தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மனோபாலா ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராயர் பரம்பரை’.
இப்படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசியதாவது…
இந்தப் படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா எனக்கு நீண்ட நாள் நண்பன், அவரது முதல் படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்தேன், அப்போதே நல்ல பழக்கம். இடையில் அவரைப் பார்க்கவில்லை நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
படம் நன்றாக வந்துள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது, படம் சுந்தர் சி சாரின் காமெடி படம் போல இருக்கிறது, கண்டிப்பாக வெற்றி பெறும். மனோ பாலா சார் மறைவை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
நீங்கள் அனைவரும் உடலின் மீது அக்கறை கொண்டு நல்ல உணவை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
கதாநாயகி கிருத்திகா பேசியதாவது…
இது எனக்கு முதல் படம் , படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும், நன்றி .
இயக்குநர் ராம்நாத் T பேசியதாவது…
நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது.
கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர் அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது, இந்தப் படத்தை நான் உருவாக்க காரணம், நான் கண்ட ஒரு உண்மை சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்கு உள்ளது அது தான் இந்தப் படம் உருவாக காரணம்.
கதாநாயகன் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார் , இசையமைப்பாளருக்கு மீண்டும் இந்தப் படம் ஒரு அடையாளத்தை அளிக்கும், படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படம் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும் நன்றி.
Health is wealth take care of that says Jeeva