கடும் குளிர்; நடு ராத்திரி… ‘உரு’ படம் உருவான விதம்

கடும் குளிர்; நடு ராத்திரி… ‘உரு’ படம் உருவான விதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaiyarasan Dhanshika Uruகபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் கலையரசன், தன்ஷிகா இணைந்துள்ள படம் உரு.

இப்படம் அடுத்த வாரம் ஜீன் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

‘வையம் மீடியா’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் பேசும்போது…

‘‘உரு’ படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர். உருவத்தை சுருக்கி உரு என டைட்டில் வைத்துள்ளோம்.

இப்படத்தை கொடைக்கானலில் கடும் குளிரில் 40 நாட்கள் இரவில் படமாக்கினோம்.

கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி உள்ளிட்ட பலரும் ரொம்ப கஷ்டப்பட்டனர்.

அவர்களைவிட டெக்னீஷியன்கள் பாவம். அவ்வளவு கஷ்டப்பட்டு இப்படம் இப்போது ஒரு ‘உரு’ வாக வளர்ந்துள்ளது.” என்றார்.

‘மெட்ரோ’ படத்திற்கு இசையமைத்த ஜோஹன் இசையமைக்க, ‘பிச்சைக்காரன்’ பட ஒளிப்பதிவாளர் பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Kalaiyarasan Dhanshika starring Uru movie updates

விக்ரமுடன் இணையும் பாபி சிம்ஹா; என்ன கேரக்டர் தெரியுமா..?

விக்ரமுடன் இணையும் பாபி சிம்ஹா; என்ன கேரக்டர் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram bobby simhaதுருவநட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களை தொடர்ந்து சாமி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கவிருக்கிறார்.

இதில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

வில்லனாக அறிமுகமாகி அண்மைகாலமாக பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்து வருவது இங்கே கவனித்தக்கது.

ஷிபுதமீன்ஸ் இப்படத்தை பிரம்மாண்ட்டமாக தயாரிக்கவுள்ளார்.

Bobby simha plays baddie in Vikram’s Saamy2

சூர்யா-கார்த்தி-பாண்டிராஜ் கூட்டணியில் புதிய படம்

சூர்யா-கார்த்தி-பாண்டிராஜ் கூட்டணியில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director pandirajசூர்யா மற்றும் கார்த்தி அண்ணன் தம்பியாக இருந்தாலும் இதுவரை இவர்கள் படங்களில் இணைந்து நடிக்கவில்லை.

எனவே இவர்கள் எப்போது இணைவார்கள்..? என கோலிவுட்டில் கேள்விகள் வலம் வந்தன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜிவி. பிரகாஷின் செம ஆடியோ வெளியீட்டு விழாவில் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் ராஜசேகர் பாண்டியன் புது அறிவிப்பை தெரிவித்தார்.

சூர்யா தயாரிக்கவுள்ள புதுபடத்தில் கார்த்தி நடிக்க, அப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார் என்றார்.

Suriya will Produce Karthi’s next movie will be directed by Pandiraj

சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பேரரசு

சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and director perarasuதம்பி ராமையா மகன் உமாபதி நடிக்க, இன்பசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

இவ்விழாவில் பேரரசு பேசும்போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று அழைத்து புதிய பட்டத்தை கொடுத்தார்.

சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டாராக்கிய விஜய் பட தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டாராக்கிய விஜய் பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakarthikeyanதம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.வி.சேகர், பேரரசு, பொன்வண்ணன், இயக்குநர் விஜய், இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் விஜய்யின் புலி படத்தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் கலந்து கொண்டு பேசும்போது சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என அழைத்தார்.

அடுத்த லெவலுக்கு செல்லும் சூப்பர் ஸ்டாரின் ‘காலா’

அடுத்த லெவலுக்கு செல்லும் சூப்பர் ஸ்டாரின் ‘காலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajini shootதனுஷ் தயாரித்து ரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

கடந்த மாதமே இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு மே 28ஆம் தேதி இதன் சூட்டிங்கை மும்பையில் தொடங்கியது படக்குழு.

இதுவரை வசனம் மற்றும் பாடல் காட்சிகளை படம் பிடித்தார்களாம்.

நேற்று படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியதாக செய்திகளும் படங்களும் வந்துள்ளன.

இத்தகவலை இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்… தான் மிகவும் மதிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசியோடு இன்று முதல் ஸ்டண்ட் காட்சிகளை இயக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதன் ஆக்சன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சண்டைக் காட்சிகளை சிலவற்றை முடித்துவிட்டு சற்றுமுன் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.

Stunt Master Dhilip Subbarayan tweets about Kaala fight

rajini kaala fight

More Articles
Follows