தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள கபாலி படத்தின் பாடல்கள் நாளை ஜீன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.எனவே, ரஜினி ரசிகர்களின் ஆவல் கட்டுங்கடங்காத அளவில் பெருகி வருகிறது.
இதில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள ‘நெருப்புடா’ என்ற பாடல் மிகுந்த எதிர்பார்ப்ப உருவாக்கியுள்ளது.இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ‘நெருப்புடா பாடலின் 30 நொடி ஓடக்கூடிய ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.
அந்த பாடல் வரிகள்..
நெருப்புடா நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்!
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியற நூலா நீ
தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பற கபாலீ…
என்று வரிகள் கொண்ட பாடல் அனலாய் பறக்க செய்கிறது.
மேலும்….
“நான் வந்துன்டேன்னு சொல்லு… திரும்பி வந்துடேன்னு…. 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனானோ கபாலி, அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு.. கபாலிடா.. என்று ரஜினி பேசும் பன்ச் டயலாக்குகளும் வெளியாகியுள்ளது.
இது கபாலி குழுவினரை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.