கதாநாயகனாக நடிக்கும் விவேக்கு கைகொடுக்கும் சிம்பு-விஷால்-கார்த்தி

கதாநாயகனாக நடிக்கும் விவேக்கு கைகொடுக்கும் சிம்பு-விஷால்-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ezhumin poster‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்கியிருக்கும் படம் எழுமின்.

வையம் மீடியாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 21-ஆம் தேதி நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி-யில் இணைந்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி-யில் இணைந்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balaji and Nanjil Sampathரேடியோவில் ஆர்.ஜே. வாக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

சில தினங்களாக இவர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

அது அரசியல் கட்சி இல்லை ஏதாவது பட அறிவிப்பாக இருக்கும் எனவும் சிலர் கருத்து கூறி வந்தனர்.

அதன்படி அவர் கதை எழுதி நாயகனாக நடிக்கும் எல்கேஜி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த எல்கேஜி என்ற தலைப்பில் கட்சி கொடியை போன்று வண்ணங்களும் ஜல்லிக்கட்டு காளை படமும் இடம் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் பேசப்போகும் இப்படத்தில் அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத் நடிக்க, படத்தின் நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

ஒரு டீ கடை வைத்து தற்போது நாட்டின் முதல்வராக உயர்ந்துள்ள நரேந்திர மோடி கதையை சித்தரிக்கும் வகையில், ஆர்.ஜே.பாலாஜி ஒரு டீ கடையில் இருப்பதும், அதன் பின்னர் பாராளுமன்ற வாசலில் அவர் நிற்பதும் போன்ற படங்களை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரமாதேவி-யாக அசத்தும் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக் படங்கள்

வீரமாதேவி-யாக அசத்தும் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

veerama devi first look posterஆபாச படங்களில் நடித்து ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வந்தவர் நடிகை சன்னி லியோன்.

தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் உருவானாலும் கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதற்கு முக்கிய காரணம் சன்னி லியோனுக்கு இந்தியாவில் இருக்கும் மவுசுதான் என கூறப்படுகிறது.

தமன்குமார்-மியாஸ்ரீ இணையும் கண்மணி பாப்பா

தமன்குமார்-மியாஸ்ரீ இணையும் கண்மணி பாப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanmani paapaவனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ள திரைப்படம் “கண்மணி பாப்பா”

நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம்.

கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார்.

அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார்.

ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார்.

அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது.

இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன்.

தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும் போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள்.

எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன?, அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?, குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றை எல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? என்பதை முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி.

இப்படத்தில் “தொட்டால் தொடரும்”, “சட்டம் ஒரு இருட்டறை ”, “6 அத்தியாயங்கள்” போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி பாப்பாவாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

M A ராஜதுரை ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, கிருஷ்ணமூர்த்தி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய்தேவ் இசையமைப்பில், பாடல்களை M C சாரதா, சிவசங்கர் எழுதியிருக்கிறார்கள். நடன இயக்குநராக மது, பாம்பே பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஸ்டண்ட் இயக்குநராக S R முருகன் பணிபுரிந்துள்ளார்.

தன் 78 வயது ரசிகை சாந்தாவுக்கு ரஜினி தந்த கௌரவம்

தன் 78 வயது ரசிகை சாந்தாவுக்கு ரஜினி தந்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. வயது 78.

தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.

ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், தலைவர் ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.

இது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று தலைவர் ரஜினியிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சாந்தா அம்மாவை தன் இல்லத்துக்கு இன்று வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது களப்பணிக்கு கவுரவம் தந்தார்.

தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் படத்திற்கே ஏற்பட்ட வில்லங்கம்

தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் படத்திற்கே ஏற்பட்ட வில்லங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “ .

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள

இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

இதில் விஷால், அர்ஜுன், இயக்குனர் மித்ரன், எடிட்டர் ரூபன், கலை இயக்குனர் உமேஷ், நடிகர் காளி வெங்கட், ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ், பொன் பார்த்திபன், காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார்.

விழாவில் விஷால் பேசியது :-

இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன்.

படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார்.

இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும். தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது.

ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது.

படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நன்றி என்றார் விஷால்.

விஷாலுக்கு வில்லனாக நடித்தது எனக்கு மகிழ்ச்சிதான்… : அர்ஜீன்

விஷால் அர்ஜீன் இணைந்து நடித்து வெளியானஇரும்புத்திரை படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகர் அர்ஜுன் பேசியது : இரும்புத்திரையை பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி.

நானும் விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர் தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். விஷால் என்னிடம் இயக்கம் தான் கற்க வந்தார்.

ஆனால் ஒருமுறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் அதில் நடித்தார்.

அதை பார்த்ததும் விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும் போது கூறினேன்.

அவரும் விஷாலை வைத்து செல்லமே படத்தை தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான ஹீரோவாக, தயாரிப்பாளராக, நடிகர் சங்க பொது செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். சந்தோஷமாக உள்ளது.

இன்று அவருடைய படத்தில் அவருக்கு வில்லன்னாக நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.

நான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஷங்கர் புதுமுக இயக்குநர் தான். அதே போல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார் என்றார் அர்ஜுன்.

More Articles
Follows