விஷால் பட இயக்குனருடன் கைகோர்க்கும் மாநகரம் ஹீரோ

விஷால் பட இயக்குனருடன் கைகோர்க்கும் மாநகரம் ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sundeep kishanஅண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் மாநகரம்.

புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்திக் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்பட நாயகன் சந்தீப் கிஷன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்தை இயக்குனர் திரு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர், விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்யவிருக்கும் இப்படத்தை அடுத்த மே மாதம் தொடங்கவிருக்கிறார்கள்.

ட்ரெண்டிங் மோதலுக்கு ரெடியாகும் அஜித்-சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

ட்ரெண்டிங் மோதலுக்கு ரெடியாகும் அஜித்-சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Sivakarthikeyanஒரு படம் குறித்த செய்தி வெளியானால், அதை அதிகளவில் இணையங்களில் பகிர்ந்து ட்ரெண்ட் அடிப்பதை ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

எனவே, ஒவ்வொரு இயக்குனரும் நடிகரும் இதற்கேற்ப தங்கள் படத்தகவல்களை பகிர்கின்றனர்.

அடுத்த வாரம் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பை கூட, பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இன்று அறிவிப்போம் என்று ட்ரெண்ட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். (இது எப்படி இருக்கு?)

இந்நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளன.

இதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

எனவே ஒரே நாளில், அஜித்-சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் மோதலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது.

Ajith and Sivakarthikeyan fans getting ready to make Trending on 1st May

அட்லி சூட்டிங் தள்ளிப் போவதால் ‘பாகுபலி’ விழாவில் விஜய்.?

அட்லி சூட்டிங் தள்ளிப் போவதால் ‘பாகுபலி’ விழாவில் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubaliஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தினார் அட்லி.

இதனையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக இப்படக்குழு ராஜஸ்தான் செல்லவிருக்கிறது என்பதை பார்த்தோம்.

அங்கு சில லொக்கேஷன் பணிகள் தாமதாகி வருவதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் நடைபெற உள்ள ராஜமவுலியின் ‘பாகுபலி’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Whether Vijay will atten Baahubali audio launch event?

அம்மா மீனாவுடன் ‘தெறி’ நைனிகா பங்குபெற்ற ஃபேஷன் ஷோ

அம்மா மீனாவுடன் ‘தெறி’ நைனிகா பங்குபெற்ற ஃபேஷன் ஷோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meena and Nainika participated in The Master and Baby Awards Fashion Showஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்னும் பொன்மொழிகேற்ப முழுக்க முழுக்க குழந்தைகளை கொண்ட ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

திரை நட்சத்திரங்களின் குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வை பிரபல நடிகை மீனா மற்றும் அவரது மகளும் குழந்தை நட்சத்திரமானா ‘தெறி’ புகழ் பேபி நைனிகா தொடங்கி வைத்தனர்.

அப்பொழுது “மாஸ்டர் அண்ட் பேபி அவார்ட்ஸ் ” இந்தியாவின் முதன்முதல் குழந்தைக்கான ஃபேஷன் அலங்கார காட்சி நிகழ்சசியின் லோகோ மற்றும் வலை தளத்தையும் தொடங்கி வைத்தனர்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு prayforchennai.org என்ற சமூக தொண்டு நிறுவனத்திற்கு செல்லும்.

‘சைவம்’ புகழ் பேபி ரே, சிறுத்தை புகழ் பேபி ரக்ஷ்னா, ஒளிப்பதிவாளர் RD ராஜசேகரின் குழந்தைகள், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸின் குழந்தைகள், பாடலாசிரியர் பா. விஜய் குழந்தைகள்.

ஜோடி நம்பர் ஒன புகழ் ஹீத் மற்றும் ரிதுவா ஆகியோர் பங்கேற்றனர். பலவாறு நகரகியாக உடையலங்காரத்தில் அவர்கள் ரேம்ப் வாக் செய்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இம்மாதிரி போட்டிகள் மேலும் நடை பெறவுள்ளதாகவும் அதன் விவரங்கள் http://masterandbabyawards.com/tn/ வலைதளத்தில் இருக்கும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Meena and Nainika participated in The Master and Baby Awards Fashion Show

Meena and Nainika participated in The Master and Baby Awards Fashion Show

ரஜினி-அஜித்துக்கு காத்திருக்காமல் படத்தை ஆரம்பித்த இயக்குனர்

ரஜினி-அஜித்துக்கு காத்திருக்காமல் படத்தை ஆரம்பித்த இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhaskar the Rascal director siddiqueபிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் மம்மூட்டி, நயன்தாரா, பேபி அனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து தமிழில் ரீமேக் செய்ய கடும் போட்டி எழுந்தது.

இப்படத்தை தமிழிலும் நானே இயக்குவேன் என்றும் அதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார் சித்திக்.

அவரின் கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் அஜித் நடிக்க வேண்டும் என விரும்பினார்.

ஆனால் காலம் கடந்து போனதே தவிர ரஜினி-அஜித் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை.

எனவே அர்விந்த்சாமி, அமலாபால் நடிக்க, இப்படத்தின் பூஜையை போட்டு இன்று ஆரம்பித்துவிட்டார் சித்திக்.

Director Siddique started his tamil remake of Bhaskar the Rascal

baskar rascal

‘மூன்று முகம்’ டைட்டில் குறித்து விஜய்-61 தரப்பு விளக்கம்

‘மூன்று முகம்’ டைட்டில் குறித்து விஜய்-61 தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay new lookதெறி, பைரவா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

அட்லி இயக்கிவரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இப்படத்திற்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ’மூன்றுமுகம்’ டைட்டில் வைக்கப்படலாம் என செய்திகள் வந்தன.

இதனை மிஞ்சும் வகையில் டைட்டில் டிசைன் உடன் கூடிய லோகோ ஒன்று இணையத்தில் பரவியது.

இது குறித்து இப்படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‘அந்த டிசைன் யாரோ ஒருவர் செய்திருக்கிறார். படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை.

ஐந்து டைட்டில்கள் பரிசீலனையில் உள்ளது. அதில் மூன்று முகம் டைட்டிலும் இருக்கிறது. அவ்வளவுதான்.” என்றனர்.

Vijay 61 team clarifies Moondru Mugam title

vijay 61 team

More Articles
Follows