அப்போ மிஸ் செய்த நயன்தாராவை இப்போ பிடிச்சிட்டாரு கார்த்தி

kaashmora stillsகோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள காஷ்மோரா படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் கார்த்தி முதன்முறையாக 3 வேடங்களில் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ட்ரீம் வாரியர் நிறுவனம் ரூ. 70 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கார்த்தி பேசியதாவது….

“படத்தின் பிரம்மாண்ட அரங்குகள் என்னை அதிசயிக்க வைத்து விட்டது.

சரித்திர கால கதைகளை படமாக்குவது மிகவும் சவாலானது. இந்த கலை பொருட்களை உருவாக்கும் கலைஞர்கள் இப்போது இல்லை.

அவர்களை தேடி அலைவதே பெரும் வேலை.

பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் அளவுக்கு வசதியில்லை.

ஆனாலும் அதற்கான முயற்சியை, ஒட்டு மொத்த உழைப்பை இதில் கொட்டியிருக்கிறோம்.

பையா படத்தில் நயன்தாராவுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போதுதான் காஷ்மோராவில் அவருடன் நடித்துள்ளேன்” என்றார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப்…
...Read More
சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே…
...Read More
நிவின் பாலி நடித்துள்ள ‘காயம்குளம் கொச்சுண்ணி’…
...Read More
பிரபுதேவா மற்றும் லட்சுமி மேனன் இணைந்து…
...Read More

Latest Post