தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆபாச பேச்சு யூடியூபர் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இருவருக்கும் அவர்களது தரப்பில் ஜாமீன் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
ஆபாச பேச்சுக்கு உடந்தையாக இருந்த அவனது மனைவி கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
8 மாத கைக்குழந்தை இருப்பதால், குழந்தையின் உடல் நலனை சுட்டிக்காட்டி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால், வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அழிப்பதற்கும் வாய்ப்பிருப்பதால் பூந்தமல்லி சிறையில் இருக்கும் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது.
Youtuber Madan bail rejected by court