இணையத்தில் தர்பார் ஆட்சி; ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

இணையத்தில் தர்பார் ஆட்சி; ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal released Rajinis Darbar Motion poster ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்தை முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தர்பார் பட மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். இன்று கமல் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில், கமல், மலையாளத்தில்மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு, ஹிந்தியில் சல்மான் இந்த பட போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.

இத்துடன் தர்பார் தீம் மியூசிக்கும் வெளியானது.

இதில் ரஜினி போலீஸ் உடையில் மிக கம்பீரமாக இருக்கிறார். கையில் நீண்ட வாளுடன் ரத்தம் தெறிக்க புன்னகை செய்கிறார். அனிருத்தின் மியூசிக்கும் தெறி லெவலில் உள்ளது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருப்பது காட்சி ப்ரேம்களில் தெறிகிறது. ஆக இந்த பட டீசர் மற்றும் டிரைலர் வெளியானால் நிச்சயம் திருவிழா தான்.

தர்பார் திருவிழா, தர்பார், ரஜினி, தலைவா என்ற பல ஹேஷ்டேக்குகள் தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

இதனை ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

Kamal released Rajinis Darbar Motion poster

 

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிக்கும் லாக்கப்

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிக்கும் லாக்கப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lock up movie stillsசினிமா கலையை கற்றதோடு நில்லாமல் அந்த கலையில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் நித்தின் சத்யா.

தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான “ஜருகண்டி” படத்தை புதுமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தை புதுமுக இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார். SG சார்லஸ் இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான “லாக்கப்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சாண்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்

கலை – ஆனந்த் மணி

மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் “லாக்கப்” திரைப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

முன்னாள் கடற்படை வீரர் இயக்கிய ஆபரேஷன் அரபைமா-வில் டினி டாம்

முன்னாள் கடற்படை வீரர் இயக்கிய ஆபரேஷன் அரபைமா-வில் டினி டாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ex Navy veteran Prashs introduce Tini Tom in Operation Arapaimaதமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வில்லன்கள் கொடி கட்டிப்பறந்திருக்கிறார்கள்.

அன்றைய நம்பியார், அசோகன், வீரப்பாவில் ஆரம்பித்து இன்றைய ரகுவரன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் வரை வில்லன் நடிகர்களுக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அப்படி ரசிகர்கள் கொண்டாடப்போகும் ஒரு வில்லன் நடிகராக “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், டினி டாம்.

பஞ்ச பாண்டவர், பட்டாளம், பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட், இன்டியன் ருபி, பியூட்டிஃபுல், ஸ்பிரிட் உள்பட பல மலையாளப்படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் டினி டாம், ஆபரேஷன் அரபைமா படத்தில் ரகுமானுக்கு வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிய “கலாபவன் மணி”யைப்போலவே கலாபவனிலிருந்து உருவான திறமையான நடிகர் மற்றும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் டினி டாம்.

எனவே ஆபரேஷன் அரபைமா படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்கள் வரிசையில் டினி டாம் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் அரபைமா, படத்தின் இயக்குநர் ப்ராஷ், முன்னாள் கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ex Navy veteran Prashs introduce Tini Tom in Operation Arapaima

கதிர் & யோகிபாபுவின் ‘ஜடா’வுக்கு யுஏ சர்ட்டிபிகேட்; டிசம்பர் 6 ரிலீஸ்

கதிர் & யோகிபாபுவின் ‘ஜடா’வுக்கு யுஏ சர்ட்டிபிகேட்; டிசம்பர் 6 ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kathirs Jada Censored UA and movie release date is hereநடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் பொயட்ஸ்டுடியோ தயாரிக்கும் படம் “ஜடா”

இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நாயகியாக புதுமுக நடிகை ரோஷினி நடித்துள்ளார்.

பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்திருக்கிறாராம்.

யோகிபாபு வரும் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறதாம். விளையாட்டு கூடவே நகைச்சுவை சஸ்பென்ஸ் நிறைந்த படமாக இருக்கும்.

அனிருத் ஒரு பாடலை சாம் CS இசையில் பாடியிருக்கிறார்.

அப்பாடல் இந்த வருடத்தின் ஹிட் பாடலாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

படத்தின் வியாபாரமும் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

Kathirs Jada Censored UA and movie release date is here

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ பட ரிலீஸ் தள்ளிப்போனது

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ பட ரிலீஸ் தள்ளிப்போனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aditya Varma censored A and movie release postponedகிரிசாயா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’.

பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை மறுநாள் நவம்பர் 8ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே ப்ரொமோஷன் பணியில் விக்ரம் மகன் துருவ் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

இப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. அதை எப்படியாவது ‘யுஏ’ சான்றாக மாற்ற படக்குழு முயற்சித்தனர்.

தற்போது சென்சாரில் ஏ சான்றிதழ் தான் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் சரக்கு அடித்தல், புகை பிடித்தல், போதைப் பொருள் உட்கொள்ளுதல், முத்தக் காட்சி, வன்முறைக் காட்சி என அனைத்தும் கலந்து இருப்பதால் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 21ம் தேதி ஆதித்ய வர்மா வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Aditya Varma censored A and movie release postponed

கீழடி அகழாய்வு குறித்து தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி

கீழடி அகழாய்வு குறித்து தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director bharathi rajaகீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நன்றி அறிக்கை.

கீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக நன்றி அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே!

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம்.,அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,
சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.

அந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

தமிழரின் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதல்வரான தமிழர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,”ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.அதுவும் தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 1ம் தேதி அறிவித்துள்ளார்.

நமது தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

– பாசத்துடன்

உங்கள் பாரதிராஜா

More Articles
Follows