கமலுக்கு முதல்வர் பதவி கொடுத்து பாருங்க… – அல்போன்ஸ் புத்திரன்

கமலுக்கு முதல்வர் பதவி கொடுத்து பாருங்க… – அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Kamal became CM of tamilnadu he will do all good things says Alphonse Puthrenஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி நல்லது. மறுபக்கம் ஜிஎஸ்டி நல்லதில்லை. என பல விவாதங்கள் நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது ஒரே நாடு, ஒரே வரி என்று சொல்லப்பட்டாலும், தமிழ் சினிமாவுக்கு என தனியாக 30% வரியை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு.

இதனால் இந்த வரி விதிப்பினை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து ‘பிரேமம்’ பட இயக்குனர் புகழ் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஓர் பதிவினை பதிவிட்டுள்ளார்.

‘வாய்ப்பிருந்தால் ‘முதல்வன்’ படத்தில் போல் கமல் அவர்களை தமிழகத்தின் ஒரு நாள் முதல்வராக ஆக்கலாம்.

அவரது தொலைநோக்கு பார்வையால் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்கும். இது என்னுடைய விருப்பம். இதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

If Kamal became CM of tamilnadu he will do all good things says Alphonse Puthren

alphonse puthiran

சினிமாவ காப்பாத்துங்க ரஜினி; உங்க வாய்ஸ்க்கு மதிப்பிருக்கு! – சேரன்

சினிமாவ காப்பாத்துங்க ரஜினி; உங்க வாய்ஸ்க்கு மதிப்பிருக்கு! – சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth cheranதமிழகத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் நேற்றுமுதல் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழக அரசு விதித்துள்ள வரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கமல், சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நடிகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரனும் தன் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ரஜினி சார் நீங்க குரல் கொடுங்க ப்ளிஸ். நம்ம சினிமாவ காப்பாத்துங்க. உங்க வாய்ஸ் இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என சேரன் பதிவிட்டுள்ளார்.

Rajini should give voice to save tamil cinema industry says Cheran

Cheran Pandian‏ @cherandreams
#Rajinikanth sir pls must raise your voice to reduce GST and 30% tax by TNgovt.. It’s time to save our industry your voice make some value

மேலும் அவர் பதிவிட்டுள்ள பதிவுகள் இதோ…

தமிழகஅரசு தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் திருட்டு dvd கடைகளை எல்லாம் தடைசெய்து எங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு கொடுத்தால் வரிவிதிப்பது நியாயம்.

இந்தியஅரசு onlineல் திருட்டுத்தனமாக படம்வெளியிடும் websiteகள் அனைத்தையும் தடைசெய்து நிரந்தரமாக முடக்கினால்சினிமா வாழவழி செய்தால் வரிகட்டலாம்

மஞ்சு வாரியரின் 2வது தமிழ் படம்; அறிவழகன் இயக்குகிறார்

மஞ்சு வாரியரின் 2வது தமிழ் படம்; அறிவழகன் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

??????????????????????????????????????????????????????????????????????????????விஜய் நடித்த திருமலை, ஆதி மற்றும் தனுஷ் நடித்த சுள்ளான் படங்களை இயக்கியவர் ரமணா.

இவர் இயக்கும் புதிய படத்தில் அர்விந்த் சாமி மற்றும் மஞ்சு வாரியார் ஜோடியாக நடிக்கின்றனர்.

இதன் மூலம் மலையாளத்தில் பிரபலமான மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

இதனையடுத்து, ஈரம், குற்றம் 23 படங்களின் இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ள ஒரு படத்தில் மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகவுள்ளது.

Manju Warrier going to work with Director Arivazhagan for tamil movie

ஒரு ஷோவுக்கு டிவி தொகுப்பாளர்கள் எவ்வளவு வாங்குறாங்க.?

ஒரு ஷோவுக்கு டிவி தொகுப்பாளர்கள் எவ்வளவு வாங்குறாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Your favorite TV anchors salary detailsசினிமா அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் ஊடமாக டிவியும் வளர்ந்துவிட்டது.

செய்திகள், ரியால்ட்டி ஷோக்கள், சீரியல்கள் என பல வகையான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி ரசிகர்களை வீட்டுக்குள்ளே கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.

மேலும் இதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் அதிகளவில் உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியை சார்ந்த தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவும் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல்கள் வந்துள்ளன.

இதோ அந்த தகவல்கள்…

  • கோபிநாத் – ரூ 5 லட்சம்
  • டிடி – ரூ 3.5 லட்சம்
  • ப்ரியங்கா – ரூ 1 லட்சம்
  • பாவனா – ரூ 1 லட்சம்
  • மா.கா.பா.ஆனந்த் – 2 லட்சம்
  • ஜெகன் – ரூ 2 லட்சம்
  • ஜாக்குலீன் – ரூ 1 லட்சம்.

Your favorite TV anchors salary details

ரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.?

ரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith kasthuri shaliniசினிமாவில் சான்ஸ் இல்லையென்றாலும், தன்னை பரபரப்பாக பேச வைத்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் சமூக சார்ந்த விஷயங்களையும், அரசியல் தலைவர்கள் பற்றிய தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் ரஜினியை கடுமையாக சாடியிருந்தார். ஆனால் தன் பிறந்தநாளில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் விவேகம் சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்திருக்கும் அஜித் மற்றும் குடும்பத்தாரை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஆனால் அந்த படங்கள் மட்டும் வெளியாகியுள்ளது.

Kasthuri meet actor Ajith after Rajinikanth

தமிழக அரசை எதிர்த்து கமல்ஹாசன் போராட்டம்

தமிழக அரசை எதிர்த்து கமல்ஹாசன் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal hassan body weightகடந்த ஜூலை1ஆம் தேதி இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஜம்மு காஷ்மீரில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி விரியுடன் தமிழக அரசின் 30% வரியும் இணைந்துள்ளதால், இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையற்று மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில், “நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வரி விதிப்பினை எதிர்த்து சினிமா துறைக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளனர்.

ஆனால் தமிழக அரசு மட்டும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலை நீடித்தால் சினிமா முற்றிலுமாக அழிந்துவிடும்.

தற்போது சினிமா துறையின் அனைத்து பிரிவுகளும் இதனை எதிர்த்து கிளம்பியுள்ளன.

எனவே நானும் தொழில் துறை சார்பாக நான் இந்த வரி விதிப்பினை எதிர்த்து போராடவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

KamalHassan Slams Tamilnadu Government Local tax on Cinema

More Articles
Follows