விஜய் ஆண்டனி-ஆர்யா-கிருத்திகா பங்கேற்ற சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ்

விஜய் ஆண்டனி-ஆர்யா-கிருத்திகா பங்கேற்ற சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony and kiruthika udhayanidhiசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

நடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.

ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.

நான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

இங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடல்பயிற்சி செய்வார். நாம் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.

விமல்-சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா-ஆனந்தராஜ்

விமல்-சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா-ஆனந்தராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vimal and poornaசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.

விமல் கதாநாயகனாக நடிக்கிறார்… நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.. மற்றும்.

ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – நடராஜன் சங்கரன்

பாடல்கள் – விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட் – ரமேஷ்.

எடிட்டிங் – தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி

தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

படம் பற்றி இயக்குனர் கேட்டோம்..

வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல் சிங்கம்புலி இருவரும் அதிகப் படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல் சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த,வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான் பூர்ணா கோஷ்டி துரத்த. தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த. ஒரே துரத்தல் மயம் தான்.

இதை கிளாமர் ஹூயூமர் என்று கலந்து கட்டி இருக்கோம் என்றார் இயக்குனர் AR.முகேஷ்.

தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் படி அக்டோபரில் 18 படங்கள் ரிலீஸ்

தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் படி அக்டோபரில் 18 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vishalவிஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி கடிதத்தை பெற்ற பிறகே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என நடைமுறை அமுலில் உள்ளது.

அதன் அடிப்படையில் இந்த அக்டோபர் மாதம் கிட்டதட்ட 18 படங்களை தேதி நிர்ணயித்து தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் படங்களின் விபரம் வருமாறு

அக்டோபர்: 96

அக்டோபர்: ராட்சசன், நோட்டா

அக்டோபர் 12 : ஆண் தேவதை, கூத்தன், மரகதகாடு, முகம், நட்புன்னா என்னனு தெரியுமா, காட்டுப்புறா

அக்டோபர் 17 : வடசென்னை,

அக்டோபர் 18 : சண்டக்கோழி 2, எழுமின், அண்டாவ காணோம், திருப்பதி சாமி குடும்பம்,

அக்டோபர் 26 : உத்தரவு மகாராஜா, வாண்டு, மாணிக், ஜருகண்டி

தயாரிப்பாளர் கில்டு உறுப்பினர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. எனவே அந்த சங்கத்தின் விதிப்படி அந்த உறுப்பினர்கள் தயாரித்துள்ள படங்களும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

பேட்ட சூட்டிங்கில் ரஜினியிடம் பேசுவதை தவிர்க்கும் விஜய்சேதுபதி

பேட்ட சூட்டிங்கில் ரஜினியிடம் பேசுவதை தவிர்க்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and vijay sethupathiவிஜய்சேதுபதி, த்ரிஷா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 96 படம் அக். 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவர்கள் இருவரும் பேட்ட படத்திலும் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதியின் அண்மை பேட்டியில் ரஜினியுடன் நடித்தது பற்றி தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நடிப்பதே மகிழ்ச்சி தான் அது எந்த வேடமாக இருந்தாலும்.

அவருடன் வில்லனாக நடித்தது வருத்தம் இல்லை

40 வருடமாக சினிமாவில் இருக்கிறார் ரஜினிகாந்த். கார்த்திக் சுப்பராஜின் குடும்பமே ரஜினியின் விசிறிதான். இருந்தபோதிலும் டைரக்டர் சார் என்றே அழைக்கிறார் ரஜினி.

நேற்று தான் சினிமாவிற்கு வந்தது போல வேலை பார்க்கிறார். செட்டில் அவருடன் பேசும்போது பயம் இருக்கும்.

அவரிடம் பேசினால் நம்மையும் மீறி ரஜினி ஸ்டைல் நமக்கும் வந்து விடுகிறது. அதனால் அவரிடம் பேசுவதை கொஞ்சம் குறைத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

என்ஜிகே அப்டேட்ஸ்: குரு பெயர்ச்சிக்கு பிறகு குணமா வாயால சொல்லனும்

என்ஜிகே அப்டேட்ஸ்: குரு பெயர்ச்சிக்கு பிறகு குணமா வாயால சொல்லனும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK suriyaட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே.

இப்படம் 2018 தீபாவளி வெளியீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பின்னர் தள்ளிபோனது.

செப்டம்பரில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த படம் எப்போது வெளியாகும் என அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

எனவே சூர்யா ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அக்டோபரில் கண்டிப்பாக என்ஜிகே பற்றி அப்டேட் இருக்கும் என தகவல்கள் வந்துள்ளது.

மேலும், குரு பெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லனும் முருகா” என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ அவதாரம் எடுக்கிறார் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்

ஹீரோ அவதாரம் எடுக்கிறார் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karimugan senthil ganeshவிஜய் டிவி.யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சாம்பியன் பட்டம் வென்றர் செந்தில் கணேஷ்.

இவருக்கு தற்போது சினிமாவில் பின்னணி பாட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரை சீமராஜா, சார்லி சாப்ளின் உள்ளிட்ட ஓரிரு படங்களில் பாடியும் விட்டார்.

இந்நிலையில் தற்போது கரிமுகன் என்ற திரைப்படத்தில் முழு ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களை அவரே பாடுவதாக கூறப்படுகிறது.

காயத்ரி ஐயர் என்பவர் நாயகியாக நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை செந்தில்கணேஷ் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More Articles
Follows