விஜய்யுடன் இணையும் பாரதிராஜா-மனோஜ்..!

விஜய்யுடன் இணையும் பாரதிராஜா-மனோஜ்..!

Bharathiraja with is son Manoj in Padaiveeranரெட்டைச்சுழி, பாண்டியநாடு படங்களை தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் பாராதிராஜா.

தற்போது ஓம், சிகப்பு ரோஜாக்கள்-2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக தன் மகன் மனோஜ் உடன் இணைந்து படைவீரன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் பின்னணி பாடகரும் தனுஷின் மாரி பட வில்லனுமான விஜய் நாயகனாக நடிக்கிறார்.

இவர் பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் என்பது தாங்கள் அறிந்ததே.

இன்று முதல் ரெமோ கொண்டாட்டம் ஆரம்பம்..!

இன்று முதல் ரெமோ கொண்டாட்டம் ஆரம்பம்..!

Remo Making Of 1St Look Teaser today at 7PMபாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வருகிற ஜீன் 23ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் டீசர் மேக்கிங்கை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடவிருக்கிறார்களாம்.

எனவே இன்று முதலே தங்கள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.

எனவே, இன்றை ட்விட்டரில் ட்ரெண்டாக்க காத்திருக்கின்றனர்.

‘தனுஷுடன் ஒரு படம்.. மீண்டும் அப்பாவுடன் ஒரு படம்’ – சௌந்தர்யா ரஜினி

‘தனுஷுடன் ஒரு படம்.. மீண்டும் அப்பாவுடன் ஒரு படம்’ – சௌந்தர்யா ரஜினி

Soundarya Rajinikanth's Next Movie will be with Dhanushரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான சௌந்தர்யா, சமீபத்தில் தன் திரையுலக பயணம் பற்றி பேட்டியளித்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…

“மே 2014-ல் எங்கள் ‘கோச்சடையான்’ வெளியானது. மே 2015-ல் என் மகன் வேத் கிருஷ்ணா பிறந்தான்.

கோச்சடையான் படத்தையும் என் குழந்தையாகவே பார்த்தேன். எப்போதும் அப்படத்தை பற்றிதான் யோசித்துக் கொண்டு இருப்பேன்.

அப்படத்திற்கு பிறகு தற்போது முழுமையான தாய்மையை அனுபவித்து வருகிறேன்.

அதே சமயம் அடுத்த பட வேலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இம்முறை அனிமேஷன் கிடையாது.

ரொமான்டி காமெடி படமாக இருக்கும். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பணிபுரிகிறேன்.

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அப்பாவை வைத்து படம் இயக்குவேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமாதானம் ஆன ‘சண்டக்கோழி’கள் விஷால்-லிங்குசாமி..!

சமாதானம் ஆன ‘சண்டக்கோழி’கள் விஷால்-லிங்குசாமி..!

Vishal's Sandakozhi 2 Latest Updatesமருது படத்தை தொடர்ந்து, லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது.

இதற்காக தனது கால்ஷீட் தேதிகளை விஷால் ஒதுக்கியும் இருந்தார்.

ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அப்படம் கைவிடப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் விஷால்.

தற்போது இருவரும் சந்தித்து பிரச்சினைகளைப் பேசி சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே, விரைவில் ‘சண்டக்கோழி 2’ தொடங்கப்படவுள்ளது.

அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, இப்படத்தை லிங்குசாமி தொடங்குவார் என தெரிய வந்துள்ளது.

பிஆர்ஓ யூனியன் எலெக்ஷன் ரிசல்ட்… டைமண்ட் பாபு, ஜான் உள்ளிட்டோர் தேர்வு.!

பிஆர்ஓ யூனியன் எலெக்ஷன் ரிசல்ட்… டைமண்ட் பாபு, ஜான் உள்ளிட்டோர் தேர்வு.!

சினிமாவுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் பி.ஆர்.ஓக்கள்.

இவர்களே தங்களின் பத்திரிக்கை மூலமாக சினிமா செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.

இந்நிலையில் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தேர்தல் நடப்பது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக சில பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

ஆனால் இம்முறை அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்காண்டுகளாக விஜயமுரளி தலைவராகவும், பெரு துளசி பழனிவேல் செயலாளராகவும், மௌனம் ரவி பொருளாளராகவும் பதவி வகித்தனர்.

64 உறுப்பினர்கள் கொண்ட இந்த யூனியனில் 58 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர்.

இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…

தலைவர் பதவிக்கு டைமண்ட் பாபு மற்றும் ஆதம்பாக்கம் ராமதாஸ், நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் தலைவராக டைமண்ட் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆறாவது முறையாக தலைவராகி இருக்கிறார்.

மற்றவர்கள் விவரம் இதோ…

துணைத் தலைவர்கள் – பி.டி.செல்வகுமார், வி.கே.சுந்தர்
பொதுச் செயலாளர் – திரு. A. ஜான்
பொருளாளர் – விஜயமுரளி
இணைச் செயலாளர் – நிகில் முருகன் மற்றும் யுவராஜ்

செயற்குழு உறுப்பினர்கள் :-
வெட்டுவானம் சிவகுமார்
மேஜர் தாசன்
அந்தணன்
பாலன்
ஆறுமுகம்
கிளாமர் சத்யா
சக்திவேல்
சரவணன்
ரேகா

வெற்றி வாகை சூடிய அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, நயன்தாரா படங்களுக்கு பிலிம்பேர் விருது..!

விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, நயன்தாரா படங்களுக்கு பிலிம்பேர் விருது..!

Winners: 63rd Britannia Filmfare Awards (South)தென்னிந்திய சினிமாக்களை பாராட்டி கௌரவிக்கும் விழாவாக பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் தென்னிந்தியாவை சார்ந்த சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் சிறந்த படமாக தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் இப்படம் மொத்தம் 4 விருதுகளை தட்டி சென்றது.

 • சிறந்த இயக்குனர் – S.S.ராஜமௌலி
 • சிறந்த ஒளிப்பதிவாளர் – கே.கே.செந்தில் குமார்
 • சிறந்த பாடகி – கீதா மாதுரி (ஜீவநதி பாடல்)
 • சிறந்த துணை நடிகை – ரம்யா கிருஷ்ணன்

மலையாளத்தில் சிறந்த திரைப்படமாக ”பதேமாரி” படமும், கன்னடத்தில் சிறந்த படமாக ”ரங்கிதா ரங்கா” ஆகியவையும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

மலையாளத்தில் ”என்னு நின்டே மொய்தீன்” திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது ஆர்.எஸ். விமல் அவர்களுக்கு கிடைத்தது.

மேலும் பதேமாரி படத்தில் நடித்த மம்மூட்டிக்கும் விருது வழங்கப்பட்டது.

”ருத்ரம்மாதேவி” படத்திற்காக அனுஷ்காவுக்கு சிறந்த முன்னணி கதாபத்திரம் விருது வழங்கப்பட்டது.

மலையாளத்தில் சிறந்த முன்னணி கதாபாத்திர விருது மகேஷ் பாபுவுக்கும், கன்னடத்தில் சிறந்த முன்னணி கதாபாத்திர விருது புனீத் ராஜ்குமாருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் சினிமா விருதுகள் விவரம் இதோ…

 • சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)
 • சிறந்த நடிகை: நயன்தாரா (நானும் ரௌடி தான்)
 • சிறந்த இயக்குனர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)
 • சிறந்த நடிகர் (Critics Jury Award): ஜெயம் ரவி (தனி ஒருவன்)
 • சிறந்த நடிகை (Critics Jury Award): ஜோதிகா(36 வயதினிலே)
 • சிறந்த துணை நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
 • சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
 • சிறந்த அறிமுக நடிகர்: ஜீ.வி.பிரகாஷ் (டார்லிங்)
 • சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (ஐ)
 • சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் – ஐ)
 • சிறந்த பாடகர்: சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் – ஐ)
 • சிறந்த பாடகி : ஸ்வேதா மோகன் (என்னச் சொல்ல – தங்கமகன்)

இதுவரை 7 பிலிம்பேர் விருதுகளை விக்ரம் அவர்களும் 14 விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் அவர்களும் பெற்றுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows