விஸ்வரூபம்2 டிரைலர் வதந்தி பற்றி கமல் கருத்து

விஸ்வரூபம்2 டிரைலர் வதந்தி பற்றி கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishwaroopam posterகமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் மிகப்பெரிய வெற்றி அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இன்னும் 2 வாரங்கள் சூட்டிங் மீதம் இருப்பதால், அதற்காக உக்ரைன் நாட்டுக்கு சென்று அங்கு லொக்கேஷன்களை பார்த்து வருகிறார்களாம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம்2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் கமல்.

இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகக்கூடும் என கூறப்பட்டு வரும் நிலையில், இதன் டிரைலர் வருகிற ஜீன் 23ஆம் ரம்ஜான் திருநாளில் ரிலீஸ் ஆகலாம் என செய்திகள் வந்தன.

இந்நிலையில் இதுகுறித்து தன் மறுப்பை தெரிவித்தள்ள கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
False news about trailer of VR2. RKFI is bound to inform admirers of progress. We facilitate Tamil VR2’s release. We own the Hindi rights

Kamal tweets regarding Vishwaroopam 2 trailer and its hindi rights rumours

தெலுங்கு சினிமாவில் இந்தியா-சூர்யா பெயரில் ஒரு படம்

தெலுங்கு சினிமாவில் இந்தியா-சூர்யா பெயரில் ஒரு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Allu Arjun New movie titled Naa Peru Surya Naa Illu Indiaதெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள DJ படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நா பேரு சூர்யா என் வீடு இந்தியா என்று பெயரிட்டுள்ள புதிய படத்தில் இவர் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் முக்கிய வேடத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கிறார்களாம்.

இவர்கள் இருவருக்குமே நெகட்டிவ்வான ரோல் என சொல்லப்படுகிறது.

Allu Arjun New movie titled Naa Peru Surya Naa Illu India

ரஜினி கட்சி பெயரில் அவரின் சூப்பர் ஹிட் படச்சொல்..?

ரஜினி கட்சி பெயரில் அவரின் சூப்பர் ஹிட் படச்சொல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini style stillsகடந்த 20 நாட்களாக காலா படத்தின் சூட்டிங்கில் நடித்து வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது சில நாட்கள் ஓய்வுக்காக சென்னை வந்துள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார்.

இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் ரஜினியின் கட்சி பெயர் மற்றும் கட்சி கொடி டிசைன் ஆகியவை பற்றிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

முக்கியமாக ரசிகர்களுடன் பேசும்போது போர் வரும்போது சந்திப்போம் என ரஜினி கூறியிருந்தால், கட்சிப் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பே படையப்பா என்ற வார்த்தை ரசிகர்களிடையே பிரபலமான ஒன்றுதானே… அப்போ அப்படியிருந்தால் நல்லதுதானே…

அஜித்துடன் ஆறாவது முறையாக இணைந்த நிறுவனம்

அஜித்துடன் ஆறாவது முறையாக இணைந்த நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith artசிவா-அஜித்-அனிருத் கூட்ட்டிணியில் வளர்ந்துள்ள விவேகம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கிட்டதட்ட வேதாளம் படம் வந்து 20 மாதங்கள் ஆகிவிட்டதால், தங்கள் தல நடிகரை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு உரிமையை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாம்.

இதற்கு முன்பு, அஜித் நடித்த பில்லா2, மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களின் இசை வெளியீட்டு உரிமையையும் இதே நிறுவனமே பெற்றிருந்தது.

தற்போது இந்த நிறுவனம் அஜித்துடன் 6வது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sony Music bagged the audio rights of Vivegam

ஜிவி. பிரகாஷ் பட இயக்குனருடன் இணையும் அதர்வா

ஜிவி. பிரகாஷ் பட இயக்குனருடன் இணையும் அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa stillகடந்த 2015ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி படத்தை குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.

தற்போது இதே நிறுவனம் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடித்து வரும் AAA படம் மற்றும் ஜீவா, நிக்கி கல்ராணி நடித்து வரும் கீ படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் அதர்வா நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இப்படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கவுள்ளது.

Atharvaas next with Director Sam Anton

sam anton‏ @samanton21

Happy to b associated with @Atharvaamurali brother and @MLAmichael sir for an Action thriller.. glory to god ..

???????????????????????????????????????????????????????????????

பிரியா ஆனந்துடன் காதல்…? என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.?

பிரியா ஆனந்துடன் காதல்…? என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthik stillsமணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.

இதனை தொடர்ந்து வை ராஜா வை மற்றும் முத்துராமலிங்கம் படங்களில் பிரியா ஆனந்துடன் ஜோடியாக நடித்தார்.

எனவே பிரியா ஆனந்துடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ரங்கூன் படத்தின் வெற்றி தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் கௌதம் கார்த்திக்.

அப்போது அவர் பேசியதாவது…

நான் சிப்பாய் , இவன் தந்திரன் , ஹரஹர மகா தேவகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்.

இப்போது “ நல்ல நாள் பார்த்து சொல்றேன் “ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன்.

அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ அக்னி நட்சத்திரம் “ ஒரு தரம்வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன்.

எனக்கு நடிப்பின் மேல் மிகப்பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் கடல். ரங்கூன் என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும், நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய கேரியர் இன்னும் சிறப்பாக அமையும்.

எப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான்.

 தற்போது அப்பா , மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். என்னை பொறத்தவரை அப்பா மிகப்பெரிய லெஜன்ட்.

அவர் நடித்ததில் எனக்கு கோகுலத்தில் ஒரு சீதை திரைப்படத்தில் வரும் “ கிரெடிட் கார்ட் “ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும்.

சினிமாவில் அப்பாவுக்கு மிகச்சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம் என்று சொல்லுவேன்.

அப்போது ப்ரியா ஆனந்த் காதல் குறித்து கேட்கப்பட்டது.

கடல் படத்தில் நடிப்பதற்கு முன்பே ப்ரியா ஆனந்தை நன்றாக தெரியும். அவருடன் தற்போது வரை உள்ளது நட்பு மட்டுமே.

நாளை என்ன நடப்பது என்பது தெரியாது. ஆனால் என் திருமணம் நிச்சயம் காதல் திருமணம்தான். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வேன்.

அது நடிகையாக இருக்கலாம். அல்லது வேறு ஒரு துறை சார்ந்த பெண்ணாக கூட இருக்கலாம்” என்றார்.

Gautham Karthik clarifies his love rumour with Priya Anand

More Articles
Follows