தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வெகுநாட்களாக இப்பட ரிலீஸ் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இறுதியாக ஜுன் 18ல் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் என உறுதி செய்துள்ளார் படத்தயாரிப்பாளர்.
‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானபோது, தனுஷ் & கார்த்திக் சுப்புராஜ் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் தனுஷ் – தயாரிப்பாளர் சசிகாந்த் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Jagame Thandhiram release date announced