பெரிய பட பட்ஜெட்டில் 40%… சின்ன பட பட்ஜெட்டில் 10% தொகையில் படத்தை வாங்கும் OTT தளங்கள்..; ரகசியம் உடைக்கும் தயாரிப்பாளர் JSK

பெரிய பட பட்ஜெட்டில் 40%… சின்ன பட பட்ஜெட்டில் 10% தொகையில் படத்தை வாங்கும் OTT தளங்கள்..; ரகசியம் உடைக்கும் தயாரிப்பாளர் JSK

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer jskஅனைவருக்கும், வணக்கம்!
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை!

OTT
சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது.

அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை… பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது.

அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈட்டித் தரக்கூடிய வியாபார விளம்பரங்களையோ, யுத்திகளையோ அவர்கள் கையாள்வதில்லை.

காரணம், இலவசமாக கிடைக்கக்கூடிய ஒரு பங்கு சதவீத படங்கள். அதையும் மீறி சிபாரிசுகளுக்கு பின், ஒரு சில சிறிய திரைப்படங்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.

அதன் உண்மை நிலைமை, அந்த படத்தின் மொத்த உரிமையும் எக்ஸ்க்ளுசிவ் என்ற பெயரில் வாங்கப்படுகிறது.

வருத்தத்திற்குரிய செய்தி… அந்த படங்களின் மொத்த உரிமையும், மொத்த பட்ஜெட்டில் 40% மட்டுமே விலை கொடுத்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. காரணம், தயாரிப்பாளர் தான் போட்ட முதலை எப்படி ஈட்டெடுப்பது என்று தெரியாத ஒரு சூழலில், வந்தவரை போதும் ஓரளவு காப்பாற்றப்படுவோம் என்று நினைத்து, வேறு நிலை இல்லாத சூழ்நிலையில் அந்த படங்கள் கொடுக்கப்படுகிறது.

சாட்டிலைட் உரிமை
இதுவும் விதி விலக்கல்ல… தனியார் சேனல்கள், பெரிய நடிகர்களின் படங்கள்… குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிகர்களின் படங்கள்… பெரிய நிறுவனங்களின் படங்கள்… இவை மட்டுமே வியாபாரமாகிறது என்று சொல்லப்படுகிறது.

அதையும் மீறி பல சிபாரிசுகளுக்கு பிறகு, ஏதேனும் ஒரு சிறு படம் வாங்கப்பட்டால் அதன் மொத்த உரிமையும் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 10% மட்டுமே கொடுக்கப்பட்டு, எக்ஸ்க்ளுசிவ் ரைட்ஸாக திரையரங்கு வெளியீட்டை தவிர அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்ற அவலநிலைதான் உள்ளது.

திரையரங்குகள்
கடந்த காலங்களிலும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி… கடந்த காலத்தைவிட வரும் காலம் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து. அவர்களுடைய படத்தை வெளியிடும்போது காட்சிகள் பெறுவதே மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையைத்தான் சந்திக்கப் போகின்ற ஒரு சூழலாக அமையும் எனத் தெரிகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், நான் எனது சொந்த OTT தளத்தை உருவாக்கி உள்ளேன். அந்த தளத்தில் வரும் 28ம் தேதி ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை நேரடியாக உலகெங்கும் திரையிடுகிறேன்.

எனக்கு நன்றாகவே தெரியும் கிட்டதட்ட வட்டி இல்லாமல் நான்கு கோடி ரூபாய் அசல் உள்ள இந்த படத்தை இப்படி ஒரு பெரிய ரிஸ்க் எடுத்துக் கொண்டு, முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கையிலும் மீட்டு எடுப்போம் என்று நம்பிக்கையிலும் JSK Prime Media என்ற OTT தளத்தில் திரையிடுகிறேன்.

நண்பர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குமாறும், வரும் காலத்தில் இந்த தளத்தை ஒரு வெற்றிகரமான தளமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வளவு முதல் கொண்ட ஒரு திரைப்படத்தை திரையிடுகிறேன்.

இந்த தளத்தின் வெற்றி, வரும் நாட்களில் அனைவருக்கும் பயனுள்ள ஒரு சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் JSK Prime Media என்ற OTT தளத்தை உருவாக்கி உள்ளேன். என்னை அடையாளம் கண்டு அங்கீரித்து பெயர் வாங்கி கொடுத்த திரையுலகிற்காக இன்று நான் விதைக்கும் விதை வருங்காலத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. தங்களது முழு ஆதரவை வழங்கி வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் JSK Prime Media App-யை டவுன்லோடு செய்து ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவளித்து வலுசேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

‘அண்டாவ காணோம்’ உங்கள் அனைவரையும் நிச்சயமாக சிரித்து மகிழ வைக்கும். தரமான படமாக இருக்கும்.

OTT தளத்தில் கோலோச்சி இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சாமானியனாக பயணிக்க முடிவுசெய்துள்ளேன். அதில் வெற்றியும் பெறுவேன் என்று மனதார நம்புகிறேன்.

உங்கள் ஆதரவை எதிர்நோக்கி…
அன்புடன்
JSK சதீஷ்குமார்

JSK Prime Media App – ன் சிறப்பம்சங்கள்:

IOS, Android, Fire Stick, Smart Tv, Web Browser போன்ற‌வ‌ற்றில் எளிமையான‌ முறையில் பதிவிறக்கம் செய்யும் வ‌கையில் அறிமுக‌மாகிற‌து.

JSK Prime Media App – யை பதிவிறக்கம் (Download) செய்து தங்களது விபரங்களை பதிவு (Sign Up) செய்தப் பின் Sign In செய்து உங்களுக்கு பிடித்தமான படங்களை கண்டு மகிழுங்கள்.

சப்ஸ்கைரப் செய்த உடன் சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி எப்போதும் கண்டுகளிக்கும் வ‌கையில் 50 திரைப்ப‌ட‌ங்களை இல‌வ‌ச‌மாக‌ காணலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த 50 படங்களுக்கு பதிலாக வேறு 50 படங்கள் சுழற்சி முறையில் புதிதாக மாற்றப்படும்.

புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்கள் எக்ஸ்க்ளுசிவ் ஆக வெளியிடப்படும். புதியதாக வெளியிடும் திரைப்படங்களுக்கு அந்தந்த திரைப்படங்களின் தன்மைக்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

அந்த வகையில் முத‌லாவ‌தாகJSK FILM CORPORATION தயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குனர் சி.வேல்ம‌தி இய‌க்க‌த்தில் ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வரும் ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்படுகிறது. ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை ரூ.100 மட்டுமே செலுத்தி எக்ஸ்க்ளுசிவ் – ஆக குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

நிச்சயமாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும்.
இந்த படத்தை தொடர்ந்து வரும் நாட்களில் புத்தம் புதிய எக்ஸ்க்ளுசிவ் திரைப்படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிடப்படும்.

‘சூரரைப் போற்று’ OTT ரிலீஸ்.; சூர்யாவுக்கு நஷ்டம் தான் : தயாரிப்பாளர் தனஞ்செயன்

‘சூரரைப் போற்று’ OTT ரிலீஸ்.; சூர்யாவுக்கு நஷ்டம் தான் : தயாரிப்பாளர் தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya dhananjayanசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டடித்துள்ளது.

கடந்த மே மாதம் படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படம் ரிலீஸ் தள்ளி போனது.

150 நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் படத்தை ஆன்லைனில் வெளியிடுவதாக அறிவித்தார் சூர்யா.

ஏற்கெனவே இவரின் மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்த போதே தியேட்டர்கள் உரிமையாளர் எதிர்ப்பை வாங்கி கட்டிக் கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் இந்த அதிரடி முடிவு குறித்து பிரபல சேனலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்துள்ள பேட்டியில்….

‘சூரரைப் போற்று’ படம் பிரம்மாண்டமான படம். அது ஓடிடி.க்கான படமே இல்லை. தியேட்டரில் வெளியிட வேண்டும்.

ஆனால் தியேட்டர்கள் திறப்பது எப்போது என யாருக்கும் தெருயவில்லை. துபாய், மலேசியா நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டும் 5% ஆடியன்ஸ் மட்டுமே வருகின்றனர்.

இதனால் எவருக்கும் லாபமில்லை.

கொரோனா தடுப்பூசி வரும்வரை மக்களிடம் பீதி இருக்கத்தான் செய்யும்.

நிச்சயமாக சூர்யாவின் முடிவு அவருக்கு நஷ்டம் தான். தியேட்டரில் ரிலீஸ் செய்தால் பெரிய லாபத்தை அடைவார்.”

இவ்வாறு தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சரண்யா பொன்வண்ணனின் தந்தையும் மலையாள பட இயக்குனருமான ஏபி ராஜ் காலமானார்

சரண்யா பொன்வண்ணனின் தந்தையும் மலையாள பட இயக்குனருமான ஏபி ராஜ் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் மலையாள பட இயக்குனரும் , நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையுமான ஏ.பி.ராஜ் காலமானார். (வயது 95)

முக்தா சகோதரர்களின் நெருக்கமான நண்பர் ஆவார்.

தற்போதைய தமிழ் சினிமாவின் அம்மா நடிகை சரண்யா பொண்வண்ணனின் தந்தை ஆவார்.

“தேன் மழை” படத்தை மலையாளத்தில் Remake 1967 இயக்கியவர்.

மலையாளத்தில் மட்டும் 1963 – 1984 களில் 65 படங்களை இயக்கியிருக்கிறாராம்.

பல சிங்கள படங்களையும் இயக்கி இருக்கிறார்.

தமிழில் ‘கை நிறைய காசு’ படத்தை இயக்கியவர்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

Antony Basker Raj (21 April 1925 – 23 August 2020), also known as A. B. Raj or A. Bhaskar Raj (in Sinhala Cinema), was an Indian director of Malayalam movies. Since 1951 to 1960, he directed ten Singalese (Sinhala) movies followed by directing 65 Malayalam movies from 1963 till 1984.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi Stalin - Arunraja Kamarajபல வெற்றி படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கனா’ படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

“Article 15” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக இப்படம் உருவாகவுள்ளது. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கின்றார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

BREAKING சினிமா & டிவி சூட்டிங் நடத்த மத்திய அரசு அனுமதி; நிபந்தனைகள் என்ன?

BREAKING சினிமா & டிவி சூட்டிங் நடத்த மத்திய அரசு அனுமதி; நிபந்தனைகள் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil movie shooting*திரைப்படங்கள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.*

*மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். சில நெறிமுறைகள் பின்வருமாறு…*

*படப்பிடிப்புக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.*

*படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.*

*படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.*

*உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.*

*உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கையுறை கட்டாயம் அணிய வேண்டும்.*

*படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.*

*குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.*

*படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.*

*வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.*

கார்த்திக் சுப்புராஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ‘பூமிகா’

கார்த்திக் சுப்புராஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ‘பூமிகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya rajesh karthik subbarajஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ராபர்ட் ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க படத்தொகுப்பாளாராக ஆனந்த் பணிபுரிகிறார்.

‘பூமிகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார்.

மோஷன் போஸ்டரைப் பார்க்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்டுப்பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் ஏற்கெனவே ஐஸ்வர்யா ராஜேஷ், அபய் தியோல், உள்ளிட்டோரை வைத்து ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தை இயக்கினார்.

இன்னும் இத்திரைப்படம் திரைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows