ENGLISH TITLE FOR THALAIVAR 169.? ரஜினியுடன் ஐஸ்வர்யாராய் சிவகார்த்திகேயன் வடிவேலு

ENGLISH TITLE FOR THALAIVAR 169.? ரஜினியுடன் ஐஸ்வர்யாராய் சிவகார்த்திகேயன் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்,

இந்த படத்திற்கு பிறகு ரஜினியின் 169 வது படத்தை இயக்கப் போகிறார் நெல்சன் என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதையும் அப்போதே அறிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘எந்திரன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் வடிவேலு நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஜினி மகளாக பிரியங்கா மோகன் நடிக்கிறாராம்.

வருகிற மே மாதம் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்திற்கு ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ பட வரிசையில் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்க நெல்சன் முடிவு செய்துள்ள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுநாள் வரை ரஜினி படத்திற்கு மற்ற மொழிகளில் (தர்பார்) டைட்டில் வைக்கப்பட்டு இருந்தாலும் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ரஜினியின் விருப்பமா? அல்லது நெல்சனின் விருப்பமா? எது நிறைவேறும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Is this the title of Superstar Rajinikanth in ‘Thalaivar 169’?

காமக் கொடூர கொலைகாரர்களை ‘லாக்’ செய்யும் ரத்தன் லிங்கா

காமக் கொடூர கொலைகாரர்களை ‘லாக்’ செய்யும் ரத்தன் லிங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் ‘லாக்’.

‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான ‘லாக் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா. பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், RPG ராயல் பினோபென் குழு, சக்திவேல் பிக்சர்ஸ், ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ லாக்’ திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளன.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள். சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.

இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே ‘லாக் ‘ படத்தின் கரு.

சமூக விரோதிகளும் தீயசக்திகளும் மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். கனவு பூவாக மலரும் முன்பே மிதித்துச் சிதைத்து விடுகிறார்கள்.

அந்த நகரத்தில் சைக்கோ காமக் கொடூர கொலைகாரர்கள் ஐந்து பேர் ஊடுருவுகிறார்கள். அடுத்து தங்கள் காமப்பசிக்காக ஜூலி மீது கண் வைக்கிறார்கள்.

மிருகங்களின் கொடூர கரங்களிலிருந்து எப்படி ஜூலி தப்பிக்கிறாள்? சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள்? என்பதைப் பரபரப்பாக சொல்லும் படம்தான் லாக்.

அடுத்தடுத்து முடிச்சுகள், திருப்பங்கள் எனக் கதை நகர்கிறது. இப்படி ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படமாக லாக் உருவாகியுள்ளது.

இப் படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்குமே ஏற்கெனவே சில படங்களில் தோன்றிய அனுபவம் உண்டு.

இப்படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா ஏற்கெனவே ‘அட்டு’ என்ற படத்தை இயக்கி,அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். ஒளிப்பதிவு – நந்தா, இசை -விக்ரம் செல்வா, எடிட்டிங் – மகேந்திரன் கணேசன்.

ஒரு முழுநீள விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லராகவும்

படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் லாக் செய்து விடும் அளவுக்குத் திகிலும் திருப்பங்களும் கொண்ட படமாகவும் ‘ லாக் ‘ உருவாகியிருக்கிறது .

விரைவில் விறு விறு திரை அனுபவத்துக்கு ரசிகர்களை அழைத்துச் சென்று வியக்க வைக்க வருகிறது ‘லாக்’.

First Look of Lock gets phenomenal reception

காரைக்காலில் மீண்டும் சிவகார்த்திகேயன்.; புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை

காரைக்காலில் மீண்டும் சிவகார்த்திகேயன்.; புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் 20 வது படத்தை இயக்குகிறார் தெலுங்கு இயக்குனர் அனுதீப். இவர் நவீன் பொலிஷெட்டி நடித்த ஜதி ரத்னலு வெற்றிப் படத்தை இயக்கியவர்.

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

உக்ரைனியன் நடிகை Maria Riaboshapka இதில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சத்யராஜ், நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை சுரேஷ் புரோடக்ஷன்ஸுடன் இணைந்து வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிக்கிறது. புதுச்சேரியை சேர்ந்த கைடு ஒருவருக்கு வெளிநாட்டு பெண் மீது ஏற்படும் காதல் தான் இந்தப் படத்தின் மையக் கதை என கூறப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்காலில் நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படத்தின் படப்பிடிப்பும் காரைக்காலில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.)

தற்போது SK20 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சிவகார்த்திகேயன் மரியாதையை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

அப்போது புதுச்சேரி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த கட்டணத்தை குறைக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தாராம் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan requests Pondy CM Rangasamy

வழிகாட்டியுடன் கூட்டணி.. பாலாவின் ‘சூர்யா 41’-ல் இணைந்த பிரபலங்கள் லிஸ்ட்

வழிகாட்டியுடன் கூட்டணி.. பாலாவின் ‘சூர்யா 41’-ல் இணைந்த பிரபலங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வருடங்களுக்கு முன்பு பாலா இயக்கிய நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் நடித்து தன் திறமையை திரையுலகிற்கு அறிய செய்தவர் சூர்யா.

அதன்பின் பாலா இயக்கிய அவன் இவன் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் 41வது படத்தை இயக்கவுள்ளார் பாலா. இந்த படத்தை ஜோதிகா, சூர்யா இணைந்து தயாரிக்கின்றனர்.

இதன் அறிவிப்பை சூர்யாவே வெளியிட்டுள்ளார். ‛‛எனது வழிகாட்டியான அண்ணன் பாலா ஆக்சன் சொல்ல காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. உங்கள் வாழ்த்துக்கள் தேவை” என பதிவிட்டுள்ளார் சூர்யா.

கன்னியாகுமரியில் இன்று இப்படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷூம், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் கலை இயக்குனராக மாயாண்டியும் எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணிபுரிய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

The shooting of Suriya 41 begins with a pooja at Kanyakumari

suriya 41

UNSEEN STILL வெளியானது.; ஹிந்தியில் மட்டும் ‘பீஸ்ட்’ டைட்டில் மாற்றம்

UNSEEN STILL வெளியானது.; ஹிந்தியில் மட்டும் ‘பீஸ்ட்’ டைட்டில் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‛பீஸ்ட்’ படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின்கிங்ஸ்லி, அபர்ணாதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இது குறித்த அறிவிப்பு போஸ்டர்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பீஸ்ட் என்றே இருந்தது.

ஆனால் ஹிந்தியில் மட்டும் ‘ரா’ என்ற டைட்டில் உள்ளது.

‘ரா’ என்பது இந்தியாவின் ரா உளவு அமைப்பை குறிக்கிறதா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் BEAST UNSEEN STILL ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

Do you know the title of the film Beast in Hindi?

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இணையும் விஜய் டிவி பிரபலங்கள்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இணையும் விஜய் டிவி பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு தேசிய விருதுகளை இளவயதிலேயே வென்றவர் பன்முக திறமையாளர் நடிகர் தனுஷ்.

கடந்த 2017ல் ராஜ்கிரணை கதையின் நாயகனாக மையப்படுத்தி பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தயாரித்து தனுஷே இளவயது பாண்டியாக நடித்திருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட்டடிக்கவே அடுத்த படத்தை தனுஷ் உடனே இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த பட இயக்கம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரோபோ சங்கர் கூறுகையில்.. தனுஷின் அடுத்த பட இயக்கத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதில் மற்றொரு முக்கிய கேரக்டரில் விஜய் டிவி பிரபலம் ராமர் நடிக்கவிருக்கிறாராம்.

Dhanush next film with Vijay TV stars

More Articles
Follows