தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’.
ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
மலையாளத்தில் ‘ஆகாசம்’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் பெரும்பாலான பாடல்களை கிருத்திகா என்பவர் எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் & டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி வெளியாக உள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது சென்னை வடபழனி ஃபோரம் மாலில் நடந்து வருகிறது.
இந்த விழாவில் பட குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பாடலாசிரியை கிருத்திகாவிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர் ஜே விக்னேஷ் ஒரு கேள்வி கேட்டார்.
“இந்தப் படத்துல நீங்க எழுதுன பாட்டுல எது உங்களுக்கு பிடிக்கும்? என்ற கேள்வியை கேட்டார்.
அதற்கு கிருத்திகா பதிலளிக்கையில்…
“உங்கள் அம்மாவிடம் நீங்கள் பெற்ற குழந்தைகளில் எந்தக் குழந்தை பிடிக்கும்? என்று கேட்டால்.. உங்கள் அம்மா என்ன சொல்லுவாரோ அதுவே என் பதில் என நெத்தியடியாக பதில் அளித்தார் கவிஞர்.