ரஜினியுடன் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.: திண்டுக்கல் ஐ.லியோனி

ரஜினியுடன் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.: திண்டுக்கல் ஐ.லியோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I refuse to act with Rajini says Dindigul i Leoniமேடை பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்திற்கு திமுக செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் பா.விஜய், யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

லியானியின் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் புத்தகத்தை வெளியிட இயக்குனர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார்.

அதன்பின் லியோனி பேசினார். அவர் பேசியதாவது…

‘நான் நடித்த ஒரே திரைப்படம் ‘கங்கா கௌரி’தான். இதில் அருண் விஜய் மற்றும் வடிவேலுக்கு அப்பாவாக நடித்தேன்.

அதன்பின்னர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடிக்க கேட்டார்கள். நான்தான் மறுத்து விட்டேன். அதன்பின்னர் ராஜா நடித்தார்.” என்று பேசினார்.

I refuse to act with Rajini says Dindigul i Leoni

சிவகார்த்திகேயன்-ராஜேஷ் கூட்டணியில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்

சிவகார்த்திகேயன்-ராஜேஷ் கூட்டணியில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and rajeshசீமராஜா படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் இந்தாண்டு 2018 விநாயக சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ரவிகுமார் இயக்கத்தில் ரகுல் பிரத்தி சிங்குடன் டூயட் பாடவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மேலும் ஷங்கரின் 2.0 படத்தில் பணியாற்றிய நிறைய டெக்னீசியன்கள் இதில் பணியாற்றவுள்ளனர்.

இதனையடுத்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் முக்கிய ரோலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சமீபத்திய நாயகி சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சினிமா ஸ்டிரைக் ஒரு பக்கம்; மறுபக்கம் கமலுடன் இணையும் நயன்தாரா

சினிமா ஸ்டிரைக் ஒரு பக்கம்; மறுபக்கம் கமலுடன் இணையும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Nayantharaதமிழ் திரையுலகம் இதுவரை எத்தனையோ போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை சந்தித்துள்ளது.

ஆனால் தற்போது உள்ளது போல் ஒரு மாதத்திற்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்தது இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

ஒரு மாத்த்தை நெருங்கும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மற்ற மொழி படங்களை தியேட்டரில் திரையிட்டு வருகின்றனர்.

மேலும் பழைய ஹிட்டான படங்களையும் திரையிடுகின்றனர்.

35 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான கமலின் காக்கி சட்டை படத்தை வருகிற மார்ச் 30ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

இந்நிலையில் மம்மூட்டி-நயன்தாரா நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான “புதிய நியமம்” என்ற படத்தையும் அதே நாளில் வெளியிடயிருக்கிறார்களாம்.

இப்படத்திற்கு தமிழில் வாசுகி என பெயரிட்டுள்ளனர்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை நயன்தாரா எப்படி பழிக்கு பழி தீர்க்கிறார் என்பதே படத்தின் சிறப்பம்சமாகும்.

சாஜன் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

பாகுபலியின் அதிகபட்ச சந்தோஷம் பாகிஸ்தான்; ராஜமௌலி ட்வீட்

பாகுபலியின் அதிகபட்ச சந்தோஷம் பாகிஸ்தான்; ராஜமௌலி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajamouliபாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

உலக சினிமாவையே நம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை இதன் டைரக்டர் ராஜமௌலியை சேரும்.

பாகுபலி 2 தற்போது சீனாவிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படம் தொடர்பான புரோமோசன் மற்றும் பணிகளுக்காக பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் ராஜமௌலி.

இந்நிலையில் பாகுபலி படம் பாகிஸ்தான் சினிமா விழாவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்காக இயக்குனரை அங்கு அழைத்துள்ளார்கள்.

இதனால், ராஜமௌலி மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் மற்ற நாடுகளை காட்டிலும் பாகிஸ்தான் செல்வது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

Baahubali has given me opportunities to travel to a number of countries… The most exciting of them all is now, Pakistan. Thank you Pakistan international film festival, Karachi for the invite.

— rajamouli ss (@ssrajamouli) March 28, 2018

சிவகார்த்திகேயன் பட வில்லனுக்காக தயாரிப்பாளராகும் நஸ்ரியா

சிவகார்த்திகேயன் பட வில்லனுக்காக தயாரிப்பாளராகும் நஸ்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nazriya and fahadhமலையாள சினிமாவில் நடித்து வந்தாலும் அங்குள்ள நடிகைகளுக்கு தமிழ் சினிமா ஜொலிக்க அதிக ஆர்வம் எப்போதும் உண்டு.

ஆனால் மலையாள நடிகர்கள் அப்படியில்லை. எப்போதாவது நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடித்துவிட்டு போவார்கள்.

மோகன்லால், மம்முட்டி, கலாபவன் மணி முதல் துல்கர் சல்மான், பிரித்வி ராஜ் வரை அப்படிதான்.

அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பகத் பாசில்.

இவர் நடிகை நஸ்ரியா நஸீமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதுப்படத்தை தயாரித்து வருகிறார் நஸ்ரியா.

இதன் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கௌதம் மேனனுடன் மோதல்; கார்த்திக் நரேனுக்கு நரகாசூரன் தந்த நரக வேதனை

கௌதம் மேனனுடன் மோதல்; கார்த்திக் நரேனுக்கு நரகாசூரன் தந்த நரக வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham menon and karthik narenரகுமான் நடித்த ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்.

இப்படம் அனைத்து தரப்பினைரையும் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து கௌதம் மேனன் தயாரிப்பில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா நடிக்க ‘நரகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன்.

இப்படம் வெளியாவதற்கு தாமதமாகி வருவதால் அடுத்ததாக, ‘நாடக மேடை’ எனும் படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் நரேன்.

தற்போது கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் உள்ள மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன்.

இந்நிலையில் கவுதம் மேனன், ‘ஒரு வீடியோவை பாராட்டி பதிவு செய்திருக்கிறார். பின்னர், சில இளம் இயக்குனர்கள் படத்தை உருவாக்கி விட்டு அதைப் பற்றி புலம்பிக் கொண்டே இருகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை குறிப்பிட்டு, ‘பலர் என்னிடம் வேண்டாம் என அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பையாக்கி விட்டீர்கள்.

கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில் தயாரிப்பாளர் கவுதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் மோதிக் கொள்வதால், நரகாசூரன் படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் கோலிவுட்டில் எழுந்துள்ளது.

Karthick Naren‏Verified account @karthicknaren_M

Sometimes a misplaced trust may kill you. People should think twice before taking it for a ride. The last thing you want to see is your passion getting butchered from all the directions for a mistake you did not commit. Threshold!

Karthick Naren‏Verified account @karthicknaren_M 2h2 hours ago

Karthick Naren Retweeted Gauthamvasudevmenon

While everybody advised against it I had the pair to trust you & collaborate sir. In return we were treated like trash & made to invest on our own. I think its better to whine & confront instead of running away. Please don’t do this to any other young filmmaker sir. It hurts!

More Articles
Follows