ஷங்கர்-கமல் கூட்டணியில் இணைந்த அனிருத்-முத்துராஜ்

ஷங்கர்-கமல் கூட்டணியில் இணைந்த அனிருத்-முத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh and muthurajஷங்கர் இயக்கத்தில் ஏஎம் ரத்னம் தயாரித்த படம் இந்தியன்.

கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.

இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் பிரபல ஆர்ட் டைரக்டரான முத்துராஜ் அவர்களும் இதில் இணைந்துள்ளாராம்.

இவர் வேலைக்காரன் படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபின் வில்லியம்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் ஜுமாஞ்சி; டிசம்பர் 29ல் ரிலீஸ்

ராபின் வில்லியம்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் ஜுமாஞ்சி; டிசம்பர் 29ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jumanji Welcome to the Jungle release on 29th December 2017Joe Johnston-இன் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் ஒரு புதிய புரட்சியையே உருவாக்கிய ஜுமாஞ்சி எனும் திரைப்படம் நினைவிருக்கலாம்.

Chris Van Allsburg, 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது!

அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேட காட்சிகளின் சிருஷ்டிகர்த்தா Stephen L.Price-இன் நினைவாக அப்படம் அர்ப்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘Zathura – A Space Adventure’ வெளியானது. 1995 படத்தில் நடித்த, மறைந்த மாபெரும் நடிகர் ராபின் வில்லியம்ஸ், Alam Parrish என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

JUMANJI – Welcome to the Jungle என்கிற இப்புதிய பதிப்பு, 2014 ஆம் ஆண்டு இறந்து விட்ட ராபின் வில்லியம்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dr. Smolder Bravestone என்கிற ஒரு கதாபாத்திரத்தில் Dwayne Johnson நடித்துள்ள இப்படத்தில், Spencer Miller-ஆக Alex Wolff, Shelly Oberon ஆக Jack Black, Bethany White ஆக Madison Iseman மற்றும் Franklin Finbar வேடத்தில் Kevin Hart ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு பள்ளியில், சில மாணவர்கள், சுத்தப்பணியில் ஈடுபடும் போது, ஓர் அறையில் Jumanji என்கிற ஒரு வீடியோ கேமின் வழியாக ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர்!

அக்காட்டினில் அவர்களது அனுபவங்களும் அவற்றின் மூலமாக அவர்கள் அடையப் பெறும் படிப்பினைகளுமே படத்தின் சாரம்!

இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய JUMANJI படத்தில் ஒரு விளையாட்டும், அதை விளையாடுபவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே அடிப்படை.

அவ்விளையாட்டு, இதில் புதியதொரு அனுபவமாக ஒரு வீடியோ கேமாக (Video Game) சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டில் ஈடுபட்டவர்கள் இறுதி வரை பங்கேற்க வேண்டும்! அதுவே விளையாட்டின் விதிமுறை!

Henry Jackman இசையமைத்துள்ளார். Gyula Pados ஒளிப்பதிவு செய்துள்ளார். Sony Pictures-இன் உருவாக்கம் இப்படம்.

Jumanji Welcome to the Jungle release on 29th December 2017

jumanji

என் படத்தையும் மீம்ஸால் கலாய்ப்பது சந்தோஷம்தான்… வெங்கட்பிரபு

என் படத்தையும் மீம்ஸால் கலாய்ப்பது சந்தோஷம்தான்… வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meme Marathon 21000 memes created within 3 hoursசென்னையில் நடைபெற்ற மீம்ஸ் மாரத்தான் போட்டியில் மூன்று மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அச்சு ஊடகங்களான பத்திரிகைகளில் வெளியாகும் கேலிசித்திரங்களுக்கு என சென்ற தலைமுறையில் தனி வாசகர் வட்டமும், ரசிகர் கூட்டமும் இருந்தது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கேலிசித்திரங்கள், மீம்ஸ்கள் என பெயர்மாற்றம் பெற்று உலா வருகிறது.

இதற்கென தனிஅடையாளமும், ஏராளமான லைக்குகளும் கிடைத்து வருகிறது. இதனை ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினர் உருவாக்கி, இணையப் புரட்சியையும், சமுதாயப் புரட்சியையும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களை ஒன்றிணைத்து, சாதனையாளர்களாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் ‘த சைட் மீடியா ’ என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் லோகேஷ் என்பவருக்கு உருவானது.

இவரின் அரிய முயற்சியால் ‘மீம்ஸ் மாரத்தான் ’ என்ற பெயரில் போட்டி ஒன்று சென்னையில் நடைபெற்றது.

இது குறித்து இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரான லோகேஷ் பேசும் போது,‘ மீம்ஸ்கள் இன்றைய இளைஞர்களின் மனக்குரல். சென்னையை வெள்ளம், வர்தா புயல் என எத்தகைய இயற்கை பேரிடர் பாதிப்புகள் வந்தாலும் அல்லது ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார ரீதியிலான உரிமைக்காக போராட்டம் நடைபெற்றாலும் அது குறித்த நேர்மறையாகவும், பொறுப்புணர்வுடனும் மீம்ஸ்களை உருவாக்கி இதனை வெற்றிப் பெற செய்ததில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது.

அத்துடன் இவர்களுக்கும் உலக அளவில் சாதனையாளர்கள் என்ற அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று விரும்பியதால் உருவானது தான் ‘மீம்ஸ் மாரத்தான்’ என்ற எண்ணம்.

இதனை சாதாரணமாகத்தான் நாங்கள் நினைத்து தொடங்கினோம். இது குறித்த விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத வகையில் சுமார் ஆறாயிரம் பேர் இதற்காக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர். நாங்கள் இந்த போட்டிக்காக சில நிபந்தனைகளையும் விதித்திருந்தோம்.

அதையும் ஏற்றுக் கொண்டு, கிட்டத்தட்ட 4,300 பேர் இந்த சாதனை மாரத்தானில் பங்கேற்றார்கள். இதில் 2,500 பேர் முழுமையாக மூன்று மணி நேரமும் மீம்ஸ்களை கற்பனை வளத்துடன் தயாரித்து அளித்துக்கொண்டேயிருந்தார்கள்.

இவர்களின் அயராத உழைப்பால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக 21,619 மீம்ஸ்களை உருவாக்கி ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த சாதனையாளர்கள் அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.’ என்றார்.

இந்த மீம்ஸ் மாரத்தான் போட்டித் தொடர்பாக நடைபெற்ற விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய சாதனை பத்திரத்தை, இதனை முன்னின்று நடத்திய ‘த சைட் மீடியா ’நிறுவனத்தாரிடம் வழங்கினார்.

இவ்விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபுடன் பார்ட்டி படக்குழுவைச் சேர்ந்த நடிகர் கயல் சந்திரன், நடிகை சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும், சென்னை டூ சிங்கப்பூர் படக்குழுவினருடன் அதன் தயாரிப்பாளரும் இசைமைப்பாளருமான ஜிப்ரான், நடிகர் ஆர் ஜே பாலாஜி, மீம்ஸ் கிரியேட்டர்களாக புகழ் பெற்ற கோபு மற்றும் சுதாகர், திரைப்பட விமர்சனர் பிரசாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் வெங்கட்பிரபு பேசுகையில்…

‘மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். இதற்காக அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். அவர்களின் சிந்தனை வேகம் என்னை ஆச்சரியப்படவைக்கிறது.

என்னுடைய அடுத்தப்படத்தில் அவர்களையும் கலாய்க்க எண்ணியிருக்கிறேன். என்னுடைய பார்ட்டி பட டிரைலரை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து இங்கு திரையிட்டதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.’ என்றார்.

நடிகர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில்,‘இன்றைய தேதியில் கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் மீம்ஸ் கிரியேட்டர்களால் ஒரு சமுதாயத்தில் மாற்றம் உருவாக்க முடியும்.

அதே சமயத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தனி மனித தாக்குதலை விடுத்து, பொதுவான விசயங்களில் தங்களின் எண்ணத்தை கற்பனையுடன் இணைத்து ஆரோக்கியமான மீம்ஸ்களை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

விழாவில் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான விவேக் அவர்கள் மீம்ஸ் மாரத்தானில் நிகழ்த்தப்பட்ட சாதனை குறித்த அறிவிப்பை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டார்.

Meme Marathon 21000 memes created within 3 hours

meme marathon

இரும்புத்திரை இயக்குனருடன் இணையும் உதயநிதி- ஷ்ரத்தாஸ்ரீநாத்

இரும்புத்திரை இயக்குனருடன் இணையும் உதயநிதி- ஷ்ரத்தாஸ்ரீநாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanithi romance with Shraddha Srinath in Mithran directionவிஷால், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கியுள்ளவர் மித்ரன். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ல் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து தன் பட நாயகனை முடிவு செய்துவிட்டார் மித்ரன்.

உதயநிதி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் நாயகியாக ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறார்.

ப்ரியதர்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிமிர்’ படத்தை முடித்துவிட்டு சீனு ராமசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

இப்படத்தை முடித்துவிட்டு மித்ரன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பார் என கூறப்படுகிறது.

Udhayanithi romance with Shraddha Srinath in Mithran direction

தவறுகளை ஒப்புக்கொண்டு பதவி விலகுங்கள் விஷால்… : சுரேஷ் காமாட்சி

தவறுகளை ஒப்புக்கொண்டு பதவி விலகுங்கள் விஷால்… : சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal must resign his president post from Producer Council says Suresh Kamatchiதயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் பதவி விலக வேண்டும என தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

அன்பு பத்திரிகையாளர்களுக்கு வணக்கம்!!

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விதிமுறை மீறல்களைப் பற்றி விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன். இது எனது விளக்கம் அல்ல. சங்க பொதுக்குழுவை முன்னின்று நடத்தித் தர நியமிக்கப்பட்ட நீதிபதி அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை..

பொதுக்குழு அன்று சரியான நேரத்தில் நிர்வாகிகள் வரவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது நிர்வாகிகள் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து அவமானம் நேரும் வகையில் நடந்துள்ளனர்.

சங்கத்தின் ஆண்டு வரவு செலவை விஷால் தரப்பினர் தாக்கல் செய்ததாக சொல்லி வருவது தவறு. அவ்வாறு அவர்கள் தாக்கல் செய்யவில்லை.

அதைக் கேட்ட ஒருதரப்பினருக்கும் இன்னொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் கருத்துமோதல் ஏற்பட்டது. இருதரப்பினருமே இதில் சரிசமமாக ஈடுபட்டனர்.

நிறைவாக, தேசியகீதம் பாடுவதை நீதிபதியாகிய என்னிடம் கூட முறைப்படி அனுமதி பெறாமல் தன்னிஷ்டமாக கூட்டத்தை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டனர் நிர்வாகிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி அவர்கள்.

அதன் நகலை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதை கிரகித்துக்கொண்டு விசால் பரப்பிவரும் பொய்செய்தியை தவிர்த்து அவரது உண்மை முகத்தை வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அன்று கணக்கு கேட்ட அத்தனை பேர் மீதும் ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் விசால்.

கணக்கு கேட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் முந்நூறு பேரை நீக்கியவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர்களை மிரட்டும் வண்ணம் நடந்துகொள்கிறார்.

உறுப்பினர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாத நிர்வாகம் அவர்கள் மீது நீக்கம் என்ற அராஜக ஆயுதத்தை வீசுகிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கப்போகும் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே விசால் தனது தரப்பு தவறுகளை முதலில் ஒப்புக்கொண்டு பதவி விலகுவதே சரியானதாக இருக்கக்கூடும்.

-சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்
வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்

Vishal must resign his president post from Producer Council says Suresh Kamatchi

ஒரு மனிதனால் இவ்வளவு முடியுமா?… மித்ரனை வியக்கவைத்த விஷால்

ஒரு மனிதனால் இவ்வளவு முடியுமா?… மித்ரனை வியக்கவைத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mithran talks about Vishal hardwork and Irumbu Thirai movieபுதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ள படம் ‘இரும்புத்திரை’.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். யுவன் இசையமைத்து வரும் இப்படம் 2018 ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘இரும்புத்திரை’ குறித்து இயக்குநர் மித்ரன் கூறியிருப்பதாவது:

‘இரும்புத்திரை’ கதையை முதலில் விஷாலிடம் சொல்லும் போது, கதை பிடித்தால் வேறு யாரையாவது வைத்து தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கேட்டார். கதையைக் கூறி முடித்தவுடன் நானே நடிக்கிறேன். ஆனால் வில்லனாக நடிக்கிறேன் என்றார்.

எனவே விஷாலுக்காக நாயகன் கதாபாத்திரத்தை ராணுவ வீரராக மாற்றினேன்.

சமூக வலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மர்மங்களைப் பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும் இப்படத்தில் தெரிவித்துள்ளேன்.

இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றிப் பேசும் படமாக இருக்கும்.

படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதைப் பற்றி இப்போது கூற முடியாது.

விஷால் சாரிடம் பிடித்தது அவருடைய பன்முகத் திறமை.

ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக்கொண்டிருப்பார் பின்பு நடிகர் சங்க வேலை, தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து, செக் கையெழுத்திடுதல் என ஒரு மனிதனால் இத்தனை வேலைகளைச் செய்ய முடியுமா என்று வியக்க வைப்பார்.” இவ்வாறு மித்ரன் தெரிவித்திருக்கிறார்.

Mithran talks about Vishal hardwork and Irumbu Thirai movie

More Articles
Follows