I MISS YOU.. ஒளிப்பதிவாளராக மாறிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்

I MISS YOU.. ஒளிப்பதிவாளராக மாறிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். மலையாள மற்றும் தமிழில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.

அதன் பின்னர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த ‘கொடி’ படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் “I Miss You” என்ற குறும்படம் மூலம் ஒளிப்பதிவாளராக (DOP) மாறியிருக்கிறார் அனுபமா.

இந்த குறும்படத்தை சங்கல்ப் கோரா இயக்கியுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்து வளரும் இலஞ்சனுக்கும் அவனது பெற்றோக்குமான உறவை பற்றிய கதை இந்த படம்.

Actress Anupama Parameswaran turned Cinematographer

தென் ஆப்ரிக்காவில் தென்னிந்திய இசையமைக்கும் கமல்.; வைரலாகும் வீடியோ

தென் ஆப்ரிக்காவில் தென்னிந்திய இசையமைக்கும் கமல்.; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கமல் மற்றும் ‘இந்தியன் 2’ குழுவினர் தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளனர்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் 12 நாட்கள் தீவிர படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு கமல்ஹாசன் ஒரு நாள் இடைவெளி எடுத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கமல்ஹாசன் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்று மற்றும் புதிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் கமல் ஒரு கிண்ணம் போன்ற ஒரு பீங்கானில் ஒரு சிறிய இசையை உருவாக்கினார்.

https://www.youtube.com/shorts/41hO79EY08w

kamal bowl composed a small piece of music it

தங்கலானுடன் உலகநாயகன் பட அப்டேட் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்

தங்கலானுடன் உலகநாயகன் பட அப்டேட் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம் வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

கமல்ஹாசன் இயக்குனர் பா ரஞ்சித்துடன் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக தெரிவித்தார்,

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் ரஞ்சித், கமல்ஹாசனுடன் நடிக்கும் புதிய படத்திற்கான கதையை தயார் செய்துள்ளதாகவும், விக்ரம் நடிக்கும் ‘தங்கலன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் ஸ்கிரிப்ட் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

Pa Ranjith shares an update on his film with Kamal Haasan

ஒவ்வொரு ப்ரேமையும் மீட்டெடுக்கிறது.. காத்திருக்க முடியாது.; ஆனந்தத்தில் அருண் விஜய் பதிவு

ஒவ்வொரு ப்ரேமையும் மீட்டெடுக்கிறது.. காத்திருக்க முடியாது.; ஆனந்தத்தில் அருண் விஜய் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’.

இப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அருண் விஜய் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார்.

ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசும் வீடியோவைப் பகிர்ந்த நடிகரின் ட்வீட், “ஒவ்வொரு பிரேமையும் மீட்டெடுக்கிறது!! மிஷன் அத்தியாயம் 1 மூடப்பட்டது. உற்சாகம்!! காத்திருக்க முடியாது!!” என கூறினார்.

மேலும், இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Arun Vijay completes dubbing for ‘Mission 1’

மாணவிகளுக்காக ‘அயலி’ ஸ்பெஷல் ஷோ.; பெருமையான படைப்பு என அமைச்சர் பாராட்டு

மாணவிகளுக்காக ‘அயலி’ ஸ்பெஷல் ஷோ.; பெருமையான படைப்பு என அமைச்சர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி இணையத் தொடர் பெண்ணடிமைத்தனத்தை அழுத்தமாக பேசி, பெண் கல்வி மீது புதிய ஒளி பாய்ச்சியது. திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் பெரும் பாரட்டுக்களை குவித்தது.

இத்தொடரை பள்ளிகளில் திரையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அழுத்தமாக கோரிக்கை வைத்தனர்.

தற்போது அந்த வகையில் முதல் முன்னெடுப்பாக ZEE5 தளம் மூலம், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக அயலி இணையதொடர் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

இந்த திரையிடலில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பை சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.

இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ், முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடி வாழ்த்து தெரிவித்தனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் இவ்விழாவினில் ZEE5 தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி திரு. சிஜு பிரபாகரன், ZEE5 நிறுவன தலைமை அதிகாரி கௌசிக் நரசிம்மன், அயலி தொடரின் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி இயக்குநர் முத்துக்குமார், நடிகை அபி நட்சத்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது…

அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு முதலில் இந்த இணையத்தொடருக்காக ZEE5 நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இது ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல, நாம் பெண்ணடிமைத்தனத்தில் எந்த இடத்திலிருந்து இப்போதைய நிலைக்கு வந்துள்ளோம் என்பதற்கு சான்றாக இந்த தொடர் உருவாகியுள்ளது.

கல்வி என்பது ஆண் பெண் என பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவுத்திட்டம் முதலாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாம் பெரியார் அண்ணா கலைஞர் காலங்களில் பெண்ணுரிமைக்காக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இதனை மிக அழகாக இந்த தொடர் சித்தரித்துள்ளது இதனை உருவாக்கிய குழுவிற்கும் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

TN Minister Appreciated Ayali special screening for girl students

புத்தகங்களை ஆட்டோகிராஃப் போட்டு இலவசமாக வழங்கும் நடிகர் சரத்குமார்

புத்தகங்களை ஆட்டோகிராஃப் போட்டு இலவசமாக வழங்கும் நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய வீட்டு நூலகத்திலிருந்து புத்தகங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார்.

தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்…

“நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன்.

சரத்குமார்

இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்று சொன்னால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் படித்திருக்கிறேன், அந்த பண்பை பழகிக்கொண்டும் இருக்கிறேன்.

என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள்.

இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன்.

நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்குவோருக்கு புத்தகத்தில் நான் கையெழுத்திட்டு தந்து வருகிறேன்.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் கைபேசி, அமேசான் கிண்டில், ஐபேட், மடிக்கணினி ஆகியவைகளால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. இதனால் புத்தக வாசிப்பை மேலும் முன்னெடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

இதே போல பிறரிடம் புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று சரத்குமார் கூறினார்.

இந்த முன்முயற்சியின் பலனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சரத்குமார்

Actor Sarathkumar autographs books and gives them away for free

More Articles
Follows