தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளைய தலைமுறை இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி பெரும் எதிர்பார்ப்பு உள்ளாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பாடல்கள் இணையத்தில் வெளியாகி ‘நெருப்பாக’ பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாடல்கள் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்த சூப்பர் ஸ்டார் தங்கள் நடிகர்தான் என கூறிவரும் சில ரசிகர்களுக்கு
நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துருக்கேன்னு சொல்லு என்று ரஜினி ஸ்டைலில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் இப்படத்தின் பாடல்களை பஞ்ச பூதங்களுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார்.
பாடல்களும் அதன் ஒப்பீடும்…
- உலகம் ஒருவனுக்கா – நிலம்
- மாய நதி –நீர்
- வீரா துறந்தாரா – காற்று
- வானம் பார்த்தேன் – வானம்
- நெருப்பு டா – தீ என குறிப்பிட்டுள்ளார்.