, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்ட நடிக்கிறார்.

தெலுங்கில் பிரபலமான ஹீரோவாக விளங்கி வரும் விஜய் தேவரகொண்டாவை இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

அருள்பதியை எதிர்த்தால் அதோ கதி; விஷால்-ஞானவேல்ராஜாவுக்கு டிஆர் எச்சரிக்கை

அருள்பதியை எதிர்த்தால் அதோ கதி; விஷால்-ஞானவேல்ராஜாவுக்கு டிஆர் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendar supports Arulpathi in Distributors Association Election and Oppose GnanavelRajaவருகிற டிசம்பர் 24ல் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்டத்தின் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் இரு முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன.

அதில் ஒன்று அச்சங்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் டி.எ.அருள்பதி அணி. மற்றொறு அணி சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் ஞானவேல்ராஜா.

இந்நிலையில் அருள்பதி அணியை சில தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி.எஸ்.தாணு, சுரேஷ் காமாட்சி ராதாகிருஷ்ணன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தற்போதைய பொறுப்பு தலைவர் செல்வின்ராஜ், நடிகர்கள் டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர் மற்றும் சேரன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பலரும் ஞானவேல்ராஜா இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என்பதை வலியுறுத்தி பேசினர். ஆனாலும் எல்லாருடைய தாக்குதல்களும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலை எதிர்த்தே இருந்தது.

நடிகர் சங்கம் பொறுப்பில் இருக்கும்போதே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது ஞானவேல்ராஜாவை பின்னால் இருந்து இயக்குவதாக விஷாலை குற்றம் சாட்டினர்.

கலைப்புலி எஸ்.தாணு, சேரன். எஸ்.வி.சேகர் மற்றும் செல்வின்ராஜ் ஆகியோர் பேசும் போது…

படங்கள் வெளியீட்டின் போது பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம் எனவும், பெரும்பாலான பேச்சு வார்த்தைகள் அருள்பதியின் தலையீட்டினால் சுமூகமாக முடிந்துவிட்டதாக கூறினர்.

மேலும் ஞானவேல்ராஜாவின் ‘கொம்பன்’, கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, ரஜினி முருகன் போன்ற படங்கள் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வெளியானது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள வைப்பு தொகையை எல்லாம் காலி செய்துவிட்டார்கள்.

நாங்கள் திருட்டு விசிடி ஒழிப்போம் என்றார்கள் அதையும் செய்யவில்லை.” என்றும் பேசினார்கள்.

இறுதியாக நடிகர் டி.ராஜேந்தர் பேசியதாவது…

தன்னுடைய படத்திற்கு ஒரு தனியார் தொலைகாட்சியிலிருந்து வரவேண்டிய பணத்திற்கு முன்பு இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தில், வசூல் செய்து தரும்படி தான் புகார் மனு கொடுத்திருந்ததாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அப்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பெற்றுத்தர முயற்சித்தும் கிடைக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் நான், டி. ராஜேந்தர் ஆகிய நான் போன் செய்தும் விஷால் போனை எடுப்பதில்லை.

அருள்பதியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதோ கதிதான்” என்று பேசினார் டிஆர்.

T Rajendar supports Arulpathi in Distributors Association Election and Oppose GnanavelRaja

arulpathi support team

More Articles
Follows