தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. இனி ஆயுத பூஜை விடுமுறை நாட்களை குறிவைத்து படங்களை வெளியிட தயாராகி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
இதுவரை ஆயுதபூஜைக்கு 4 படங்கள் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது.
இத்துடன் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள சண்டக்கோழி-2 திரைப்படமும் வெளியாகிறது.
இவையிரண்டும் ஹீரோக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன.
இத்துடன் ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 2 படங்களும் வெளியாகிறது.
தனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் வெளியாகிறது.
அத்துடன் ஜே.எஸ்.கே. தயாரிப்பில் வேல்மதி இயக்கியுள்ள ஸ்ரேயா ரெட்டியின் நடித்துள்ள அண்டாவக் காணோம் படமும் வெளியாகிறது.
Kaatrin Mozhi and Andava Kaanom movies clash on 18th Oct 2018