ஹைப்பர்லிங்க் பாணியில் ‘மூன்றாம் கண்’.; விதார்த் – கலையரசன் – சந்தோஷ் கூட்டணி

ஹைப்பர்லிங்க் பாணியில் ‘மூன்றாம் கண்’.; விதார்த் – கலையரசன் – சந்தோஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், உருவாகும் திரில்லர் திரைப்படமான “மூன்றாம் கண்”.

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் திரைப்படம் “மூன்றாம் கண்”.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கொலையும் அதைச்சுற்றி நடக்கும் நான்கு சம்பவங்களும், பரபரப்பான திருப்பங்களுமாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், மிக சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது.

கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று, காட்சியளிக்கிறார்கள். மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்குகிறார்.

கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அசுரன், விடுதலை படப்புகழ் R.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

பின்னணி இசைக்கோர்வையை ராஜ்பிரதாப் செய்கிறார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்குக் கலை இயக்கம் செய்கிறார். இப்படத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.

விரைவில் போஸ்ட் புரடக்சன் துவங்கவுள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாகும்.

மூன்றாம் கண்

Kalaiyarasan Vidharth Santhosh Prathap starrer Moondram Kan

சுசி கணேசன் இயக்கிய உபி போலீஸ் ஸ்டோரி.; டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடல்

சுசி கணேசன் இயக்கிய உபி போலீஸ் ஸ்டோரி.; டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின் “தில் ஹெ கிரே” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது .

செப்டம்பர் 12 ம் தேதி world Premier ஆக திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆகிறது .

உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் வினித்குமார் சிங் , அக்‌ஷய் ஓபராய் , ஊர்வசி ரவ்ட்டேலா நடிதிருக்கிறார்கள் . எம் . ரமேஷ் ரெட்டி தாயாரித்திருக்கிறார் .

தில் ஹெ கிரே

கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல வாழும் இன்றைய சோசியல் மீடியா உலகத்தில் , அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் இப்படம் தேர்வானது குறித்து சுசி கணேசன் பேசும் போது…

“இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதிலும் , முதல் காட்சி , டொராண்டோ திரைப்டவிழாவில் திரையிடப்படுவது , உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது “ என்றார்.

பிரத்யேக காட்சியில் பங்கேற்பதற்காக , சுசி கணேசன் , இணை தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன் , நடிகை ஊர்வசி ரவ்ட்டேலா கனடா செல்கிறார்கள்.

NFDC – யின் “ இந்தியன் பெவிலியன் “ துவக்க விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் வெளியாகும் “ தில் ஹே கிரே” இத்திரைப்படவிழாவில் , வியாபார ரீதியாகவும் , கலை நயம் ரீதியாகவும் அழுத்தமான இடத்தைப் பிடிக்குமென எதிர்பாக்கப்படுகிறது.

ஊர்வசி ரவ்ட்டேலா

Dil Hay Gray will be screened in Tiff festival

AR RAHMAN CONCERT குளறுபடிகள்.; போலீஸ் விசாரணை.. கட்டணத்தை திருப்பி அளிக்க ACTC முடிவு

AR RAHMAN CONCERT குளறுபடிகள்.; போலீஸ் விசாரணை.. கட்டணத்தை திருப்பி அளிக்க ACTC முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை அருகே உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 40 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் மாறாக ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.

ரூ 2000 5000 10,000 விலையிலான டிக்கெட் அதிகப்படியாக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது .

முறையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு அமைக்கப்படாத காரணத்தினால் இருக்கைகளை ரசிகர்கள் தூக்கிச் சென்றனர். மேலும் டைமண்ட் பிளாட்டினம் என இருக்கைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் குளறுபடி காரணமாக வெவ்வேறு பிரிவுகளில் ரசிகர்கள் அமர்ந்தனர்.

மேலும் அங்கு முறையான பார்க்கின் வசதிகள் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இவை மட்டுமில்லாமல் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி அரங்கத்திற்கு வெளியே மிகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. எனவே போக்குவரத்து நெரிசல் காரணமாக முதலமைச்சரின் வாகனமும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடந்த இடத்தை தாம்பரம் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை செய்த பின் விவரங்கள் தெரியவரும்.

இந்த நிலையில் “இந்த குளறுபடிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.” என ஏ ஆர் ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து ஏ சி டி சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் ஏ ஆர் ரகுமான்.

AR Rahman concert issue Police enquiry at spot

கூடுதல் தகவல்..

ARR நிகழ்ச்சி – டிஜிபி உத்தரவு

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு;

இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு.

கூடுதல் தகவல்கள்…

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நோட்டீஸ்‌…!

இசை நிகழ்ச்சி குளறுபடி எதிரொலி ACTC ஏற்பாட்டாளர் ஹேம்நாத் மற்றும் அவரது மனைவி யாழினி மற்றும் மற்றும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆர்ச்சிட் உரிமையாளர் பூங்கொடி ஆகியோர் நேரில் ஆஜராக கானாத்துர் காவல் ஆய்வாளர் சதீஸ் உத்தரவு..

வெற்றிமாறன் – சூரி – சசிகுமாரை இணைக்கும் தனுஷ் – சிவகார்த்திகேயன் பட இயக்குநர்

வெற்றிமாறன் – சூரி – சசிகுமாரை இணைக்கும் தனுஷ் – சிவகார்த்திகேயன் பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விடுதலை – பாகம் 2’படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகிறது. இவர் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கிச்சட்டை’ மற்றும் தனுஷ் நடித்த ‘கொடி’ & ‘பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்

பெயரிடப்படாத இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார்.

இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள்.

சூரி - சசிகுமார்

மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொண்டிருக்கிறார். மல்டி ஸ்டார் நடிப்பில் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

துரை செந்தில்குமார் – வெற்றிமாறன் – சூரி – சசிகுமார் – உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

சூரி - சசிகுமார்

Vetrimaaran Soori Sasikumar Durai Senthillumar join hands together

OTT தளத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் சாதனை.; ECR சாலையில் SCARY ROOM அமைத்த ZEE-5

OTT தளத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் சாதனை.; ECR சாலையில் SCARY ROOM அமைத்த ZEE-5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘டிடி ரிட்டன்ஸ்’.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடிக்க, கூல் சுரேஷ், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார்.

‘டிடி ரிட்டன்ஸ்’.படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

டிடி ரிட்டன்ஸ்

இதையடுத்து ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் செப்டம்பர் 1-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், இதுவரை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வையளர்களை ஒரு சில நிமிடங்களில் கடந்து ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR road) உள்ள மெரினா மாலில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ஜீ5 நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடி ரிட்டன்ஸ்

‘DD Returns’ movie is new Recorded on the OTT platform

BREAKING OFFICIAL – THALAIVAR 171 ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

BREAKING OFFICIAL – THALAIVAR 171 ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.

இந்த படம் ஒரு மாதத்தை கடந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘தலைவர் 171’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தையும் ‘ஜெயிலர்’ பட தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு மேற்கொள்ள உள்ளார்.

இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. அந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் ‘தலைவர் 170’ படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாகவே ரஜினி நடித்த பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் மாறி மாறி தயாரித்து வருவது இங்கு கவனிக்கத்தக்கது.

Thalaivar 171 official announcement Lokesh will direct Rajinikanth

More Articles
Follows