3வது முறையாக இணையும் ‘கபாலி’ கலையரசன்-தன்ஷிகா

3வது முறையாக இணையும் ‘கபாலி’ கலையரசன்-தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaiyarasan Dhanshikaரஜினியின் கபாலி படத்தில் கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்தப் படத்தில் இவர்கள் ஜோடி இல்லையென்றாலும், காலக்கூத்து படத்தில் கலையரசன் ஜோடியாக தன்ஷிகா நடித்துள்ளார்.

மற்றொரு ஜோடியாக பிரசன்னா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர்.

நாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை சமீபத்தில் தனுஷ் வெளியிட்டார்.

இதனையடுத்து 3வது முறையாக கலையரசன், தன்ஷிகா ‘உறு’ என்ற படத்திற்காக இணைகின்றனர்.

விக்கி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு மெட்ரோ புகழ் ஜோஹன் இசையமைக்கிறார்.

பிச்சைக்காரன் படப்புகழ் பிரசன்னகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

காட்டுப்பகுதியை மையமாக கொண்டு த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாம்.

டிரம்ஸ் சிவமணி இதன் டைட்டில் ட்ராக்கை கவனித்து கொள்வார் என தெரியவந்துள்ளது.

டிசம்பர் 5ஆம் தேதி முதல் இதன் சூட்டிங் துவங்கப்பட உள்ளது.

கலையுலக ஆசான் கமல்ஹாசனை சந்தித்த ரஜினி

கலையுலக ஆசான் கமல்ஹாசனை சந்தித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalதிரையுலகை தாண்டியும் கடந்த 40 வருடங்களாக நட்பு பாராட்டி வருபவர்கள் கமல்ஹாசன்-ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையல்ல.

கமல்ஹாசனை தன் கலையுலக ஆசான் என ரஜினி அடிக்கடி கூறிவருவது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

கமல் வீட்டிற்கு ரஜினி சென்றுள்ளார். அங்குதான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இருவரும் தங்களின் அடுத்த படங்கள் பற்றி பேசியுள்ளனர்.

மேலும் இருவரது உடல்நிலை, ஆரோக்கியம் குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-வரலட்சுமி ஜோடி

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-வரலட்சுமி ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi varalakshmi‘ஸ்டுடியோ 9′ சுரேஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்ட படம் ‘வசந்தகுமாரன்’.

இதில் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க, ஆனந்த் குமரேசன் இயக்கவிருந்தார்.

தொடங்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் நின்றது.

அதில் ஜோடியாக நடிக்க காத்திருந்த விஜய்சேதுபதி மற்றும் வரலட்சுமி தற்போது ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.

இதில் மாதவன்-ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகிய இருவரும் மற்றொரு ஜோடியாக இணைகின்றனர்.

ஓரம் போ, வா படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி இப்படத்தை இயக்குகின்றனர்.

விக்ரம் வேதா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

மாதவன் போலீஸாகவும், விஜய்சேதுபதி டானாகவும் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் கிருமி படப்புகழ் கதிர் நடிக்கிறார்.

வினோத் ஒளிப்பதிவு செய்ய ஷாம் இசையமைக்கிறார்.

டிரைடண்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

பிரிட்டன் வரை சீறிப்பாயும் சிங்கம்

பிரிட்டன் வரை சீறிப்பாயும் சிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam suriyaசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3’ (‘எஸ் 3’) பட டீசர் சமீபத்தில் வெளியாகி குறுகிய காலத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இணையத்தில் சாதனை படைத்து வருகிறது.

விரைவில் இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

படம் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி (அதாவது சரியாக இன்னும் 30 நாட்களில்) வெளியாகவிருக்கிறது.

எனவே, தற்போதே இதன் வியாபாரம் சீறி பாய்ந்து வருகிறது.

இதன் தமிழக ரிலீஸ் உரிமையை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய விலையை கொடுத்து பிரபல நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.

மீண்டும் ‘பிச்சைக்காரன்’ ஆகும் விஜய் ஆண்டனி?

மீண்டும் ‘பிச்சைக்காரன்’ ஆகும் விஜய் ஆண்டனி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyஇசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, அதில் வெற்றி வாகை சூடி வருகிறார்.

இவர் நடித்துள்ள சைத்தான் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது ஜீவா ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் எமன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸாகி தமிழ் மற்றும் தெலுங்கில் சக்கை போடு போட்ட பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தையும் அதன் இயக்குனர் சசியே இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara 55ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் பிறந்த நாள் வரும்போது, அவர்களின் படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய நினைக்கின்றனர்.

ஒருவேளை படங்கள் இல்லாவிட்டாலும், பட பாடல்கள், டீசர், பர்ஸ்ட் லுக், ட்ரைலர் என எதையாவது ரிலீஸ் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இது பெரும்பாலும் நடிகர்களுக்கே அமையும்.

தற்போது முதன்முறையாக நயன்தாரா படத்திற்கும் இதுபோன்ற ஏற்பாட்டை செய்துள்ளார் படத் தயாரிப்பாளர்.

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 55வது படம் உருவாகிவருகிறது.

இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 17ஆம் தேதி தொடங்கும்போது நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தன் முதல் படைப்பாக தயாரிக்கிறார்.

More Articles
Follows