எதிர்பார்த்த வசூலை தராத காலா; மெர்சல்-கபாலியை முந்த முடியாமல் தவிப்பு

Kaala couldnt beat Mersal and Kabalis box office collectionரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படத்தை ரஞ்சித் இயக்க, தனுஷ் தயாரித்திருந்தார்.

அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக இதில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இதில் ரஜினியுடன் நடித்திருந்த வில்லன் நானா படேகர், ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.76 கோடி வசூலாகி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான்.

கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. ஆனால் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் தற்போது வரை உள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்காவில் கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

Kaala couldnt beat Mersal and Kabalis box office collection

Overall Rating : Not available

Related News

அமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…
...Read More
தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More

Latest Post