விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் விஜய்யின் ராசி நாயகி..!

விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் விஜய்யின் ராசி நாயகி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal Aggarwal Pairs Up with Vijay's Popular villainதுப்பாக்கி, ஜில்லா ஆகிய இரு படங்களில் விஜய்க்கு நாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால்,

இந்த இரு படங்களும் சூப்பர் ஹிட்டானதால் விஜய்யின் ராசியான நாயகி என கூறப்பட்டவர் காஜல்.

இவர் தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்தவருக்கு நாயகியாக போகிறாராம்.

‘புலி’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்கிறார் காஜல்.

பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் ‘நட்சத்திரம்’ என்ற படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது.

இவர்களுடன் சந்தீப் மற்றும் ரெஜினா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya to Play Guest Role in CH-28 - II Inningsமாசு என்ற மாசிலாமணி படத்திற்காக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து பணியாற்றினர்.

இப்படம் படுதோல்வியை சந்திக்கவே, சூர்யா தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

விக்ரம் குமார் இயக்கிய 24 படம் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து, ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கி வரும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.

ஆனால் அது என்ன மாதிரியான கேரக்டர் என்பது மட்டும் படு ரகசியமாம்.

அமெரிக்க மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார்…?

அமெரிக்க மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Hospitalized on Makeup Issueஇரண்டு வாரங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.

அவர் திரும்பி வந்ததும், கபாலி பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி அவரது தலைமையில் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் ரஜினி வரமுடியாது என்பதால் விழாவினை ரத்து செய்துவிட்டு, படத்தின் பாடல்களை இணையத்தில் வெளியிடவிருக்கின்றனர்.

இதனிடையில் நீண்ட நாட்களாக ரஜினி அமெரிக்காவில் தங்கியிருப்பதால், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அங்கு தங்கியிருப்பதாக ஒரு செய்தி பரவியது.

இதுகுறித்து விசாரிக்கையில்… “நல்ல உடல் நலத்துடன் ரஜினி இருக்கிறாராம்.

மேலும் ஓய்வுக்காக மட்டும் ரஜினி அங்கு செல்லவில்லையாம்.

ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் சில மேக்கப் டெஸ்ட்டுக்களுக்காகவும் அங்கு இருக்கிறார்.

ஒரு தற்காப்புக்காக இந்த மேக்கப் டெஸ்ட் அமெரிக்கவில் உள்ள பிரபல மருத்துவமனையில் நடைபெறுகிறதாம்.

அப்போது ரஜினியுடன் ஷங்கர், தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினரும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷுக்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்..!

ஜி.வி. பிரகாஷுக்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush's 'Amma Kanakku' postponed to June 24அடுத்த வாரம் ஜூன் 17ஆம் தேதி மூன்று முக்கிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டன.

  • தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள அம்மா கணக்கு.
  • சுந்தர் சி தயாரித்து பூனம் பஜ்வாவுடன் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா
  • லைகா தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

இவை மூன்றும் வெவ்வேறு விதமான கதைக்களத்தை கொண்ட படங்கள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தன.

ஆனால் இந்த ரேஸில் இருந்து தற்போது தனுஷ் விலகிவிட்டாராம்.

அம்மா கணக்கு படத்தை ஜூன் 24ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அட… கீர்த்தி சுரேஷ் கைவசம் இப்படி ஒரு தொழில் இருக்கே…!

அட… கீர்த்தி சுரேஷ் கைவசம் இப்படி ஒரு தொழில் இருக்கே…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh Designs her Dress Ownமார்க்கெட் இருக்கும்போதே நடிகைகள் மற்ற துறைகளிலும் கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு காரணம், சினிமா மார்கெட்டை இழந்துவிட்டால் மற்ற துறையாவது கைகொடுக்குமே என்பதுதான்.

பல நடிகைகள், ரியல் எஸ்டேட், நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதுப்போல் சிலர் பேஷன் டிசைன் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொடரி படத்தின் பாடல்கள் வெளியீட்டின் போது கீர்த்தி சுரேஷ் அழகான வெள்ளை நிறை ஆடை உடுத்தி தேவதை போல காட்சியளித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் கீர்த்தி கூறியுள்ளதாவது…

“நானே இந்த ஆடையை டிசைன் மற்றும் ஸ்டைலிங் செய்துள்ளேன். எனக்கு மிகவும் சந்தோஷமாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அட… கீர்த்திக்கு பேஷன் டிசைனிங்கும் கைகொடுக்கும் போலவே…

தல கொடுக்காததை முருகதாசுக்கு கேப்டன்தான் கொடுத்தாராம்..!

தல கொடுக்காததை முருகதாசுக்கு கேப்டன்தான் கொடுத்தாராம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Murugadoss About Dheenaஅஜித்தை இன்று அனைவரும் தல என்று அழைப்பதற்கு காரணமாக அமைந்தவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

இவரின் இயக்கத்தில் உருவான தீனா இருவருக்கும் நிறைய வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

எனவே, இவர்கள் இருவரும் மீண்டும் இணையமாட்டார்களா? என திரையுலகம் எதிர்பார்த்து வருகின்றது.

இந்நிலையில், தீனா பற்றி முருகதாஸ் மனம் திறந்து ஒன்றை தெரிவித்துள்ளர்.

‘தீனா படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஆனால் அதில் அஜித்துக்கு கிடைத்த பெயர் கூட எனக்கு கிடைக்கவில்லை.

அதன்பின்னர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய ரமணா தான் எனக்கு பெரும் பேரை பெற்றுக் கொடுத்தது.

என் பெயரும் ரசிகப்பெருமக்களுக்கு நன்றாக தெரிந்தது’ என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows