ராஜூமுருகன் – எஸ்.பி.சினிமாஸ் உருவாக்கிய புதிய கூட்டணி

ராஜூமுருகன் – எஸ்.பி.சினிமாஸ் உருவாக்கிய புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றிப்படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி. சினிமாஸ் தங்களின் புதிய படம் குறித்தான அறிவிப்புடன் வந்துள்ளனர்.

இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் வெற்றிப் பட இயக்குநருடன் இணைந்து புதிய படம் தயாரிக்கும் போது நிச்சயம் அது தரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும்.

அப்படியொரு தரமாம படைப்பாக எஸ்.பி. சினிமாஸ் இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் அமைய இருக்கிறது.

கூடுதல் தகவல்…

கார்த்திக் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியுள்ள ‘ஜப்பான்’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SP Cinemas collaborates with filmmaker Raju Murugan

Chennai (October 1, 2023) – SP Cinemas and filmmaker Raju Murugan have officially announced their collaboration to produce content oriented movies in Tamil.

SP Cinemas has been a pillar in escalating the value of many content-driven Tamil movies by producing and distributing them. On the counterpart, writer-director Raju Murugan has been an iconic emblem of Tamil Cinema, who is illustrious for his beautiful and realistic creations. Now both reputed brands are coming together to produce many valuable and content-driven movies, which will encourage and exhibit the potential of both aspiring and well-experienced actors, directors, and technicians.

They strongly believe this collaboration will open gates for the talented individuals, who’ve been dreaming of a breakthrough in the industry. The official announcement pertaining to these projects will be made soon.

Filmmaker Raju Murugan holds special attention for making movies that have touched the hearts of audiences with the native essence including the National award-winning movie Joker, Cuckoo, Gypsy, and Karthi’s upcoming film ‘Japan’ scheduled for Diwali release.

ஒரே ஆண்டில் இரண்டு சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் ஷாருக்கான்

ஒரே ஆண்டில் இரண்டு சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜவான்’ அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 600cr கிளப்பில் இணைந்த முதல் இந்தி படமாகவும் சாதனை செய்துள்ளது.

மேலும் பல புதிய பட வெளியீடுகள் இருந்தபோதிலும், படம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது !

இன்று, ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் திரைத்துறையில் மீண்டும் பல சாதனைகளை முறியடித்து, திரைத்துறையில் சாதனைகளுக்கு புதிய வரையறைகளை அமைத்திருக்கிறார்.

ஷாருக்கான் நடிப்பில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட்டின் ஜவான், வரலாறு என்ற வார்த்தைக்கு அர்த்தமாக மாறியுள்ளது.

செப்டம்பர் 7, 2023 அன்று வெளியானதிலிருந்து, திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றை மாற்றி, புதிய சாதனைகளை எழுதி வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளது.

ஜவான் இந்தியில் 525.50 கோடிகளையும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 584.32 கோடிகளையும் வசூலித்தது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் படம் 1000 க்கும் மேற்பட்ட கோடிகளை ஈட்டி அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.

தற்போது மொத்தமாக இப்படத்தின் வசூல் 1043.21 கோடியை தாண்டியிருக்கிறது! இந்த மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும் வெறும் 22 நாட்களில் தகர்க்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

புதிய வெளியீடுகளால் ஜவானின் அதிரடி வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை, மேலும் மூன்றாவது வாரத்தில் கூட ரசிகர்கள் படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சான்றாகும்.

The TOP TWO HIGHEST GROSSERS OF ALL TIME NOW BELONG TO SHAH RUKH KHAN

கேரளாவில் நுழையும் லைக்கா.; மோகன்லாலின் ‘லூசிபர் 2’ படத்தை தயாரிக்கிறது

கேரளாவில் நுழையும் லைக்கா.; மோகன்லாலின் ‘லூசிபர் 2’ படத்தை தயாரிக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் பொருட் செலவில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து ‘எம்புரான்’ எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.

இந்நிலையில் இந்திய திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்- மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘ எம்புரான் ‘ எனும் புதிய திரைப்படத்தை மலையாள திரையுலகின் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ‘எம்புரான்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.
சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் – லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் – மோகன் லால் ‌- பிருத்விராஜ் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Lyca Productions steps into Mollywood with a blockbuster franchise

‘லால் சலாம்’ ரிலீஸ்.; பாட்ஷா பாய் இடத்தை பிடிப்பாரா மொய்தின் பாய்.?

‘லால் சலாம்’ ரிலீஸ்.; பாட்ஷா பாய் இடத்தை பிடிப்பாரா மொய்தின் பாய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் மீண்டும் பிரமாண்டம் மற்றும் தரமான படங்களைத் தயாரித்துள்ளார்.

அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ‘லால் சலாம்’ திரைப்படம் தயாராகி வருகிறது.

‘லால் சலாம்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குனர் பொறுப்பேற்றுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’..

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இருந்து ‘மொய்தீன் பாய்’அவரது கேரக்டர் போஸ்டர் பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றது மற்றும் ஊடகங்களில் மிகவும் சலசலப்பை உருவாக்கியது.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதல் ஷெட்யூலை முடித்தது.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.

ஜி.கே.எம். லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் தமிழ் குமரன் மற்றும் குழு தற்போது லால் சலாம் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான லால் சலாம்
திரைப்படம் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

கூடுதல் தகவல்…

ரஜினிகாந்த் பல படங்களில் ஹிந்துவாக நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த இஸ்லாமிய கேரக்டர் பாட்ஷா பாய் என்பது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

1995 ஆம் ஆண்டில் பொங்கல் சமயத்தில் வெளியான படம் தான் ‘பாட்ஷா’ தற்போது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்.

எனவே அவர் பாட்ஷா பாய் இடத்தைப் பிடிப்பார்ரா?என்பதை பார்ப்போம்..

Lal Salaam movie set to release Pongal 2024

பிரபாஸ் நடிக்கும் ‘கண்ணப்பா’ படத்தில் இணைந்த ‘ஜெயிலர்’ நடிகர்

பிரபாஸ் நடிக்கும் ‘கண்ணப்பா’ படத்தில் இணைந்த ‘ஜெயிலர்’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’கண்ணப்பா’ படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்! – மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தகவல், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்த ‘கண்ணப்பா’.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ மிகப்பெரிய பொருட்ச் செலவில் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளது.

இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

மேலும், படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக விஷ்ணு மஞ்சு தனது குழுவினருடன் நியூசிலாந்து நாட்டில் முகாமிட்டுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்ககு அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், படத்தின் புதிய தகவல் ஒன்றால் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது ‘கண்ணப்பா’ திரைப்படம். ஆம், இந்திய சினிமாவில் ’தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்று அழைக்கப்படும் நடிகர் மோகன்லால் இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சமீபத்தில் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது

எதிர்பார்க்காத இந்த தகவலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டதை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஸ்டார் ப்ளஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரை இயக்கி பாராட்டு பெற்ற இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு தலைசிறந்த திரை படைப்பாக உருவாகும் என்ற எதிரபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணி சர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி இரைட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

ஒலி, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய படமாக உருவாக உள்ள ‘கண்ணப்பா’ சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக இருப்பதோடு, மக்கள் மனதில் நீங்கா இருக்கும் மிகப்பெரிய காவியமாகவும் உருவாகிறது.

Mohanlal and Prabhas starrer Kannappa

சத்யராஜ் நடித்த ‘வெப்பன்’ பட ஷூட்டிங் டப்பிங் ட்ரைலர் அப்டேட்

சத்யராஜ் நடித்த ‘வெப்பன்’ பட ஷூட்டிங் டப்பிங் ட்ரைலர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெப்பன்

இவர்கள் தவிர, நடிகர்கள் யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி இவற்றை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

வெப்பன்

*தொழில்நுட்பக் குழு:*

தயாரிப்பு: மில்லியன் ஸ்டுடியோ,
இயக்கம்: குகன் சென்னியப்பன்,
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிரபு ராகவ்,
படத்தொகுப்பு: நாஷ்,
கலை: சுபேந்தர் பி.எல்.,
ஆக்‌ஷன்: சுதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்கள்: லேகா மோகன்
ஒலி கலவை & வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ஸ்ரீ,
டிஐ லேப்: புரோமோ வொர்க்ஸ்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: கோகுல்,
ஒப்பனை: மோகன்,
ஸ்டில்ஸ்: விஜய்,
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: காந்தன்,
நிர்வாக தயாரிப்பாளர்: ரிஸ்வான்.ஏ

வெப்பன்

Sathyaraj starrer Weapon shoot update

More Articles
Follows