தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்து இருந்தார் நடிகர் விஜய்.
அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடி 40 லட்சம் பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார்.
எனவே அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளது.
அதன்படி, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாயை வருமானத்தை நடிகர் விஜய் கணக்கில் காட்டவில்லை என தெரிய வந்தது.
எனவே வருமானத்தை மறைத்த காரணத்திற்காக ஜூன் மாத இறுதியில் ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.
இதனையடுத்து தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.
மேலும் அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவிட்டு இருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் விஜய்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்தார் நீதிபதி அனிதா சுமந்த்.
அவரது உத்தரவில்.. நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Tax evasion case: Interim stay on penalty imposed on Actor Vijay by IT