தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டெல்லியில் 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது.
இயக்குனர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த படங்கள் இந்தாண்டுக்கு தேர்வு செய்துள்ளது.
தமிழில் சிறந்த படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான விருதுக்கு தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பாடல் ஆசிரியாக வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். (தர்மதுரை படத்தில் உள்ள எந்தபக்கம் என்ற பாடல்)
சிறந்த ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசர் (சூர்யா நடித்த 24 படம்). மேலும் இதே படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்துள்ளது.
சிறந்த பாடகருக்கான தேசிய விருது ஜோக்கர் படத்தின் ஜாஸ்மின் பாடலுக்காக சுந்தர அய்யருக்கு வழங்கப்படுகிறது
சிறந்த துணை நடிகை – ஜாய்ரா வாசிம் – டங்கல்
சிறந்த மலையாளத் திரைப்படம்: மகேஷிண்டே பிரதிகாரம்
சிறந்த தெலுங்கு திரைப்படம் – பெல்லி சூப்லு
சிறந்த ஹிந்தி திரைப்படம் – நீர்ஜா
சிறந்த திரைப்படம் கசாவ் (மராத்தி)
24 படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த நடிகர் – ரஷ்டம் திரைப்படத்துக்காக அக்ஷய் குமார்
‘புலி முருகன்’ மலையாளத் திரைப்படத்துக்காக பீட்டர் கெய்னுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது.
தேசிய விருதுகள் பட்டியல்:
சிறந்த படம்: மராட்டிய மொழிப் படம் – காசவ்
சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மபுஸ்கா – மராட்டிய படம்- வென்டிலேட்டர்
சிறந்த நடிகை: சி.எம்.சுரபி – மலையாளப் படம் மினாமினுகு படத்தில் நடித்தமைக்காக
சிறந்த உறுதுணை நடிகை: ஜாய்ரா வாசிம் – தங்கல்
சிறந்த பாப்புலர் திரைப்படம் – சதாமனம் பவதி (தெலுங்கு)
சிறந்த குழந்தைகள் திரைப்படம் – தனக்
சிறந்த அனிமேஷன் திரைப்படம்- மஹோயோத ரானா (இந்தி)
சிறந்த சண்டை வடிவமைப்பு: பீட்டர் ஹெய்ன் (புலிமுருகன்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதீஷ் பிரவீன் (படம்: குஞ்சு தெய்வம்), சாஜ் (படம்: நூர் இஸ்லாம்), மனோகரா (படம்: ரயில்வே சில்ட்ரன்)
சிறந்த பின்னணி பாடகி: இமான் சக்ரபர்த்தி
சிறந்த பின்னணி பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ஷ்யாம் புஷ்கரன்
சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்
சிறந்த நடன அமைப்பு: ராஜூ சுந்தரம் (ஜனதா கார்கே)
சிறந்த இசையமைப்பு: பாபு பத்மநாபா (அலமா)
சிறந்த ஒப்பனை: எம்.கே.ராமகிருஷ்ணா
சிறந்த எடிட்டிங்: ராமேஷ்வர் – வென்டிலேட்டர்
சிறந்த ஒப்பனை: சைக்கிள் திரைப்படத்துக்காக சச்சின் லவேல்கர்
சிறந்த ஒலி வடிவமைப்பு: காடு பூக்கும் நேரம் – ஜெயதேவன் சக்கா தத்
சிறந்த துணை நடிகர்: தசாகிரியா – மராத்தி
சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் – தி டைகர் வூ கிராஸ்ட் தி லேன் (The Tiger who crossed the lane)
சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் – அமிதாப் பச்சனின் ‘பிங்க்’
தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: திக்சோவ் பனாத்
அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: அலிபா (வங்கமொழி) இயக்குநர்- தீப் சவுத்ரி
சினிமா துறைக்கு இணக்கமான மாநிலம்: உத்தரப் பிரதேசம்.