EXCLUSIVE – நிம்மதி இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினி.; சூப்பர் ஐடியா கொடுக்கும் மக்கள்

EXCLUSIVE – நிம்மதி இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினி.; சூப்பர் ஐடியா கொடுக்கும் மக்கள்

நேற்று ஜூலை 22.. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது…

“இந்த யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

நான் நடித்த படங்களில் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான்.

எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறி விட்டனர். ஆனால் நான் இன்னும் நடிகனாகவே இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன்.

ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

இதனையடுத்து ரஜினிக்கு ஐடியா கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் சில கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ரஜினிகாந்த் நிம்மதியாக இருப்பார். அவருக்கு என்ன கவலை? இன்னும் பத்து தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பலர் கணக்கு போடும் கொண்ட சூழ்நிலையில் எனக்கு 10% கூட நிம்மதி இல்லை என்ற ரஜினிகாந்த் கூறியிருப்பதால் சிலர் அதற்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்து வருகின்றனர்.

தலைவா.. நீங்கள் ‘சிவாஜி’ படத்தில் நடித்த போது.. ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை நீங்கள் செய்து காட்டினீர்கள்..

அதுபோல நிஜத்தில் உங்கள் பெயரில் அறக்கட்டளைகள் ஏற்படுத்தலாம்.. ஏழை மாணவர்களுக்கு உயர்தர கல்வி கொடுக்கலாம்.. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுக்கலாம்..

வறட்சியான கிராமங்களை வளர்ச்சி மிக்க கிராமங்களாக மாற்றி அமைக்கலாம்… நாட்டின் உயிரான விவசாயத்திற்கு உதவி செய்யலாம்..

தரமான மருத்துவம் கிடைக்க உதவி செய்யலாம்… இதன் மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் பயனடைவார்கள்..

உங்களை வாழவைத்த… வாழ வைத்துக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம்.. தமிழகமும் வளம் பெறும். மக்கள் உங்களை மனதார வாழ்த்துவார்கள்..

நீங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் இதை செய்து காட்டினால் உங்களது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.. இதன் மூலம் உங்களுக்கு சந்தோஷம் நிம்மதி புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.

நீங்கள் சொன்ன சித்தர்களை விட பல மடங்கு நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.. ‘பாபா’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சித்தர்கள் உங்களை வாழ்த்துவது நிஜத்தில் நிறைவேறும்.”

இவ்வாறு பல சூப்பர் டிப்ஸ்களை சூப்பர் ஸ்டாருக்கு வழங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

Super idea to super ranjikanth by his fans

https://www.youtube.com/shorts/hNELMehNg-A

காணாமல் போன 10000 குழந்தைகள்.; ‘ஜோதி’ சொல்லும் அதிர்ச்சியான உண்மை தகவல்

காணாமல் போன 10000 குழந்தைகள்.; ‘ஜோதி’ சொல்லும் அதிர்ச்சியான உண்மை தகவல்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘ஜோதி’.

மிகப்பெரிய சஸ்பென்ஸ் திர்லர்ரோடு சேர்ந்து அமைந்திருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு.

இந்த ஜோதி திரைப்படத்தை “டிக் டாக்” பிரபலமான ஜி . பி முத்து அவர்கள் பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினர்களையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் படத்தில் சில இடங்களில் சஸ்பென்ஸ் இருக்கின்றது. என்றும் அது இதுதான் என்று நம் கணிக்கையில் அது இல்ல அப்படின்னு நம் கவனத்தை வேறு மாதிரி திசை திருப்புகின்றது.

இந்த படம் என்று ஜோதி படத்தின் திரைக்கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் 11 ஆயிரம் குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள். அதில் இன்றைக்கு வரைக்கும் 10800 குழந்தைகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றும் அதிர்ச்சியான ஒன்றும் தான்.

மேலும் இன்றைக்கு நம் நாட்டிற்கு இது தேவையான கதை தான் குழந்தைகளை கடத்திவிற்கும் கும்பல் இன்று அதிகமாக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த படம் நம் நாட்டுக்கு நிச்சயமாக தேவையான படம் தான் என்றும் கூறினார் ஜி பி முத்து.

படத்தைப் பார்த்த ஜி.பி. முத்துவிடம் நடிகர் வெற்றியும், நடிகை ஷீலாவும், தயாரிப்பாளர் ராஜா சேதுபதியும் கலந்துரையாடிய கலகலப்பான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tik Tok star GPMuthu In full praises mode for jothi

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவியம்மாள் மரணம்

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவியம்மாள் மரணம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜூன்.

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் இவர். தற்போது வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அம்மாள் வயது 84 உடல்நிலை சரியில்லாமல் இன்று ஜூலை 23 மதியம் 3.30 மணியளவில் பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.

பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே ஊரில் அவர்களது தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Actor Arjun’s mother Lakshmi Deviyammal passes away

என் ரசிகர்கள் சன்னியாசி ஆகிட்டாங்க.. நான் நடிகனாகவே இருக்கேன்.. நிம்மதி, சந்தோஷம் இல்ல..; ரஜினி ஓபன் டாக்

என் ரசிகர்கள் சன்னியாசி ஆகிட்டாங்க.. நான் நடிகனாகவே இருக்கேன்.. நிம்மதி, சந்தோஷம் இல்ல..; ரஜினி ஓபன் டாக்

நேற்று ஜூலை 22.. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது…

“இந்த யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

நான் நடித்த படங்களில் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான்.

இந்த இரு படங்கள் ரிலீசான பின்னர் தான் எல்லோருக்கும் இவர்கள் பற்றி தெரிய வந்தது. இதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறி விட்டனர். ஆனால் நான் இன்னும் நடிகானகவே இருக்கிறேன்.

இமயமலையில் அமைந்துள்ள குகைகள் சொர்க்கம். அங்கு கிடைக்கும் சில மூலிகைகளை சாப்பிட்டால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுபோல கங்கை நதியில் பல மூலிகைகள் கலக்கும். அதனால் அது புனிதமாக உள்ளது.

உடலை பாதுக்காக்க உணவை சரியாக எடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

மனிதர்கள் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வார்கள்.. ஆனால் குழந்தைகள் அப்படியல்ல.

என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன்.

ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

No peace, no happiness..; Rajini Open Talk

5 தேசிய விருதுகளை சூரையாடியது ‘சூரரைப் போற்று’.; அறிமுகம் முதல் குடும்பம் வரை அனைவருக்கும் சூர்யா நன்றி

5 தேசிய விருதுகளை சூரையாடியது ‘சூரரைப் போற்று’.; அறிமுகம் முதல் குடும்பம் வரை அனைவருக்கும் சூர்யா நன்றி

தேசிய அளவில் சிறந்த படமாக சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ தமிழ்ப்படம் தேர்வு செய்யப்பட்டது.

சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்துக்கு தங்கத்தாமரை விருதும், ரூ.2½ லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் சூர்யாவும் (சூரரைப் போற்று), நடிகர் அஜய் தேவ்கனும் (தனாஜி:தி அன்சங் வாரியர்) ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

விருதுக்கான வெள்ளித்தாமரையையும், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் இருவரும் பகிர்ந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகையாக ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளர் விருதை (பின்னணி இசை) ‘சூரரைப் போற்று’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் பெறுகிறார்.

சிறந்த திரைக்கதைக்கான விருதை ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் ஆகியோர் விருது பெறுகின்றனர்.

ஆக 5 விருதுகளை ‘சூரரைப் போற்று’ படம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூர்யா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வணக்கம்..

அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்..

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது.

தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..

அன்புடன்,
சூர்யா.
23.07.22

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Won 5 National Awards for ‘Soorarai Pottru’

வசனம் இல்லாமல் உடல் மொழியிலேயே சாய் பல்லவி நடிப்பார் – காளி வெங்கட்

வசனம் இல்லாமல் உடல் மொழியிலேயே சாய் பல்லவி நடிப்பார் – காளி வெங்கட்

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் ‘கார்கி’. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, திருநங்கை சுதா, காஸ்ட்யூமர் சுபா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில்

இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் பேசும்போது…

‘கார்கி’ படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் அனைவரும் ஆதரவு கொடுத்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு வைத்த முதல் புள்ளி. இடைவேளையிலேயே நேர்மறையான விமர்சனங்கள் வந்தது. இதுபோன்று மற்றொரு வெற்றி மேடையில் சந்திப்போம்.

மிர்ச்சி செந்தில் இப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு மிகப் பெரியது. ஆனால், அவருடைய பகுதியை விரைவில் வெளியிடுவோம்.

நடிகை சாய் பல்லவி பேசும்போது…

‘பத்திரிகையாளர் காட்சியை பார்த்து விட்டு படத்தை பற்றி மட்டுமல்லாமல், நடிகர்கள், வசனம், தொழில்நுட்பம் என்று அனைத்து பணிகளை பற்றியும் பாராட்டி எழுதியதற்கு மிக்க நன்றி. மக்களிடம் கொண்டு சென்ற சூர்யா சாருக்கு சிறப்பு நன்றி.

இப்படத்தை சூர்யா சார் வரைக்கும் கொண்டு சென்ற தயாரிப்பாளர் சக்தி சாருக்கு நன்றி. நான் திரையரங்கிற்கு சென்று மக்களோடு படம் பார்த்தேன். அவர்கள் பாராட்டுவதை விட உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.

காளி வெங்கட் பேசும்போது…

பெரிய படங்களுக்கு தான் இடைவேளையில் இருந்தே விமர்சனம் ஆரம்பித்து விடும். அந்த வரிசையில் கார்கி படம் இருப்பதில் மகிழ்ச்சி. தத்து பிள்ளைக்கு தாய்பால் கொடுத்தது போல, பத்திரிகையாளர்கள் இப்படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். இப்படத்தில் ஒரு வசனம் பேச கிட்டத்தட்ட 9 டேக் போனது.

ஒரு கலைஞர் தனது கதாபாத்திரத்தை எந்தளவுக்கு உள்வாங்கியிருந்தால் சாய் பல்லவி வசனம் இல்லாமல் உடல் மொழியிலேயே கூறி இருப்பார். அப்பாவை பார்க்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் அருமையாக நடித்திருப்பார். குறுகிய காலத்தில் இப்படம் அனைவரையும் சென்று சேர்ந்திருக்கிறது. எனக்கு ‘கார்கி மிகவும் முக்கியமான படம்’ என்றார்.

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பேசும்போது…

‘கார்கி ஒரு வித்தியாசமான படம் என்று நான் சொல்ல தேவையில்லை. இயக்குனர் கவுதமுக்கு இருந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். கதையை கூறியதும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். உடனே நாளைக்கே படப்பிடிப்பு வந்து விடுங்கள் என்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்பில் ஏன் கவுதம் இப்படி அநியாயம் செய்கிறீர்கள். எனக்கு முழுதாக கதையே தெரியாது.

ஆனால், இரண்டாவது நாளே எப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க முடியும் என்று கேட்டேன். நான் சொல்லி தருகிறேன் என்றார். சாய் பல்லவியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் தற்போது அழகான நடிகைகளுக்கு அப்பாவாக நடித்து வருகிறேன். முதலில் நயன்தாராவிற்கு அப்பாவாக நடித்தேன். இப்போது சாய்பல்லவிக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். காளி வெங்கட் யார் என்பது அவர் நடிப்பில் உணர்த்தி விடுவார். அவர் நடிகர் அல்ல ‘நட்சத்திரம்’ என்றார்.

திருநங்கை சுதா பேசும்போது…

இந்த நேரத்தில் இயக்குனருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு ஏன் திருநங்கையை தேர்ந்தெடுத்திருக்கிறார்? என்று யோசித்தேன்.

இப்படம் பார்த்த பிறகு எனது தோழிகள் பாராட்டினார்கள். என்னுடன் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் பேசுவார்கள். ஆனால், இப்படம் வெளியான பிறகு கேரளாவில் இருக்கும் தூரத்து உறவினர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

காளி வெங்கட் மாதிரி மனிதரை இனிமேல் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. எல்லோரும் சாப்பிட்டார்களா? என்று பார்த்துவிட்டு தான் அவர் சாப்பிடுவார். ஆகையால், தான் அவர் நாயகன் ஆகியிருக்கிறார்’ என்றார்.

மிர்ச்சி செந்தில் பேசும்போது…

தமிழ் சினிமாவை அசத்திய படம் கார்கி. திரையரங்குகளில் வெளியாகும் முன்பு இப்படத்தை பார்க்கும்படி இயக்குனர் அழைத்தார். எனக்கு மட்டும் பிரத்யேக காட்சியை காண்பித்தார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படத்தை காட்டினீர்கள்? என்று கேட்டேன். அப்போது இயக்குனர் நீங்கள் நடித்த காட்சி இப்படத்தில் துண்டாக இருக்கிறது, உங்களிடம் இப்படத்தை காட்டிவிட்டு பிறகு நீக்கி விடலாம் என்று இருக்கிறோம் என்றார்.

ஒரே ஒரு காட்சியில் நடித்த எனக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து என்னிடம் உத்தரவு கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் கூறியது போலவே நான் நடித்த காட்சி இப்படத்திற்கு தேவையில்லை என்று தோன்றியது. ஆகையால், நீங்கள் நீக்கிவிடுங்கள் என்று மனதார கூறினேன்.

‘சூரரைப் போற்று’ படத்தில் நான் டிரைலரில் மட்டும் தோன்றுவேன். இப்படத்திற்கு தற்போது 5 தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது.

அதேபோல் இப்படத்திற்கும் ‘தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது…

கார்கி படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றியை அறைகூவல் விட்டு கூறியது பத்திரிகையாளர்கள் தான். விமர்சனங்களும், பத்திரிகையாளர்களும் இப்படத்தைத் தூக்கிப் பிடித்தது தான் வெற்றிக்கு காரணம்.

இப்படத்தின் விமர்சனத்தை தனித்தனியாக வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். இப்படத்தை முதல்முதலாக பார்க்கும்போது அனைவருக்கும் என்ன உணர்வு இருந்ததோ? அதே உணர்வுதான் நான் பார்க்கும்போதும் இருந்தது.

இப்படத்தை தெருத்தெருவாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு 2டி ராஜாவிடம் சென்று இப்படத்தைப் பற்றிக் கூறினேன். சூர்யா அண்ணன் இதுபோன்ற படங்களுக்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார் என்று கூறினார். அதன்பிறகு இப்படத்தைப் பார்த்த சூர்யா சார், இந்த படத்திற்கு ஆதரவு தரவில்லையென்றால், வேறு எந்த படத்திற்கு தரப்போகிறோம் என்று கூறினார்.

மேலும், இப்படம் செலவிட்ட தொகையை மீட்டு தருமா? என்று கேட்டார். நிச்சயம் அவர்கள் செலவு செய்ததை விட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு சம்பாதித்து விடும் என்று கூறினேன். ஆகையால் சூர்யா சாரிடம் பேசி அவருடைய 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து வெளியிட்டோம்.

சூரரைப் போற்று 5 தேசிய விருதுகளை சூறையாடி வந்துருக்கிறது. இப்படம் ஊரடங்கு சமயத்தில் ஓடிடி-யில் வெளியாகியது. அப்போது சூர்யா சார் என் நிறுவனத்தை அவர்கள் வெளியில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், என்னுடைய லோகோவை போட்டு சக்தி பிலிம் ஃபேக்டரி இப்படத்தை விநியோகிக்கிறது என்று வெளியிட்டார்கள். நான் சூர்யா சாருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.

Kaali Venkat praises Sai Pallavi at Gargi event

More Articles
Follows