கபாலி-மெர்சல்-விவேகம் முதல் நாள் வசூலை முறியடித்த காலா

கபாலி-மெர்சல்-விவேகம் முதல் நாள் வசூலை முறியடித்த காலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala beat 1st day collection of Kabali Mersal and Vivegam moviesரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான காலா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தனுஷ் தயாரித்திருந்த இப்படத்தை ரஞ்சித் இயக்கியிருந்தார்.

வெளிநாடு பிரிமியர் காட்சிகள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வரத் தொடங்கியது.

மேலும் கபாலியை விட காலா நன்றாகவுள்ளது என பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சென்னையில் மட்டும் 1.75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் வெளியான மற்ற படங்கள் இந்த வசூலை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் முதல்நாள் வசூல் விவரங்கள்…

காலா ரூ. 1.76 கோடி
மெர்சல் ரூ. 1.52 கோடி
விவேகம் ரூ. 1.21 கோடி
கபாலி ரூ. 1.12 கோடி
தெறி ரூ. 1.05 கோடி

Kaala beat 1st day collection of Kabali Mersal and Vivegam movies

Wattle Health – குழந்தைகளுக்கான உணவை அறிமுகப்படுத்தினார் அபி சரவணன்

Wattle Health – குழந்தைகளுக்கான உணவை அறிமுகப்படுத்தினார் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan launch Kids food Wattle Healthஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்டில் ஹெல்த் (Wattle Health Australia). இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான புதிய உணவு வகைகளை (Wattle baby Apple Puree, Wattle baby Apple +Banana +Mango, Wattle baby Apple +Pear, Wattle baby Apple+Spinach+Broccoli & Pea) அறிமுகப்படுத்தியுள்ளது.

முழுக்க முழுக்க நூறு சதவீதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவு வகை, ஆஸ்திரேலியாவில் விளையும் பழங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது..

இந்த உணவு வகைகளை இந்தியாவில் முதன்முதலாக வாசுதேவன் & சான்ஸ் எக்ஸிம் பி லிட் நிறுவனத்தின் உரிமையாளர்களான கே.கே.வாசுதேவன் மற்றும் அவரது மகன்கள் விஷ்ணு வாசுதேவன், விக்ரம் வாசுதேவன் ஆகியோர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.. இதற்கான அறிமுக விழாவில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன் இந்த புதிய குழந்தைகள் உணவு வகையை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த Mr. Martin GLenister, Mr. Mark McCammon, Mr. Saumitra Sahai & Ms. Jenna carrigan ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் மூலம் கிடைத்த தொகையை தான் தத்தெடுத்த திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அன்னக்காமு , மோகன், ஐஸ்வர்யா, அஞ்சலி, ரேணுகா, சுபாஷினி, முத்துலட்சுமி மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அனுஷ்கா, ஸ்ரீதர், பிரவீன், சுமித்ரா மணிகண்டன் ஆகியோர்களின் கல்விக்காக செலவிடப்போவதாக அபி சரவணன் தெரிவித்தார்.

Actor Abi Saravanan launch Kids food Wattle Health

யுவன் இசையில் விஜய் சேதுபதி-அஞ்சலி நடிக்கும் படம் தொடங்கியது

யுவன் இசையில் விஜய் சேதுபதி-அஞ்சலி நடிக்கும் படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and Anjali movie shooting started with Pooja‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியை மூன்றாவது முறையாக இயக்குகிறார் அருண்குமார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி பக்கத்தில் உள்ள இலஞ்சியில் பூஜையுடன் துவங்கி நடைபெறுகிறது.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பதோடு, படத்தின் தயாரிப்பிலும் இணைந்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். வில்லனாக லிங்கா நடிக்கிறார்.

இதற்கு முன்பே விஜய்சேதுபதியுடன் இறைவி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியைத் தொடர்ந்து, மலேசியாவில் நடைபெறவுள்ளது.

‘பாகுபலி-2’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிட்ட ‘கே.புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

Vijay Sethupathi and Anjali movie shooting started with Pooja

ஒரு குப்பைக் கதை படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்கனும்.. – வைகோ

ஒரு குப்பைக் கதை படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்கனும்.. – வைகோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaikoஇயக்குனர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘ஒரு குப்பைக் கதை’.

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்…

‘பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ஒரு குப்பைக் கதை’ படத்தைப் பார்க்கவேண்டும். இன்றைக்கு மணமுறிவுகள் ஏற்படுவது, கள்ளக்காதலில் மனைவி படுகொலை, கணவன் தலையில் மனைவி அம்மிக்குழவியை போட்டுக் கொன்றாள், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை படுகொலை செய்வது என அன்றாடம் இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

என் நெஞ்சே கொதிக்கின்றது. 50 ஆண்டுகளுக்கு முன் இதுபோல் கிடையாது. அறம் வளர்த்த நாடு நம்முடையது.

இந்த சமூகத்தில் வெளிவராத அந்தரங்க ஆபத்துக்கள் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை ஆபாசமில்லாமல் இந்தப்படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

நம் சமூகத்தில், குடும்ப வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரை அணுகவிட வேண்டும். அணுகவிடக் கூடாது என்பதையும், கணவன் எவ்வளவு வசதியானவனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல சுற்றுப்புற சூழல் இல்லாவிட்டால் எவ்வளவு கஷ்டம் என்பதையும் அருமையாக காட்டியிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை பார்த்ததும், இன்றைய சமூகத்தின் அவலங்களுக்கு மத்தியிலே வாழும் மக்கள் இந்தப்படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும் என நினைத்தேன்.

அந்த அளவுக்கு இதில் ஒரு மெசேஜ் இருக்கிறது. சமூகம் இருக்கும் இன்றைய சூழலில் இவ்வளவு நல்ல திரைப்படத்தை இயக்குனர் காளி ரங்கசாமி எடுத்துள்ளார். இதில் நடித்தவர்களும் உண்மையிலேயே நடித்தது போலவே இல்லை. வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இதில் காட்டப்பட்டுள்ள பகுதியைப் பார்க்க என்னடா இப்படி இருக்கிறதே என தோன்றியது. ஆனால் அதுதான் வாழ்க்கை.

இன்னொரு உலகம் இருக்கிறது. அது ஏழு நட்சத்திர ஹோட்டல் உலகம். அந்த உலகம் வேறு. அந்த உலகத்தைப் பார்க்கிறோம்.. அந்த கட்டடங்களைப் பார்க்கிறோம். அந்த மக்களைப் பார்க்கிறோம்..

ஆனால் நரகத்தைப் போல் ஆக்கப்பட்டுவிட்ட இந்த குப்பையிலும் சாக்கடையில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை இருக்கிறதே இது உண்மை. பிரபல இயக்குனர் சத்யஜித்ரே தனது படங்களில் இதுபோன்ற விஷயங்களை காட்டித்தான் பல விருதுகளை வாங்கினார்.

இந்தப்படத்தில் அரைகுறை ஆடைகள் கிடையாது. ஆபாசமான காட்சிகள் கிடையாது. இயற்கையான வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாக படமாக எடுத்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்குமா என்பதை விட, மக்கள் இந்தப்படத்தை பார்த்து படம் எடுத்தவர்களுக்கு கடன் இல்லாமல் செய்ய, தங்களது கடனை செய்யவேண்டும்.

இந்த சமூகத்தில் வசதி படைத்த இளைஞர்கள், எப்படிவேண்டுமானாலும் யாருடைய வாழ்க்கையையும் எளிதாக சீரழிக்கலாம் என அவர்கள் மனது கெட்டு வளர்த்துக்கொண்டு இருக்கிறது.

அந்த மாதிரி அவர்கள் மாறிக்கொண்டு இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. அவர்கள் மாறவேண்டும்.

இந்தப்படத்தை பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக படம் எடுக்கும் இந்த காலத்தில் லட்சியத்திற்காக படம் எடுக்கும் காளி ரங்கசாமி போன்ற இயக்குனர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்’ என்றார்.

MDMK Party Leader Vaiko praises Oru Kuppai Kathai

அஞ்சலி செலுத்தி விட்டு காலா படம் பார்க்கும் தூத்துக்குடி மக்கள்

அஞ்சலி செலுத்தி விட்டு காலா படம் பார்க்கும் தூத்துக்குடி மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Silent tribute of Rajini fans in thoothukudi before watching Kaala movieரஜினிகாந்த் படங்கள் ரிலீஸ் என்றாலே திருவிழா போல ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

அவர்கள் ரஜினியை தெய்வமாக நினைத்து இதை காலம் காலமாக செய்து வருகிறார்கள்.

இன்று காலா வெளியான நிலையில், எந்த ஆர்ப்பாட்டமும் அதகளமும் இல்லாமல் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டு காலா படத்தை பார்த்துள்ளனர் தூத்துக்குடி மக்கள்.

அதுற்றிய விவரம் வருமாறு…

கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ரஜினிகாந்த் அங்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது துப்பாக்கி சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகளே என கூறியிருந்தார்.

ஆனால் போராடியவர்கள் எப்படி சமூக விரோதிகள் ஆவார்கள் என பலத்த எதிர்ப்பு குரல்கள் ரஜினிக்கு எதிராக தொடங்கியது-

மேலும் `காலா’ திரைப்படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தகவல் வாட்ஸ்அப்களிலும் வைரலானது.

இதனால் தூத்துக்குடியில் `காலா’ திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘காலா’ திரைப்படம் இன்று காலை 9.47 மணிக்குத் திரையிடப்பட்டது.

திரைப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பு, ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமையில் ரசிகர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து `காலா’ படம் திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் கால திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கண்டு மகிழ்ந்தனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “தலைவர் படம் ரிலீஸானாலே வெடி வெடிச்சு இனிப்பு வழங்கி திருவிழா போல சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடுவோம்.

கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதால் தூத்துக்குடியே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த நிலையில், ஆரவாரம் கூடாது. தலைவரும் இதை விரும்ப மாட்டார்.

வீரமரணம் அடைந்த 13 பேரின் ஆத்மா சாந்தி அடைய ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினோம். 3 நாள்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில், இதேபோல அஞ்சலி நிகழ்வு நடக்கும்..” என்றார்.

A Silent tribute of Rajini fans in thoothukudi before watching Kaala movie

A Silent tribute of Rajini fans in thoothukudi before watching Kaala movie

ரஜினிக்காக காலா எடுக்கவில்லை; மக்களுக்காக எடுத்தேன்… ரஞ்சித் பேட்டி

ரஜினிக்காக காலா எடுக்கவில்லை; மக்களுக்காக எடுத்தேன்… ரஞ்சித் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala for the problems of land less peoples not for Rajini says Ranjithரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘காலா’ திரைப்படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகியுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

தமிழகமெங்கும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை முதலே ஆரம்பமானது.

திரையரங்குகளுக்கு முன்பிருந்த பேனர்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம், பூஜைகள் செய்தனர்.

மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை காண என இயக்குனர் ரஞ்சித் தியேட்டர்களுக்கு நேரிடையாக சென்றிருந்தார்.

இதுகுறித்து ரஞ்சித் கூறும்போது…

‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம்.

இங்கே மக்களிடையே ஈக்குவாலிட்டி இல்லை. அதைதான் சொல்லியிருக்கிறேன்.

நான் இயக்குனர் என்பதை விட நான் ஒரு அரசியல்வாதிதான். என் படங்களில் எப்போதும் அரசியல் இருக்கும்.

கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Kaala for the problems of land less peoples not for Rajini says Ranjith

More Articles
Follows