விஜய்யை பார்க்க வந்துட்டு அவரது மகனுக்கு கதை சொன்ன பிரபல டைரக்டர்

விஜய்யை பார்க்க வந்துட்டு அவரது மகனுக்கு கதை சொன்ன பிரபல டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் பிரபல டிவி சேனலுக்கு தன் ‘பீஸ்ட்’ படம் தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார் விஜய்.

அப்போது தன் மகன் சஞ்சய்யின் எதிர்காலம் குறித்தும் பேசினார்.

‘சஞ்சய் நடிக்க போறாரா இல்ல கேமரா பின்னாடி இருந்து செயல்பட போறாருனு எனக்கு தெரியாது.

நான் எதையும் போர்ஸ் பண்ணல.

ஆனா நடிக்க நிறைய சான்ஸ் வருது. நடிக்க கேக்குறாங்க.

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

இப்போ வேணாம். ரெண்டு மூனு வருஷம் ஆகட்டும்னு சொல்லிட்டு இருக்காரு சஞ்சய்’.

“கொஞ்ச நாள் முன்னாடி பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் என்ன பாக்க வரேன்னு சொன்னாரு.

எனக்குதான் கதை சொல்ல வர்றாருனு நெனச்சேன். ஆனா சஞ்சய்க்கு கதை சொல்லனும்னு கேட்குறாரு.

ஆனால் இப்போதைக்கு வேணாம்னு சஞ்சய் சொல்லிட்டாரு’ என தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

Did you know Vijay’s son Jason Sanjay was supposed to debut in Alphonse Puthren’s film?

ஆகஸ்ட் டார்கெட்.. தீபாவளி ரிலீஸ்..; விஜய் 66 படக்குழுவின் பக்கா ப்ளான்

ஆகஸ்ட் டார்கெட்.. தீபாவளி ரிலீஸ்..; விஜய் 66 படக்குழுவின் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் நாளை ஏப்ரல் 13ல் ரிலீசாகிறது. உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியாகிறது

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிளார்.

சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி விஜய் 66 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

இதன் படப்பிடிப்பு சென்னையில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. விரைவில் இங்கு சூட்டிங் நடைபெறவுள்ளது.

இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் / செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் வம்சி.

மேலும் இந்தாண்டு 2022 தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

Thalapathy 66 release plan is here

AK61 பட சூட்டிங்கை தொடங்கினார் வினோத்.; அஜித்தின் ஹைதராபாத் ராசி.?

AK61 பட சூட்டிங்கை தொடங்கினார் வினோத்.; அஜித்தின் ஹைதராபாத் ராசி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61வது பட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று ஏப்ரல் 11 முதல் ஆரம்பமாகியுள்ளது.

போனி கபூர் தயாரிக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் அஜித்துடன் முக்கிய வேடத்தில் கவின் நடிக்கிறார். இவர்களுக்கு ஆசிரியர் & மாணவர் வேடம் என கூறப்படுகிறது.

ஜிப்ரான் இசையமைப்பில் படம் உருவாகின்றது.

‘வலிமை’-யில் மாஸ் காட்டினாலும் மாஸ்டரை மாற்றியது AK61 படக்குழு

ஐதராபாத்திலுள்ள படப்பிடிப்புத் தளத்தில் சென்னை, அண்ணா சாலை போன்ற பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அஜித்தின் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ராசியோ தெரியலையே..??

Actor Ajith Kumar to start shooting for AK61 in Hyderabad

நீ என்ன வேணாலும் செய்..; லோகேஷுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

நீ என்ன வேணாலும் செய்..; லோகேஷுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛விக்ரம்’.

கமல்ஹாசனே தன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். இது கமல் நடிப்பில் உருவாகும் 232வது படமாகும்.

அனிருத்தின் அதிரடி ஆக்ஷன் இசையுடன் ் இப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன.

ஜூன் 3ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்..

இந்த நிலையில் சென்னையில் நடந்த சிஐஐ மாநாட்டில் பங்கேற்றார் லோகேஷ்.

அப்போது விக்ரம் படம் தொடர்பாக அவர் கூறியதாவது…

,”விக்ரம் படத்தில் எந்த இடத்திலும் கமல் தலையிடவில்லை. இது உன் படம். நீ நினைத்தப்படி என்ன வேணாலும் செய் என முழு சுதந்திரம் தந்தார்.

நான் கூட யோசனை கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்கும் அவர் இடம் அளிக்கவில்லை.’ என்றார் லோகேஷ்.

Kamal Haasan gives full freedom to lokesh

‘தில் ஹே கிரே’… சைபர் க்ரைம் விழிப்புணர்வில் சுசி கணேசன்

‘தில் ஹே கிரே’… சைபர் க்ரைம் விழிப்புணர்வில் சுசி கணேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக க்ரைம் தொடர்பான படங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

அந்த ஜானரில் வெளியாகும் மற்றொரு படத்தை பார்க்க பார்வையாளர்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர்.

அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘தில் ஹே கிரே’. இந்தப்படத்தில் வினீத் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எம்..ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சுசி கணேசன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் கதையை சுசி கணேசனுடன் தாரிக் முகமது மற்றும் நவின் பிரகாஷ் ஆகியோரும் இணைந்து எழுதியுள்ளனர்..

சோஷியல் மீடியாவில் அப்பாவி பெண்களை குறிவைத்து சிக்க வைக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியை (அக்ஷய்) தேடி கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் (வினீத்) பயணமாக இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது..

எப்படி தனக்குள்ளே இரண்டு பக்கங்களை வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் சில குறிப்பிட்ட சூழல்களுக்கு ஏற்றபடி அதை வெளிப்படுத்துவதையும் சிலர் காலத்தின் சோதனையை எதிர்கொண்டாலும், ஒருசிலர் அப்படி இல்லை என்பதையும் வைத்தே இந்தப்படத்தின் தலைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கதைக்களத்தின் மூலம், எதுவுமே கருப்பு வெள்ளை என இல்லை என்பதையும், நேரம் வரும்போது, சிறந்த மனிதர்கள் கூட எப்படி மனம் மாறக்கூடும் என்பதையும் தொட்டு செல்கிறது இந்தப்படத்தின் கதை..

இந்தப்படம் பற்றிய கூடுதல் விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், இப்போது சொல்லப்பட்ட இந்த முன்னுரையே .படத்திற்கு மிக பொருத்தமானதாக இருக்கும்.

சூரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எம்.ரமேஷ் ரெட்டி கூறும்போது…

, ”என்னுடைய மற்ற அனைத்து பணிகளிலும் நான் இணைந்து பணியாற்றுவது போலவே இந்த கூட்டணியும் அருமையான ஒன்றாக இருந்தது.

தில் ஹே கிரே படத்தின் உண்மையான ஹீரோ என்றால் அது கதை தான். வலுவான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயத்தைக் கொண்ட திரைப்படங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக சுசி மற்றும் குழுவிற்கு நன்றி” என கூறியுள்ளார்.

இயக்குநர் சுசி கணேசன் கூறும்போது,…

”இந்த படத்தின் கதையும் அதன் மொத்த பின்னணியும் இன்றைய காலகட்டத்திற்கான இன்றைய வயதினருக்கான முக்கியமான ஒன்று.. ஆன்லைனில் இன்று பல நிகழ்வுகள் நடக்கும் இந்த நேரத்தில், இந்தப்படம் வெறுமனே ஒரு கதையை மட்டும் சொல்லிவிட்டு போகாமல், தற்போது மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாகவும் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்த கூடிய சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் ஒரு கருவியாகவும் இருக்கும், எம்.ரமேஷ் ரெட்டி மற்றும் அனைவருடனும் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

இந்தப்படம் ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது

Director Susi Ganesan speech at cyber crime awareness event

பஹத் பாசில் & கவுதம் மேனன் மோதல்.; ‘நிலை மறந்தவன்’ யார்.?

பஹத் பாசில் & கவுதம் மேனன் மோதல்.; ‘நிலை மறந்தவன்’ யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல்.. படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஏப்-16ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு ; தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்

இயக்கம் ; அன்வர் ரஷீத்

இசை ; ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்

ஒளிப்பதிவு ; அமல் நீரத்

படத்தொகுப்பு ; பிரவீன் பிரபாகர்

வசனம் ; சர்வம் கிருஷ்ணார்ப்பணம் (தமிழாக்கம்)

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

FahadhFaasil – Gautham menon’s Trance is dubbed in Tamil as Nilai Marandhavan

More Articles
Follows